முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங்குக்கு கிழக்கு கடற்படை பிரிவு பிரியாவிடை

வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங்குக்கு கிழக்கு கடற்படை பிரிவு பிரியாவிடை கிழக்கு கடற்படை கமாண்ட்-டின்,  ஃபிளாக்   ஆபிசர் கமாண்டிங் இன் சீப் வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங்குக்கு இன்று விசாகபட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற அணிவகுப்பில் பிரியாவிடை அளிக்கப்பட்டது. அணிவகுப்பைப் பார்வையிட்ட பகதூர் சிங், பல்வேறு கப்பல்கள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த கடற்படைஃ பிரிவுகளை ஆய்வு செய்தார். இஎன்சி-யின் தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அனைத்து  ஃபிளாக்  அதிகாரிகள், கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும்  இதர   அமைப்புக்களின் கமாண்டிங் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், சம்பிரதாய முறைப்படி, அளிக்கப்பட்ட வழியனுப்பு நிகழ்ச்சியை வைஸ் அட்மிரல்  ஏபி சிங் ஏற்றுக்கொண்டார். மேற்கு கடற்படை காமாண்டின் ஃபிளாக் ஆபிசர் கமாண்டிங் இன் சீப் ஆக பொறுப்பு ஏற்பதற்காக அவர் மும்பை புறப்படுகிறார். கிழக்கு கடற்படை கமாண்ட்-டின்,  ஃபிளாக்   ஆபிசர் கமாண்டிங் இன் சீப் வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங்குக்கு இன்று விசாகபட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற அணிவகுப்பில் பிரியாவிடை

சர்வதேச திரைப்பட விழாவின் சர்வதேச போட்டிக்கான நடுவர் குழு தலைவர் செய்தியாளர் சந்திப்பு

திரைப்பட தயாரிப்பு, பார்வையிடுதல், தேர்வு செய்தல் ஆகியவற்றைப் பொறுத்தவரை பாலின அடிப்படையில் வேறுபாடு எதையும் நான் ஒருபோதும் பார்த்ததில்லை: ரக்ஷன் பெனிடெமாட், தலைவர், சர்வதேச போட்டிக்கான நடுவர் குழு கோவாவில் நடைபெறும் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் சர்வதேச போட்டிக்கான நடுவர் குழு தலைவரும் ஈரானிய திரைப்பட தயாரிப்பாளருமான ரக்ஷன் பெனிடெமாட் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களும் கலைஞர்களுமான சிரோ குவேரா,  விமுக்தி ஜெயசுந்தரா, நிலா மதாப் பாண்டா உள்ளிட்ட நடுவர் குழு உறுப்பினர்களும்  ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடினர். திரைப்படங்களைத் தேர்வுசெய்த அனுபவம் பற்றி நடுவர் குழு தலைவரும் ஈரானிய திரைப்பட தயாரிப்பாளருமான ரக்ஷன் பெனிடெமா கூறும்போது,  பல்வேறு நாடுகளிலிருந்து பல விதமான திரைப்படங்களைத்  தேர்வு செய்ததைத் தாம் மிகவும்  ரசித்ததாகவும் இது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் என்றும்  கூறினார். "திரைப்பட  தயாரிப்பு,  பார்வையிடுதல், தேர்வு செய்தல் ஆகியவற்றைப் பொறுத்தவரை பாலின அடிப்படையில் வேறுபாடு எதையும் நான் ஒருபோதும் பார்த்ததில்லை. பாலினத்தை விட நிபுணத்துவம் திறமையில் நான்  அதிகம் கவனம் செலு

ஓமிக்ரான் பாதிப்புகள் மற்றும் டிசம்பர் 2021 முதல் அமலுக்கு வரும் புதிய வழிகாட்டுதல்கள்

