முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐடிபிஐ வங்கிக்கு ஐநூற்றி எட்டுக் கோடிக்கு மேல் கட்டும்படி ஸ்பிக் ஏ.சி.முத்தையாவுக்கு பொது அறிவிப்பு வெளியீடு

ரூபாய் .274 கோடி அளவுக்கு வங்கியில் மோசடி செய்ததாக பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவரும் ஸ்பிக் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரருமான காநாடுகாத்தான் ஏ.சி., முத்தையா உள்ளிட்ட. எட்டு நபர்கள் மீது சி.பி.ஐ சார்பில் வழக்குப்பதிவு செய்துள்ளதில் ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு ரூ.274 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும், கூட்டுச்சதி போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் பணம் பெற்றதாகவும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு தொடர்பாக சென்னை மற்றும் ஹைதராபாத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை செய்தனர் ரூபாய் 274 கோடி வங்கி மோசடி புகாருக்கு தொழிலதிபரான ஏ.சி முத்தையா அப்போது மறுப்பு தெரிவித்தாலும் குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் பெயரளவுக்கே தாம் தலைவராக இருந்ததாக பல்டியடித்துத் தெரிவித்துள்ளார். சிபிஐ நடத்திய சோதனையின்போது, முறையாக ஒத்துழைப்பு அளித்ததாகவும் ஏ.சி முத்தையா அப்போது கூறிய நிலையில் 274 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஐ.டி.பி.ஐ. வங்கி அளித்த புகாரின் பேரில் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா உட்பட எட்டு நபர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் செலுத்தி ஏமாற்றியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஃபர்ஸ்

முன்னால் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஏழுநாள் அரசுமுறைத் துக்கம் தலைவர்கள் இரங்கல்

டெல்லி இராணுவ மருத்துவமனையில் முன்னால் இந்தியக் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று 31.08.2020 மாலை காலமானதாக தகவலை அவர் மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பின் அவரது மறைவுக்குப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அரசு ஏழு நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுமென அறிவித்துள்ளதன்படி 31.08.20 முதல் 06.09.2020 வரை இந்தியா முழுவதும் ஏழு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் நாடு முழுவதும் அரசு கட்டடங்களில் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அரசுப்பூர்வ மரியாதை செலுத்தும் நிகழ்வு எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மூளையில் ஏற்பட்ட கட்டியின் அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி அவருக்கு மூளையில் இருந்த கட்டிக்கு அறுவை சிகிச

உயர் மருத்துவக்கல்வி மாணவர்களுக்கு மாநில அரசு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மருத்துவ உயர் படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம்:உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு.இதனை தடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது எனவும் தீர்ப்பு.மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு செல்லுமென உச்சநீதிமன்ற த் தீர்ப்பு புதிய சமூகநீதியாகும் தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு என்றும், இது தொடர்பான இந்திய மருத்துவக் குழுவின் விதிகள் செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 24 பிரிவுகளில் 1758 மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களும், 8 பிரிவுகளில் 42 பல் மருத்துவ மேற்படிப்பு இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 1800 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50 சதம் இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்திய மருத்துவக் கழக

பிரசாந்த்பூசன் உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தண்டனை அபராதம் ஒரு ரூபாய்

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் மீதான நீதித்துறை அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை "மனதார" ஏற்றுக்கொண்டதாகவும், அவருக்கு விதிக்கப்பட்ட ரூபாய் 1 அபராதம் வக்கீல் மற்றும் மூத்த சகா ராஜீவ் தவான் வழங்கியதாகவும் கூறினார். உச்சநீதிமன்றம் மற்றும் இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஆகியோருக்கு எதிரான ட்வீட் தொடர்பாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி பூஷண் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளானார். "எனது வழக்கறிஞரும் மூத்த சகாவுமான ராஜீவ் தவான் இன்று அவமதிப்பு தீர்ப்பின் பின்னர் உடனடியாக 1 மறு பங்களிப்பை வழங்கினேன், அதை நான் நன்றியுடன் ஏற்றுக்கொண்டேன்" என்று பூஷன் ட்வீட் செய்துள்ளார்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு வங்கி பிடித்தம் செய்த பணம் திருப்பி வழங்க அரசு உத்தரவு

