முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்மீக அரசியலுக்கான தலைப்பாகையா தீர்ப்பு, விமர்சனத்தில் உண்மை உண்டா

              நடிகர் ரஜினிகாந்த்க்கு ரூ.66.22 லட்சம் அபராதம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராதம் என்பதால் வழக்கை வருமான வரித்துறை திரும்பப் பெற்றது.2002-2005 வரையிலான 3 நிதியாண்டுகளில் ரஜினி காந்த் முறையாக வருமானவரி செலுத்தவில்லை என ரூ.66.22 லட்சம் அபராதம் விதித்தது வருமான வரித்துறை.அபராதத்தை ரத்து செய்து வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு.அந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு வாபஸ்! உண்மை வருமான வரித்துறையை அவதூறு செய்யும்  நோக்கத்துடன் பொது ஊடகங்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றன. இந்த நிவாரணம் ரஜினி காந்திற்கு குறிப்பிட்டதல்ல, அத்தகைய நிவாரணம் எந்தவொரு தனிநபருக்கும் வழங்க முடியாது  விஷயத்தின் உண்மை எதுவென்றால், வருமான வரித் துறை. கடந்த இரண்டு ஆண்டுகளில், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பல வகையில்  நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளை கணக்கில் கொண்டு வழக்குகளை குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்தது. உண்மையில் கடந்த ஜூன் மாதம், மோடி அரசு முடிவு செய்தது மேல்முறையீடுகளை தாக்கல் செய்வதற்க

போராட்டம், பேரணிகளுக்குத் தடைவிதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உண்டு- உயர்நீதிமன்றம்

                போராட்டம், பேரணிக்கு தடைவிதிக்க காவல் ஆணையருக்கு அதிகாரம் உண்டு சென்னை உயர்நீதிமன்றம் பதில் முறையற்ற போராட்டங்கள் மற்றும் அனுமதியற்ற பேரணிகளுக்கு தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது, அனுமதியின்றி போராட்டங்கள், மனித சங்கிலி உள்ளிட்டவை நடத்த தடை விதித்தும், 5 நாட்களுக்கு முன்னரே அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  சட்டம் ஒழுங்கைகஹ காக்க வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாக நீதிபதி தெரிவித்து  விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது .

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நாணயம் வெளியீடு

      சத்துணவு தந்த சரித்திர நாயகன், பொன்மனச்செம்மல், மறைந்த தமிழக முதலமைச்சர், மாண்புமிகு எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு உருவம் பொறித்த சிறப்பு நாணயம் மத்திய அ ரசு வெளியிடு...

 வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் -அறிக்கை

           வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் -அறிக்கை  தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாறுதல் பற்றி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது விந்தையாக உள்ளது. நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிமாற்றம் செய்வது எல்லா ஆட்சிக்காலங்களிலும் நடந்து வரும் நிகழ்வு ஆகும். இதற்கு உள்அர்த்தம் கற்பித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எத்தனையோ ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அவ்வப்போது பணிமாற்றம் செய்தது நடக்காத நிகழ்வா என்ன?. இவற்றுக்கு எல்லாம் மேலாக, அப்போதைய அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பணியாற்றிய உமாசங்கரை அப்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.வின் குடும்பம் நடத்திய தனியார் தொலைக் காட்சிக்கு சாதகமாக இல்லை என்ற காரணத்தால் தற்காலிக பணிநீக்கம் செய்ததையும், கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் முடக்கப்பட்டதையும் அன்றைக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்டார். அதனை மக்கள் இன்னும் மறக்கவில்லை, மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டு பேசுவது