புதிய கொவிட் வகை (ஓமிக்ரான்) பாதிப்புகள் உலகெங்கிலும் கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, சர்வதேச பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை இந்தியா வெளியிட்டுள்ளது கொவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான துடிப்புமிக்க மற்றும் ஆபத்து சார்ந்த அணுகுமுறையின் தொடர்ச்சியாக, 'சர்வதேச வருகைக்கான வழிகாட்டுதல்களை' மத்திய சுகாதார அமைச்சகம் 28 நவம்பர், 2021 அன்று திருத்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி அனைத்து பயணிகளும் (கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றிருந்தாலும்) 'அபாயத்தில் உள்ள நாடுகள்' என அடையாளம் காணப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் மேற்கொள்ளப்படும் கொவிட்-19 பரிசோதனைக்கு கூடுதலாக விமான நிலையத்தில் வருகைக்கு பிந்தைய கொவிட்-19 சோதனையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். இந்த சோதனையில் தொற்று கண்டறியப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ மேலாண்மை நெறிமுறையின்படி சிகிச்சை அளிக்கப்படுவார்கள். மேலும், அவர்களின் மாதிரிகள் முழு மரபணு வரிசைப்படுத்தலுக்கு (ஜீனோம் சீக்வென்சிங்க்) எடுக்கப்படும். தொற்று பாதிப்பில்லாத பயணிகள் விமான

நாடாளுமன்ற அரசியல் கட்சித் தலைவர்களுடனான அரசின் கூட்டம் இன்று நடைபெற்றது

நாடாளுமன்ற அரசியல் கட்சித் தலைவர்களுடனான அரசின் கூட்டம் இன்று நடைபெற்றது நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள்; மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் நடத்த அரசு விரும்புகிறது; திரு ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அவைகளின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அரசு இன்று நடத்தியது. இந்தக்கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், நவம்பர் 29-ம்தேதி தொடங்கி, டிசம்பர் 23-ந் தேதி வரை நடைபெறும் என்று கூறினார். இந்தக் கூட்டத் தொடரில், 19 அமர்வுகள் நடைபெறும். இந்தக்கூட்டத் தொடரில், 36 மசோதாக்கள், ஒரு நிதித்துறை தொடர்பான அலுவல் ஆகியவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அவர் கூறினார். 3 அவசர சட்டங்களுக்கு மாற்றாக மசோதாக்களும் இதில் கொண்டுவரப்படும் என்று கூறிய அமைச்சர், நாடாளுமன்ற விதிமுறைகள் அனுமதிக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளதாக கூறினார். அவையை சுமுகமாக நட

எல்லை சாலைகள் அமைப்பின் மோட்டார் சைக்கிள் குழு, 10,000 கி.மீ தூரத்தை நிறைவு செய்தது

எல்லை சாலைகள் அமைப்பின் மோட்டார் சைக்கிள் குழு, 10,000 கி.மீ தூரத்தை நிறைவு செய்தது விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள எல்லை  சாலைகள் அமைப்பினர், 4 கட்ட சுற்றுப் பயணத்தில் 10,000 கி.மீ தூரத்தை நிறைவு செய்துள்ளனர். சுதந்திர இந்தியாவின் வைர விழாவை கொண்டாடும் வகையில், எல்லை     சாலைகள்      அமைப்பினர், நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். தேசிய ஒற்றுமை, சாலைகள் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயணத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் புதுதில்லியில் கடந்த அக்டோபர் 14ம் தேதி தொடங்கி வைத்தார். முதல் கட்ட பயணத்தில் இமாச்சலப் பிரதேசம், லே, லடாக், ஜம்மு, காஷ்மீர் மலைப் பகுதிகளில் இந்த குழுவினர் பயணம் மேற்கொண்டனர். இரண்டாவது கட்ட பயணத்தில் பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பயணம் மேற்கொண்டனர். 3வது கட்ட பயணத்தில், எல்லை    சாலைகள்        அமைப்பினர் அசாம் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டனர். நான்காவது கட்ட பயணத்தில், 6 மாநிலங்களில் 3,2

டில்லிஹாட்டில் பழங்குடியினர் இந்தியா ஆதிப் பெருவிழாவில் ட்ரைபெட் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தால் தூதரக அதிகாரிகள் தினம்

