முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிகானேரில் 14-வது ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்சவ்-வில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

 குடியரசுத் தலைவர் பிகானேரில் 14-வது ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்சவ்-வில் பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர்   திருமதி திரௌபதி முர்மு, இராஜஸ்தான் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு பிகானேரில் நடைபெறும் 14-வது ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்சவ்-வில்  அவர் பங்கேற்கிறார்.

வாடிங்டனில் கோப்ரா வாரியர் பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்கிறது

இங்கிலாந்தில் உள்ள வாடிங்டனில் கோப்ரா வாரியர் பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்கவுள்ளது பிரிட்டனில் உள்ள ராயல் விமானப்படையின் வாடிங்டன் விமானப்படை தளத்தில் கோப்ரா வாரியர் பயிற்சியில் பங்கேற்பதற்காக 145 விமானப்படை வீரர்கள் அடங்கிய இந்திய விமானப்படையினர் இன்று ஜாம்நகர் விமானப்படை நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.  2023  மார்ச் 06 முதல் 2023  மார்ச் 24  வரை இப்பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது. கோப்ரா வாரியர் பயிற்சி என்பது பலதரப்பு விமானப் படைப் பயிற்சியாகும். இதில் ராயல் ஏர் ஃபோர்ஸ் மற்றும் இந்திய விமானப் படையுடன், ஃபின்லாந்து, ஸ்வீடன், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் விமானப்படைகளும் பங்கேற்கும். இந்த ஆண்டு பயிற்சியில் ஐந்து மிராஜ் 2000 போர் விமானங்கள், இரண்டு சி-17 குளோப்மாஸ்டர்  III மற்றும் ஒரு ஐஎல் -78 நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களுடன் இந்திய விமானப் படை பங்கேற்கிறது.  பல்வேறு போர் விமான செயல்பாடுகளில் பங்கேற்பதும், பல்வேறு விமானப்படைகளின் சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்வதும் இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

அனைத்துப் பகுதிகளில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சென்றடைய வேண்டும் பிரதமர் கருத்து

‘கடைக்கோடியும் சென்றடைதல்’ பற்றிய நிதிநிலை அறிக்கை சம்பந்தமான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரை “அமலாக்கம் மற்றும் உரிய காலத்தில் விநியோகிப்பதன் கண்ணோட்டத்தில் இந்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான கருத்துப் பரிமாற்றம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக பயன்படுத்தப்படுவதையும் இது உறுதி செய்கிறது” “சிறந்த ஆளுகையில் நாம் அதிக கவனம் செலுத்தினால் கடைசி மைலை சென்றடையும் நமது இலக்கை மிக சுலபமாக அடைய முடியும்” ‘கடைக்கோடியும் சென்றடைதல்’ அணுகுமுறையும், முழுமையான நிலை என்ற கொள்கையும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது” “அனைவரையும் சென்றடைவது என்பது நமது இலக்காக இருக்கும் போது ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழலுக்கு ஒருபோதும் வாய்ப்பு இருக்காது” “ஊரகப் பகுதிகள் மற்றும் பழங்குடிப் பகுதிகளை சென்றடையும் தாரக மந்திரத்திற்கு இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது” “பழங்குடி சமூகத்தின் மிகப்பெரிய திறனை முதன் முறையாக இந்த அளவுக்கு நாடு பயன்படுத்துகிறது” “பழங்குடி சமூகத்தில் மிகவும் நலிவடைந்தவர்களுக்கான சிறப்பு இயக்கத்தின் கீழ் விரைவாக வசதிகளை அளிப்பதற்கு ஒ

ஜம்மு பதர்வாவில் தனித்துவ முன்னெடுப்பாக சுற்றுலாத் துறை சார்பில் மாரத்தான் போட்டி