அனைத்து வங்கிகளும், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாதெனவும், ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலித்தவர்களுக்கு உடனடியாகத் திருப்பியளிக்கும்படியும் மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. சில வங்கிகள் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு பின் சென்றால், கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதில், நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. 2019 டிசம்பர் 30 ஆம் தேதியே சுற்றறிக்கை அனுப்பியிருந்தது தற்போது அதை மேற்கோள் காட்டி, அறிவிப்பை மீறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், 2020ஜனவரி 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு வசூலித்த பணத்தை, மீண்டும் திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மாவலியை வரவேற்கும் கேரளத்தில் ஓனம் திருநாள்

"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!" என திருப்பாவை குறிப்பிட்ட வாமன அவதாரத் திருநாள் மஹாபலியின் வேண்டுகோள் ஏற்ற விழா ஓனம்.மகாபலிச் சக்கரவர்த்தி புராணங்களில் குறிப்பிடப்படும் அரக்கர்குல அரசன். மாவலி எனவும் அறியப்படும் பிரகலாதனின் பேரனும், விரோசனனின் மகனுமாவான். வாமண புராணத்தில் மாவலி எனக் குறிப்பிட்டு வரலாற்றைத் தமிழ்நெறியில் காணலாம்.மகாபலி வாமனரிடம் தான் ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு (கேரளா) மக்களை காண வருவதற்கு அனுமதி தரவேண்டும் என்று வரம் கேட்டார், மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை மாவலிக்கு அளித்தார். இப்படி மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை காண வரும் நாளே ஓணம் பண்டிகையாக கேரளா முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக ஓணம் பண்டிகை மகாபலி வதம் நடந்த இடமான திருக்காட்கரை காட்கரை

ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதி பிரிவு உபசார விழா வேண்டாமெனக் கடிதம்

உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தனக்கு பிரிவு உபசார விழாவில் பங்கேற்க மனசாட்சி இடம் அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். கொரானாவால் ஏற்பட்டுள்ள துயர நிலை காரணமாக பிரிவு உபசார விழாவில் பங்கேற்க மனசாட்சி இடம் தரவில்லையென உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்துள்ளார். செப்டம்பர் 2 ஆம் தேதி ஓய்வு பெறும் நீதிபதிக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் பிரிவு உபசார விழா அளிப்பது வழக்கம்   இதனடிப்படையில் அவருக்குப் பிரிவு உபசார விழா அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவருக்கு, நீதிபதி அருண் மிஸ்ரா எழுதிய கடிதம் வெளியானதில், நீதித்துறையின் தாயாக வழக்கறிஞர் சங்கத்தை எப்போதும் கருதி வருகிறேன். பிரிவு உபசார விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கவே செய்கிறது. ஆனால், கொரோனோவால் ஏற்பட்டுள்ள தீவிரமான சூழல்,  துயர நிலையால் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க மனசாட்சி இடமளிக்கவில்லை. எனவே பிரிவு உபசார விழாவில் பங்கேற்க இயலாமைக்கு பொறுத்தருள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு, இயல்புநிலை நிலவும்போது, வழக்கறிஞர் சங்கத்துக்கு வருகை தந்து எனது

அண்ணாமலை ஐபிஎஸ் அரசியல் களம் சகாயம் ஐ ஏ ஏஸ் அரசியலை ஏதிர்நோக்கிய பயணமாகவே பார்க்கும் நிலை