டில்லிஹாட்டில் பழங்குடியினர் இந்தியா ஆதிப் பெருவிழாவில் ட்ரைபெட் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தால் தூதரக அதிகாரிகள் தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு மற்றும் தற்சார்பு இந்தியாவைக் கட்டமைத்தல் என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்திற்கேற்பவும் பழங்குடியினரின் வளமான பாரம்பரியத்தை சர்வதேசப் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்யவும் மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து பழங்குடியினர் இந்தியா ஆதிப்பெருவிழாவில் 2021 நவம்பர் 27, சனிக்கிழமையன்று பழங்குடியினர் இந்தியா மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் இந்தியாவில் உள்ள 20க்கும் அதிகமான வெளிநாட்டுத் தூதரகங்களைச் சேர்ந்த சுமார் 100 அதிகாரிகளும் இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற அமைச்சகங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். போலந்து, கிரிபாட்டி, தென்கொரியா, மெக்சிகோ, தாய்லாந்து, லாவோஸ், சுவிட்சர்லாந்து, பங்களாதேஷ், மாலத்தீவுகள், அமெரிக்கா, பிரேசில் போன்ற ஒரு சில நாடுகள் உட்பட 20க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் பங்கேற்றவர்களில் அடங்குவர். ஐக்கிய நாடுகள் சபை போன்ற ச

கிராமச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அவரை கௌரவிக்கும்‌ சிறப்புப் பாடலுக்காக காங்தாங் மக்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார்

கிராமச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அவரை கௌரவிக்கும்‌ சிறப்புப் பாடலுக்காக காங்தாங் மக்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார் காங்தாங் கிராமத்தை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதில் மத்திய அரசின்  முயற்சிகளைப் பாராட்டும் வகையிலும், அவரைப் போற்றும் வகையிலும் அவ்வூர் மக்கள் இயற்றிய சிறப்புப் பாடலுக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி  நன்றி தெரிவித்துள்ளார். மேகாலயா முதலமைச்சரின் ட்விட்டருக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது: "இத்தகைய அன்பான செய்கைக்காக காங்தாங் மக்களுக்கு நன்றி.  மேகாலயாவின் சுற்றுலா வளத்தை மேம்படுத்த மத்திய அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது. அம்மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற செர்ரி பூக்கள்  திருவிழாவின் சிறந்த படங்களையும் பார்க்க முடிந்தது. காண்பதற்கு அழகாக"

நேமம் (குன்றக்குடி) கிராமத்தில் அரசுப் பள்ளி மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பலர் பாராட்டு

க.சண்முகம்,                                        சிவகங்கை மாவட்டச் செய்தியாளர்:.                      பொருளாதாரத்தில் பின்தங்கிய, நேமம் (குன்றக்குடி) கிராமத்தில் அரசுப் பள்ளி மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பலர் பாராட்டு.!. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், (குன்றக்குடி) நேமம் ஊராட்சி  நேமத்தான்பட்டி (பழையூர்) கிராமத்தில் வசிப்பவர் பிச்சை தாயார் பிரான்சிஸ் மல்லிகா.இவர்களது மகள் கனிமொழி. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் நிர்வாகத்திலுள்ள (அரசு உதவி பெறும்) தருமை கயிலை குருமணி  மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவி நீட் தேர்வில் 547 மதிப்பெண்கள் பெற்றார் அதாவது வகுப்பு வாரி நிர்ணயமாகியதை விட  132 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சியடைந்தார். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய உழைப்பு ஊதியம் பெறும் ஏழைக் குடும்பத்தில் தந்தையை இழந்து, தாயாரால்  வளர்க்கப்பட்டவர். கிடைத்த ஆதரவின் மூலமாக மாணவி நீட் பயிற்சி மையங்கள் உதவியின்றி சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றுள்ளார் . கிராமப்புற மாணவி குன்றக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில், தமிழ் வழியில் பயின்ற கனிமொழி, "நீட்" தேர்வ

இணைய நிர்வாகத் திட்டங்களை வரையறுக்கும் இந்திய இணைய நிர்வாக அமைப்பின்(ஐஐஜிஎப்) முயற்சிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