ஜம்மு பதர்வாவில் தனித்துவ முன்னெடுப்பாக சுற்றுலாத் துறை அமைச்சகம் முதலாவது பனி மாரத்தான் போட்டிக்கு பிப்ரவரி 26, 2023 அன்று ஏற்பாடு செய்திருந்தது ஜம்மு பதர்வாவில், பாதர்வா சுற்றுலாக் கழகத்துடன் இணைந்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் முதலாவது பனி மாரத்தான் போட்டியை  பிப்ரவரி 26, 2023 அன்று நடத்தியது. தோடா மாவட்ட துணை ஆணையர் திரு விசேஷ் மஹாஜன் கொடியசைத்து இதனைத் தொடங்கி வைத்தார்.  அப்போது பேசிய அவர், இது போன்ற சாகச விளையாட்டுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும், விளையாட்டுப் பிரிவுகளில், உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு நிறைவு, ஜி-20 இந்திய தலைமைத்துவம் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில், முதலாவது பிரம்மாண்ட பனி மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாரத்தான் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 130-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 25 கிலோ மீட்டர் ஆகிய 3 பிரிவுகளில் இந்த மாரத்தான் குல்தந்தாவிலிருந்து தொடங்கியது.

குரூப்-2. முதன்மைத் தேர்வில் கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்ட இடத்தில் நடந்துள்ள தவறுகளே

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2. முதன்மைத் தேர்வில் கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்ட இடத்தில் நடந்துள்ள தவறுகளே குளறுபடிகளுக்குக் காரணமாகுமென டிஎன்பிஎஸ்சி விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று  டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு 20 மாவட்டங்களிலுள்ள பல நகரங்களில் நடந்தது. இத் தேர்வில் விடைத்தாள்கள மாற்றி மாற்றி வழங்கப்பட்டதால் குழப்பம் ஒவ்வொரு தேர்வருக்கும் உரிய எண்கள் விடைத்தாள்களில் இடம் பெற்றிருக்கும். ஆனால் அவை மாற்றி மாற்றி வழங்கப்பட்டதால், இந்தக் குளறுபடி ஏற்பட்டது இந்த விவகாரம் சம்பந்தமாக டி என் பிஎஸ்சி அதிகாரிகள் நேற்று நடத்திய ஆலோசனையில்கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்ட இடத்தில் தான் த வறுகளே குளறுபடிகளுக்கு நடந்த முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள்கள் சரியாக அடுக்கப்படாமல் மாற்றி மாற்றி அடுக்கப்பட்டு வெவ்வேறு மையங்களுக்கு  அனுப்பப்பட்டதே, இந்தக் குளறுபடிகளுக்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், வினாத்தாள் அச்சிட டெண்டர் எடுத்த நிறுவனம், நேரடியாக இந்தப் பணிகளை மேற்கொள்ளாமல் வேறு நிறுவன

இணையவழிக் குற்றங்கள் குறித்து இழுப்பூர் இளைஞர் காவல்துறையில் புகார் மனு

தொழில்நுட்பப் புரட்சியால் இணையவழிக் குற்றங்கள்  தொழிற் துறையை உருமாற்றியுள்ளது. புதிய சேனல்களைத் திறந்துள்ளது. இது சமூகச் சீரழிவின் உச்சம் வெப் கேமரா இணையதளங்கள், சந்தா சேவைகள் மற்றும் தகவமைக்கப்பட்ட காணொளித் தளங்களைப் பயன்படுத்தி பல ஆபாசப்பட நட்சத்திரங்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் சுயாதீனமாக செயல்பட தொழில்நுட்பம் உலகில் அனுமதிக்கிறது. தங்களின் தனிப்பட்ட பெயரை பிரபலமடையச் செய்ய பலரும் தங்களின் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்துகின்றனர். அடல்ஸ் ஒன்லி எனும் வயது வந்தோருக்கான உள்ளடக்கங்களை பதிவிடும் ஒருவர், புதிய காணொளிக் காட்சிகளை வெளியிடும் போது, அதனை பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஒருவரின் கணக்கு நீக்கப்படும் போது, ரசிகர்களோடு அவருக்கும் இருக்கு தொடர்பும், வியாபாரத் தொடர்பும் உலகில் அணைத்துப் பகுதியிலும் துண்டிக்கப்படுகின்றன. இதனால், அவர்களுக்கு வருகின்ற வருவாய் இழப்போடு, வாழ்க்கையும் பதிக்கப்படுகிறது. பல பதிவுகள் கற்பனைக்கு சிலவற்றையே விட்டு செல்கின்றன. ஆனால், பதிவிடுவதற்கான வழிகாட்டு நெறிகள் தெளிவில்லா நிலையிலும், செயல்படுத்துவதில் தொடர்ச்சி இல்லாமலும் இருப்பதாக அவர்கள்