​அண்ணாமலை ஐ பி எஸ் சகாயம் ஐ ஏ எஸ் நாம் தமிழர் கட்சியில் இணையும் வாய்ப்புள்ளதாகப் பேசப்படும் நிலையில் அரசியல் களம் புகுந்த அண்ணாமலை இ கா ப அரசியல் களம்புகுந்ததுள்ளார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி அம் மாநில மக்களால் “கர்நாடக சிங்கம்” என அழைக்கப்பட்டவர். பின் அரசியலில் பணியாற்ற விரும்பிய அண்ணாமலை தனது தனது பதவியை ராஜினாமா செய்து கரூரில் விவசாயம் செய்து வந்தார். குறுகிய காலத்தில் தமிழக இந்து இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற அண்ணாமலை வருகின்ற சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலின் முதல்வர் வேட்பாளர் என்ற செய்தியும் வெளியாகி பரபரப்பான நிலையில் இரு தினங்களுக்கு முன் டெல்லியில் அண்ணாமலை Iபாஜகவில் இணைந்த பின் தமிழக அரசியலில் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளதாக பி ஜே பி பிரமுகர்களால் பார்க்கப்பட பல காரணம் உண்டு இதற்கு முன் பல்வேறு துணை நடிகர் நடிகைகள் பல கட்சியின் மூன்றாம் கட்ட தலைவர்கள் பாஜகவில் இணைந்த போது இல்லாத வரவேற்பு, அண்ணாமலை க்கு கிடைக்கக் காரணம் பல கிறிஸ்தவ மிஷினரி அமைப்புகள் சகாயம் அரசியல் களம் நோக்கி பாரவையைத் திருப்பிய

நிதியமைச்சகத்தின் ஜி எஸ் டி ஆர் 2 பி சேவைவரி கவுன்சில் துவக்கம்

நிதி அமைச்சகம் 2020 ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி.ஆர்-2 பி (GSTR-2B) துவக்கம் பொருள்கள் மற்றும் சேவை வரி கவுன்சில், மார்ச் 14, 2020 அன்று நடைபெற்ற 39வது கூட்டத்தில், ஜிஎஸ்டிஆர் -3 பி (GSTR-3B) மற்றும் ஜிஎஸ்டிஆர் -1 (GSTR-1) ஆகியவற்றைத் தாக்கல் செய்யும் தற்போதைய முறையை இணைக்கும் அணுகுமுறையையும், GSTR-2A இன் மேம்பாடுகள் மற்றும் GSTR-3B உடன் இணைத்தல் போன்ற பிற குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பின்பற்றவும் செயல்படுத்தவும் பரிந்துரைத்தது. கவுன்சில் பரிந்துரைத்த அத்தகைய ஒரு மேம்பாடு, ஒவ்வொரு வரி செலுத்துவோருக்கும் கிடைக்கக்கூடிய உள்ளீட்டு வரிக்கடனை உதவ / தீர்மானிக்க உதவுவதுடன், தானாக தயாரிக்கப்பட்ட உள்ளீட்டு வரிக்கடன் (ITC) அறிக்கையை அறிமுகப்படுத்துவதாகும். ஜி.எஸ்.டி.ஆர் -2 பி அத்தகைய தானாக தயாரிக்கப்பட்ட உள்ளீட்டு வரிக்கடன் (ITC) ஐ.டி.சி அறிக்கையாக இருக்கப் போகிறது, இது பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அந்தந்த  நபரின் சப்ளையர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்படும். ஜி.எஸ்.டி.ஆர் -1, 5 (குடியுரிமை பெறாத வரிவிதிக்கும் நபர்) மற்றும் 6 ( உள்ளீட்டு சேவை விநியோகஸ்தர்). இது ஒரு நிலையான அறிக்க

இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கி காணொலியில் குடியரசுத்தலைவர் உரை