 இணைய நிர்வாகத் திட்டங்களை வரையறுக்கும் இந்திய இணைய நிர்வாக அமைப்பின்(ஐஐஜிஎப்) முயற்சிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு இணைய நிர்வாகத் திட்டங்களை வரையறுக்கும் இந்திய இணைய நிர்வாக அமைப்பின்(ஐஐஜிஎப்) முயற்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இணைய நிர்வாகம் குறித்த இந்திய இணையதள நிர்வாக அமைப்பின்(ஐஐஜிஎப்) 3 நாள் ஆன்லைன் நிகழ்ச்சியை மின்னனுவியல் &  தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இந்திய தேசிய இன்டர்நெட் எக்சேஞ்(நிக்ஸி)  இணைந்து நடத்தியது.  இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘இணைய நிர்வாகத் திட்டங்களை வரையறுக்கும் இந்திய இணைய நிர்வாக அமைப்பின்(ஐஐஜிஎப்) முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.  இதன் இறுதிநாள் நிகழ்ச்சியில், மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது: டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இணையதளத்தை வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும் உருவாக்க வேண்டும். அதிகளவிலான மக்கள் இணையதளத்துடன் இணைந்திருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவாகி வருகிறது. இங்கு 800 மில்லியன

ரூபாய் 3.12 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் சென்னை வெளிநாட்டு தபால் நிலையத்திற்கு வந்த பார்சல்களில் இருந்து பறிமுதல்

ரூபாய் 3.12 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் சென்னை வெளிநாட்டு தபால் நிலையத்திற்கு வந்த பார்சல்களில் இருந்து பறிமுதல் சென்னை வெளிநாட்டு தபால் நிலையத்திற்கு வந்த 52 எம்டிஎம்ஏ மாத்திரைகள், 5 கிராம் மெத் கிரிஸ்டல் மற்றும் 128 கிராம் கஞ்சா கொண்ட மூன்று பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. நெதர்லாந்தில் இருந்து வந்த முதல் இரண்டு பார்சல்களும் மதுரையில் வசிக்கும் இரு வேறு நபர்களின் பெயருக்கு அனுப்பப்பட்டிருந்தன. முதல் பார்சலைத் திறந்து பார்த்தபோது, ​​எம்டிஎம்ஏ என சந்தேகிக்கப்படும் மொத்தம் 28 கிராம் எடை கொண்ட 52 பச்சை நிற மாத்திரைகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ 2.6 லட்சம் ஆகும். இரண்டாவது பார்சலில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 5 கிராம் மெத் கிரிஸ்டல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  மூன்றாவது வழக்கில், அமெரிக்காவிலிருந்து வந்த பார்சல் சென்னையைச் சேர்ந்த நபருக்கு அனுப்பப்பட்டு, "பெண்களுக்கான அத்தியாவசியப் பரிசு" என்று அதன் மேல் குறிப்பிடப்பட்டிருந்தது. சோதனையிட்டதில், 128 கிராம் கஞ்சா பார்சலில் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

திரைப்பட நடன இயக்குனர் கே. சிவசங்கர் காலமானார்.

திரைப்பட நடன இயக்குனர் கே. சிவசங்கர் காலமானார். பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பணியாற்றிய 800 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்தவர்                    பூவே உனக்காக (1996), துவங்கி பாகுபலி போன்ற படங்களுக்கு சிறந்த நடனாசிரியர்.  எஸ். எஸ். ராஜமௌலியின் வரலாற்று நாடகத் திரைப்படமான மகதீரா (2008) படத்தில் பணியாற்றியதற்காக சிறந்த நடனத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். "தீரா தீரா தீரா" பாடலில் "புதுமைகளை காட்டியதக்கு பரிசு வழங்கப்பட்டது.2003 ஆம் ஆண்டில், திருடா திருடி படத்தின் புகழ்பெற்ற பாடலான மன்மத ராசா பாடலில் அதி விரைவான நடனம் குறித்து பரவலாக பேசப்பட்டது. 2003 ஆம் ஆண்டில், பெங்களூரில் உள்ள நியூ இன்டர்நேஷனல் கிறிஸ்டியன் பல்கலைக்கழகத்தில் நடனத்திற்கான சேவைகளுக்காக இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. சிவசங்கர் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கே. எஸ். ரவிக்குமாரின் வரலாறு (2006) படத்தில் அஜித் குமாரின் நடன ஆசிரியராக நடித்தார். நடனக் காட்சிகளை வடிவமைக்க நடன இயக்குனரிடம் கேட்கப்பட்டது, மேலும் படத்தில் அதிரடி காட்சிகளையும் அஜித்தின் பெண்மை துலங்கு