நீர்வாழ் உயிரின நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு ரூ.33.78 கோடி ஒதுக்கீடு

நீர்வாழ் உயிரின நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு ரூ.33.78 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல் தமிழக மீன் வளத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு இதுவரை ரூ. 3000 கோடி வழங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரினங்களை  நோயிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டத்தின் 2-வது கட்டத்தை செயல்படுத்த ரூ.33.78 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.   சென்னையில் உள்ள தேசிய உவர் நீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் மரபணு மேம்பாட்டுத் திட்டத்தை இன்று  (27.02.2023) தொடங்கிவைத்துப் பேசிய அவர்,  மீன்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றி தகவல் தெரிவிக்கவும், அறிவியல் பூர்வமான உள்ளீடுகள் கிடைப்பதற்கும், ரிப்போர்ட்ஃபிஷ்டிசீஸ் என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது.  மீன்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றிய தகவல்களை நேரடியாக  மாவட்ட மீன்வள அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும், விஞ்ஞானிகளிடமிருந்து தொழில்நுட்ப உதவியை பெற்று பிரச்சனைக்கு தீர்வு காணவும் இந்த செ

ஊழலுக்கு எதிராக சமரசமற்ற முறையில் செயல்படும் இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டை வலியுறுத்தும் மத்திய அமைச்சர் தகவல்

பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் ஊழலுக்கு எதிராக சமரசமற்ற முறையில் செயல்படும் இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், நடைபெற இருக்கும் ஜி20 செயல்பாட்டுக் குழு கூட்டத்தின் தீர்மானத்தை வலிமை பெறச் செய்ய இருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார் ஊழலுக்கு எதிராக சமரசமற்ற முறையில் செயல்படும் இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக, ஹரியானாவின் குருகிராமில் வரும் மார்ச் 1ந் தேதி முதல் 3ம் தேதி வரை நடைபெற இருக்கும் ஜி20 ஊழலுக்கு எதிரான முதல் செயல்பாட்டுக் குழு கூட்டத்தின் தீர்மானத்தை வலிமை பெறச் செய்ய இருப்பதாக மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன் எப்போதும் இல்லாத பொருளாதார, புவி அறிவியல், கால நிலை சவால்களுக்கு மத்தியில் ஜி20 இந்தியத் தலைமைத்துவம் பெற்றிருக்கிறது. உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ள போது, சர்வதேச நிதி ஆணையம் மற்றும் இதர உலக நிறுவனங்கள், இந

பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான பயனாளி விவசாயிகளுக்கு 13வது தவணைத் தொகை

பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான பயனாளி விவசாயிகளுக்கு 13வது தவணைத் தொகையாக ரூ. 16,800 கோடியைக் கர்நாடகாவின் பெலகாவியில் பிரதமர் நாளை வழங்குவார் பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதி  (பிஎம் - கிசான் ) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வீதம் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை வழங்கவிருக்கிறார். இத்திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாக மொத்தம் ரூ. 16,800 கோடி  டெபாசிட் செய்யப்படும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பிஎம் - கிசான் 13வது தவணை வெளியீட்டு நிகழ்வு, இந்திய ரயில்வே, ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து, கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெறும். இதில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் செயலாளர் திரு மனோஜ் அஹுஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் பிஎம் - கிசான் மற்றும் ஜல் ஜீவன் இயக்கப் பயனாளிகள் அடங்கிய ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பெருந்திரளாகக்  கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியை நேரலையில் காண ஆர்வமுள்ளவர்கள், பின

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நடிகை குஷ்பு சுந்தர் நியமனம்