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இந்திய குடியரசுத் தலைவர் 2020ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகளை காணொளிக் காட்சி வாயிலாக வழங்கினார் முதன் முறையாக காணொளிக் காட்சி வாயிலாக விருது வழங்கிய விழாவில், இந்திய ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த், 2020ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகளை குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இன்று (ஆகஸ்ட் 29, 2020) வழங்கினார், மேலும் இந்த விருது வென்றவர்களின் சாதனைகள், விளையாட்டில் இந்தியாவின் அபரிமிதமான திறனை நினைவூட்டுவதாகவும் கூறினார். மிக உயரந்த லட்சிய நோக்குடன் முன்னேறி 2028 ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்லும் முதல் பத்து நாடுகளில் இந்தியா இடம் பெற ஆசைப்படுவதாகவும், இந்தியா விளையாட்டில் ஒரு சிறந்த சக்தியாக உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். பெங்களூரு, புனே, சோனேபட், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, டெல்லி, மும்பை, போபால், ஹைதராபாத் மற்றும் இட்டாநகர் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 11 வெவ்வேறு மையங்களில் உள்ள அதிகாரிகள், விளையாட்டு நபர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய போது,

காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களின் கலகக்குரல்களால் கலக்கத்தில் தொண்டர்கள்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி கடந்த இரு தேர்தல்களாக சுருங்கியதால் இப்போது கலகக் குரல்கள் எழும் நிலை. சோனியா காந்தியின் தலைமையை எதிர்த்து குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த சர்மா, முகுல் வாஸ்னிக், மணீஷ் திவாரி உட்பட 23 தலைவர்கள் ஒன்றாகி ‘கட்சிக்கு தேர்தெடுக்கப்பட்ட, முழு நேரமும் பணியாற்றக் கூடிய செயல்பாடுகள் நிறைந்த தலைமை வேண்டுமென தலைமைக்குக் கடிதம் எழுதி. தகவல் காங்கிரஸ் செயற்குழுவுக்கு முதல் நாளில் ஆங்கில மீடியாக்களில் பிரதிபலிக்கவே. ஆளுங்கட்சி பாஜக, ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ (காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்) எனச் சொல்லி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இப்படி மூத்த தலைவர்களின் போர்க்கொடிகள் கிளம்பவே ஆகஸ்ட் 24 ஆம் தேதி கூடிய செயற்குழுவில் கடிதம் எழுதியவர்களில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்க காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் சிலர் மட்டும் காங்கிரஸ் தலைமையகத்தில் இருக்கவே கூட்டத்தில் கலந்துகொண்டு கடுமையான விமர்சனங்களை சந்தித்த குலாம் நபி ஆசாத் மற்றும் கபில் சிபல் ஆகியோர் மீண்டும் தலைமை மீது விமர்சனங்களை வைக்கத் தொடங்கியுள்ளனர். கட

இ பாஸ் முறை ரத்துசெய்தும் வழிபாட்டுத்தளங்கள் திறப்பும், உள்ளூர் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவு

தமிழக மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதி, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து விமானம், ரயில்,இதர வாகனங்களில் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் இ-பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ-பாஸ் வழங்கப்படும். 2) அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இணைய அனுமதிச் சீட்டு ரத்து.மேலும் பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது தொடா்பான அறிவிப்பு வெளியானது பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை அறிவிப்பது தொடா்பாக மருத்துவ நிபுணா்களுடன் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை பிற்பகல் ஆலோசனை நடத்திய கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதில் தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கப் பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை தமிழக அரசு அவ்வப்போது அறிவித்ததில் செப்டம்பா் மாதத்தில் பொது முடக்கத்துடன் பல்வேறு தளா்வுகளை அளிப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் மருத்துவ ந

பிரசாந்த்பூசன் வழக்கு நாளை தண்டனை விபரம்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சித்த டிவிட்டரில் வெளியிட்ட பதிவால், அவர் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், பூஷன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தன் செயலுக்கு மன்னிப்பு கேட்பதற்கு அவருக்கு நீதிமன்றம் முதலில் இரண்டு நாளும், தண்டனைக்கான விசாரணையின் போது இறுதியாக அரை மணி நேரமும் நீதிமன்றம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அவர் மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டதால், 25 ஆம் தேதியன்று தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கான தண்டனை விவரத்தை அறிவிக்கும் தீர்ப்பை, நாளை வழங்குவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திருச்சியில் தொல்லியல் ஆய்வு மையம் தனி சர்க்கிளாகிறது