இந்தியாவின் சட்டபூர்வ அமைப்பான தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நடிகை  குஷ்பு சுந்தர் நியமிக்கப்பட்டார். 1992 ஆம் ஆண்டு முதல் இயங்கும் தேசிய மகளிர் ஆணையம், மகளிர் நலனுக்கான கொள்கைகளை உருவாக்கி, இந்திய அரசுக்குப் பரிந்துரைக்கும் அமைப்பு.  தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நடிகை குஷ்பு சுந்தர் நியமிக்கப்பட்டதற்கு அவர், டிவிட்டரில் அனைவருக்கும், குறிப்பாக பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.அரசியல், சமயம், வேலை வாய்ப்பில் மகளிர்க்கான உரிமைகளைக் காத்திடவும், வரதட்சணை, வன்கொடுமை, பணிச் சுரண்டல், காவல் நிலையக் கொடுமைகள் என பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட தேசிய மகளிர் ஆணையத்தில் மகளிர் உரிமைகளுக்கான இராஷ்டிர மஹிளா எனும் மாதாந்திர செய்தி இதழை, ஆங்கிலம், ஹிந்தி  ஆகிய இரு மொழிகளில் தேசிய மகளிர் ஆணையம் வெளியிடுகிறது .நடிகை குஷ்பு சுந்தர், தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

பொய் வழக்குப் பதிந்து மனித உரிமை மீறல் செய்த நான்கு காவலர்களுக்கு உயர்நீதி மன்றம் உறுதி செய்த தண்டனை

பொய் வழக்குப் பதிந்து மனித உரிமை மீறல்  செய்த நான்கு காவலர்களுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை இரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு: மயிலாடுதுறை மாவட்டம் ப்ரவீன் பாபு அவரது நண்பர் அசோக் உடன் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பேருந்து நிலையம் சென்ற போது அங்கு பணியிலிருந்த காவலர் பாலு, போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி ப்ரவீன் பாபுவைத் தாக்கியுள்ளார். அதனை ப்ரவீனின் நண்பர் அசோக் மொபைல் தொலைபேசி மூலம்  வீடியோ எடுத்ததால் மேலும் ஆத்திரமடைந்த காவலர் பாலு அசோக்கையும் சேர்த்து தாக்கியுள்ளார். அதனையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்த சென்ற காவலர் பாலு மேலும் மூன்று காவலர்களுடன் இணைந்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் இருவரும் கடுமையாகக் காயமடைந்த நிலையில் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையிலும்  அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில் நடந்த சம்பவம் தொடர்பாக ப்ரவீன் பாபு மற்றும் அசோக் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்தனர். வழக்கை விசாரித்த ஆணையம், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இருவருக்கும் அபராதமாக தலா ஒரு லட்சம் வழங்க உத்தரவ

2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 523.8 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு வெங்காயம் ஏற்றுமதி

2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 523.8 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வெங்காய ஏற்றுமதியை அரசு கட்டுப்படுத்தவோ தடை செய்யவோ இல்லை. வெங்காயத்தின் தற்போதைய ஏற்றுமதிக் கொள்கை ‘தாராளமானது’. வெங்காய விதை ஏற்றுமதி மட்டுமே ‘கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’.  அதுவும் வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரக அங்கீகாரத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. வெட்டப்பட்ட, துண்டுகளாக்கப்பட்ட அல்லது பொடி வடிவில் அரக்கப்பட்ட அனைத்து வகை வெங்காயம் மற்றும்  பெங்களூர் ரோஸ் வெங்காயம், கிருஷ்ணாபுரம் வெங்காயம் ஆகியவற்றிற்கு வெட்டப்பட்ட, துண்டுகளாக்கப்பட்ட அல்லது பொடி வடிவில் 'தடை' என்பதிலிருந்து விலக்களித்து  'தாராளமாக ' என்று திருத்தப்பட்டஏற்றுமதி கொள்கைக்கு  28.12.2020 தேதியிட்ட வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரக அறிவிப்பு எண். 50 காண்க. 2022க்கு மாதவாரியான ஏற்றுமதி விவரம் மாதவாரியாக (2022) மதிப்பு வாரியாக (மில்லியன் அமெரிக்க டாலரில் ) 2021 முதல்  2022 வரை ஏற்றுமதியில் அதிகரிப்பு % ஏப்ரல் 48.0 13.74 மே 31.9 13.20 ஜூன் 36.0 -25.19 ஜூலை 50.1 19.74 ஆகஸ்ட் 49.0 -5.21 ச

இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு

ஒரு குறிப்பிட்ட பகுதியின்  தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு தற்காலத்தில் புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்குகிறது. 1999 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புவிசார் குறியீட்டுச் சட்டம் 2003 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்படும் நிலை உள்ளது. புவிசார் குறியீடு வழங்கியதன் மூலம் சம்பந்தப்பட்ட பொருளை வேறு யாரும் வியாபார நோக்கத்துக்காகவோ போலியாகவோ பயன்படுத்துவதைத் தடுக்கலாம். தமிழ்நாட்டில் பல பொருட்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இப்பொது வேலூர் மாவட்டம் இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இலவம்பாடி முள் கத்திரிக்காய் என்று அழைக்கப்படும் வேலூர் முள்ளந்தண்டு கத்தரி, ஒரு அரிய முட்கள் நிறைந்த நாட்டுக் கத்தரிக்காய் இனம். இளஞ்சிவப்பு நிறத்துடன் கலந்த ஊதா நிறத்தில் பளபளப்பாக இருக்கும். ஒரு கத்தரிக்காயின் சராசரி எடை 40 கிராம் வரை வரும். இவற்றில் புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்ற கத்தரி வகைகளை விட சுவையாகவும் இருக்கும். பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்க்கும் தனி சக்தி இந்தக் கத்திரிக்காய் எனும் தாவர  இனத்திற

பஞ்சாரா சமூகத்தின் ஆன்மீக மற்றும் மதத் தலைவரான சந்த் சேவாலால் மகாராஜின் 284-வது பிறந்தநாள்

பஞ்சாரா சமூகத்தின் மதத்தலைவர் சந்த் சேவாலால் மகாராஜின் 284-வது பிறந்தநாள் விழா: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா கலந்து கொள்ளவிருக்கிறார் பஞ்சாரா சமூகத்தின் ஆன்மீக மற்றும் மதத் தலைவரான சந்த் சேவாலால் மகாராஜின் 284-வது பிறந்தநாளை இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் முதன் முறையாக விமர்சையாகக் கொண்டாடுகிறது.  மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதோடு அவருடன் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகியும் பங்கேற்பார். மகாராஷ்டிரா மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அமைச்சர் திரு சஞ்சய் ரத்தோட், பாஜக மூத்த தலைவர் திரு மஞ்சிந்தர் சிங் சிர்சா உள்ளிட்டோரும் 27. 02.23 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில் கலந்து கொள்வார்கள். கர்நாடகாவின் கலபுரகி தொகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினரும், புதுதில்லியின் சந்த் சேவாலால் மகாராஜ் அறக்கட்டளையின் உறுப்பினருமான டாக்டர் உமேஷ் ஜாதவ், கடந்த  மூன்று ஆண்டுகளாக இந்த விழாவை புதுதில்லியில் கொண்டாடி வருவதோடு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரு

குந்தி மக்களவைத் தொகுதி கும்லா வட்டத்தில் செயல்படும் மகிளா விகாஸ் மண்டலின் வருடாந்திர பொதுக்குழு

குந்தி மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள கும்லா வட்டத்தில் செயல்படும் மகிளா விகாஸ் மண்டலின் வருடாந்திர பொதுக்குழுவில் 15,000க்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றதற்கு பிரதமர் பாராட்டு ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள கும்லா வட்டத்தில் செயல்படும் மகிளா விகாஸ் மண்டலின் வருடாந்திர பொதுக்குழுவில் 15,000க்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். குந்தி மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள பால்கோட் (கும்லா) வட்டத்தில் செயல்படும் மகிளா விகாஸ் மண்டலின் வருடாந்திர பொதுக்குழுவில் 15,000க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டதாக மத்திய பழங்குடி விவகாரங்கள் துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா வெளியிட்டிருந்த தொடர் ட்விட்டர் பதிவுகளுக்கு பிரதமர் பதிலளித்திருந்தார்.  944 மகிளா மண்டலைச் சேர்ந்த பெண்கள் இதில் கலந்து கொண்டனர் பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது: “மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. அதிகரித்து வரும் பெண்களின் பங்கேற்பு, அவர்களது அதிகாரம் மற்றும் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.”