திருச்சிராப்பள்ளியை மையமாகக் கொண்டு இந்தியத் தொல்பொருள் ஆய்வு துறை (Archaeological survey of India – Ministry of Culture, Govt. of India) தனி சர்க்கிள் ஏற்படுத்த வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வேண்டுகோளை ஏற்று தனி சர்க்கிள் திருச்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது வரலாறு ஆர்வலர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக இத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்ட நிலையில் பல வரலாறு நிகழ்வுகள் இனி இங்கு ஆய்வுகள் குறித்து சேகரிக்க முடியும் இதன் மூலம் தென் மாவட்டங்களில் உள்ள புராதன கோவில்கள் மற்றும் இத் துறையின் வாயிலாக பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து இடங்களும் பாதுகாக்கப்படவும், புணரமைக்கப்படவும், புதிய ஆய்வுகள் மேற்கொள்ளவும், கூடுதல் நிதி பெறவும், புதிய பணிகள் தொடங்கவும் விரைந்து நடைபெறவும் இது துணையாக அமையும்.

ஹவாலா மோசடியில் தொழிலதிபரைக் கடத்திய திருட்டுத் தீவிரவாதிகள்

என் ஐ ஏ அதிகாரிகளைப் போல் நடித்து தொழிலதிபரைக் கடத்தி ரூபாய் 2 கோடி கொள்ளையடித்த பயங்கரவாதிக்கு காவல்துறை வலை ஹவாலா தொழில் போட்டியில் என் ஐ ஏ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரைக் கடத்தி ரூபாய். 2 கோடி பணம் பறித்த குற்றத்தில் தீவிரவாத வழக்கில் தொடர்புடைய அதிராமபட்டினம் தவ்பீக்கை காவல்துறை தேடி வருகின்றனர். சென்னை, ஏழுகிணறு பகுதியில் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் செய்து வரும் திவான் என்ற அக்பர் ஆகஸ்டு 17 ஆம் தேதி முத்தியால்பேட்டை நண்பர் வீட்டுக்குச் சென்று திரும்பிய போது நள்ளிரவு 1.30 மணியளவில் முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லையில் காரில் வந்த ஐந்து மர்ம நபர்கள் அக்பரை மிரட்டி காரில் கடத்தியவர்கள் தாங்களை என் ஐ ஏ அதிகாரிகளெனக் கூறியவர்கள் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள தனியார் ரிசார்ட்டில் இரண்டு நாட்கள் அவரை அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்தி ரூபாய் 2 கோடி பணம் பறித்த பின் அவரை வெளியே விட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக கடந்த 24 ஆம் தேதி சென்னை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு காவல்துறை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் படி வடசென்னை இணைக்கமிஷனர் பாலகிர

தமிழகத்தில் இ-பாஸ் விதிகளில் சில தளர்வுகள்

தமிழகத்தில் இ - பாஸ் விதிகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி பிற மாநிலங்களில் இருந்து வணிக ரீதியாக தமிழகம் வருவோருக்கு உடனடி இ - பாஸ் வழங்கப்படும். தமிழகம் வந்து 72 மணி நேரத்திற்குள் திரும்புவோருக்கு குவாரண்டைன் கிடையாது.இவர்கள் இ பாஸ் இல்லாமல் தமிழகம் வரலாம். 3 நாட்கள் தங்கலாம். 3 நாட்களுக்குள் திரும்பி சென்றார்கள் என்றால் அவர்களுக்கு குவாரண்டைன் தேவையில்லை. அதேபோல் திரைத்துறையினர், சட்டப் பணி, தொழில்துறையினர், ஐ.டி ஊழியர்கள் உள்ளிட்ட தொழிற்சார்ந்த பணிகளுக்கு வருவோருக்கும் குவாரன்டைன் கிடையாது. ம் இதனால் சென்னைக்கு தொழில் நிமித்தம் பலர் செல்ல முடியும்