அற்புதமான கூட்டு முயற்சி என்று பிரதமர் பாராட்டிய ஆர்ஆர்ஆர் திரைப்படம்

இந்தியாவில் உள்ள கொரிய தூதரகம் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு பாடலின் பிரதி நடன காட்சியைப் பகிர்ந்துள்ளது அற்புதமான கூட்டு முயற்சி என்று பிரதமர் பாராட்டு இந்தியாவில் உள்ள கொரிய தூதரகம் ஆர்ஆர்ஆர்  திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  நாட்டு நாட்டு பாடலின் பிரதி நடன காட்சியைப்  பகிர்ந்துள்ளது. பிரதமர்  திரு நரேந்திர மோடி இதை உற்சாகமான,அற்புதமான கூட்டு  முயற்சி என்று பாராட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள கொரிய தூதரகத்தின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது; "கலகலப்பான மற்றும் அற்புதமான  கூட்டு  முயற்சி. ”

ஐஐஎம் ராய்ப்பூர் வளாகத்தில் இளைஞர்களுக்கான இரண்டு நாள் ஆலோசனை

ஐஐஎம் ராய்ப்பூரில் நடைபெற்ற யூத்20 ஆலோசனை நிகழ்வின் முதல் நாளில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட இளைஞர்கள் ஐஐஎம் ராய்ப்பூர் வளாகத்தில் இளைஞர்களுக்கான இரண்டு நாள் ஆலோசனை நிகழ்வான யூத்20 மிகுந்த உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் நடைபெற்றது. நேற்று 2023 பிப்ரவரி 25-ம் தேதியன்று நடைபெற்ற முதல் நாள் கலந்துரையாடலில், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.அனுராக் சிங் தாக்கூர், மாணவர்களின் மிகுந்த உற்சாகத்திற்கிடையே கலந்துரையாடினார். முன்னதாக, நேற்று காலை இந்நிகழ்ச்சியை மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை இணையமைச்சர் ரேணுகா சிங், ஐஐஎம் ராய்பூர் இயக்குனர் டாக்டர் ராம் குமார் ககானி உள்ளிட்டோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் தனது உரையின் போது, திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதிலும், சர்வதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்தியா தற்போது உலகின் 3-வது பெரிய ஸ்டார்ட்அப் அமைப்பாக உள்ளதென மத்திய அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் பெருமிதம் தெரிவித்தார். அமைச்சருடனான உரையாடலின் போது,

உயரதிகாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர் பாதுகாப்புக் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு

உயரதிகாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர் பாதுகாப்புக் கேட்டு மனு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்  பதிலளிக்க உத்தரவு வனத் துறைக்குச் சொந்தமான நிலத்தை அரசு உயரதிகாரி ஒருவர் பினாமிகள் மூலமாக அபகரித்துள்ளதாகப் பொது நல மனு தாக்கல் செய்து வழக்குத் தொடர்ந்தவர் காவல் பாதுகாப்புக் கோரித் தொடர்ந்த வழக்கில் திண்டுக்கல்  மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம் பூலாத்தூர் கிராமம்  ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல  மனுவில், "கொடைக்கானல் வட்டம் மலைப்பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமான 1.85 ஏக்கர் நிலத்தை அப்போது பணியிலிருந்த  குன்னூர் தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநரான அம்பலவாணன் அவரது  பினாமிகள் மூலமாக வாங்கியதாக  குற்றம் சாட்டி தாக்கல் செய்த பொதுநலமனு  வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வனத் துறைக்குச் சொந்தமான அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டது. இந்த