குன்னூர் பெண்ணுக்கு கனடாவில் நடந்த கொடுமை

          நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள புரூக்லேண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சலின் ரேச்சல். 23 வயத இளம்பெண்.. கனடா நாட்டில் டொரன்டோ நகரில் உள்ள பல்கலைகழகம் ஒன்றில் அறிவியல் பாடப்பிரிவில் உயர்கல்வி படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஆஞ்சலின், வழக்கம் போல் பல்கலைகழகத்திற்கு சென்று படிப்பை முடித்துவிட்டு சாயகாலம் வீட்டிற்கு செல்ல கிளம்பினார்.. லெய்ட்ச் அவின்யூ அசினிபோயினே ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த ஒரு மர்மநபர் ஆஞ்சலினாவை தரதரவென கொஞ்ச தூரம் இழுத்து போனார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஆஞ்சலினை கண்மூடித்தனமாக சரமாரியாக குத்த ஆரம்பித்தார்... தலை, கழுத்து, வயிறு என எல்லா இடங்களிலும் சரமாரியாக குத்தினார்.. கண்ணிமைக்கும் நேரத்தில் இது நடந்துவிட்டது.. ஏஞ்சலினா கழுத்தில் அந்த கத்தியே இறங்கிவிட்டது.. ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்தது கீழே விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் சொல்லவும், விரைந்து வந்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.. இப்போது ஏஞ்சலினா உயிருக்கு போராடி வருகிறார்.. அவருக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வரு

சீன மருத்துவக்கழிவுக் கப்பலை அனுமதிக்க வேண்டாம்- மருத்துவர் ச. ராமதாஸ் ட்வீட்

            உலகமெங்கும் சீன வைரஸ் ஒன்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சீனாவிலிருந்து மருத்துவக்கழிவுகளுடன் கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்துக்கு வந்திருப்பதை பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். மருத்துவக் கழிவுகளுட ன் சென்னை கடலுக்கு வந்துள்ள சீனக் கப்பலை துறைமுகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது. மருத்துவக் கழிவுகளை இறக்க அனுமதிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். உடனடியாக சீன மருத்துவக் கழிவு கப்பலை சென்னை கடல் பகுதியில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு ஆணையிட வேண்டும்!    சீன மருத்துவக்கழிவுக் கப்பலை அனுமதிக்க வேண்டாம்- மருத்துவர் ச. ராமதாஸ் ட்வீட்

தமிழகத்தின் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியீடு- தலைமைத் தேர்தல் அதிகாரி

        ஜனவரி 4,5,11,12 ஆகிய நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 687 வாக்குப்ச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், திருத்தம் செய்ய இதுவரை 17 லட்சத்து 1 ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் புதிதாக பெயர் சேர்க்க 13 லட்சத்து 16 ஆயிரத்து 921 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 454 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 439 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.  பெயர் நீக்கம் செய்ய படிவம் 7 ல்  1 லட்சத்து 2 ஆயிரத்து 210 பேரும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்க்கொள்ள படிவம் 8 ல் 1 லட்சத்து 73 ஆயிரத்து 926 பேரும், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 A ல் 1 லட்சத்து 8 ஆயிரத்து 548 பேர் என மொத்தம் 17 லட்சத்து ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ள நிலையில் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களும், இதர பணி நாட்களில் பெறப்படும் விண்ணப்பங்களும் இணைந்து பரிசீலிக்கப்பட்டு இறுத

நஷ்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் ரூ.715 கோடி இழப்பு

           சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு கடந்த  2018-2019 நிதியாண்டில் ரூ.715 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக  ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எளிதில் சென்று வர வசதியாகவும் மெட்ரோ ரெயில் சேவை கொண்டு வரப்பட்டது. இதன்படி சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான முதலாவது வழித்தடத்திலும்23.1 கி.மீ., சென்டிரலில் இருந்து புனிததோமையார்மலை (தாமஸ்மவுண்ட்) வரையிலான 2வது வழித்தடத்திலும் 22 கி.மீ. தூரம், மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. முதலாவது வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை விரிவாக்கப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த வருட மத்தியில் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரெயில்களில் தினமும் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஐதராபாத், மும்பை, கொச்சி, குர்கான், டெல்லி, பெங்களூரு நகரங்களில் இயங்கும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் கடந்த 2018-19 ம் ஆண

வெளிநாடு வாழ் இந்தியர் திரும்பி வந்த பின் ஒரு வில்லங்கப்புகார்

         'எப்போது போன் செய்தாலும் நர்மதா போன் பிஸிதான். அங்கதான் டவுட் வந்துச்சு.. ராஜேஷ்தான் காரணம். சில சமயம் என் போனை எடுக்கவே மாட்டார்.. இங்க தான் எனக்கு டவுட் ஆரம்பிச்சது, பணம் எல்லாமே போச்சு..   எஸ்.ஐ ராஜேஷூடன் மனைவி நர்மதாவுக்கு உள்ள கள்ளத் தொடர்பு பற்றி புலம்பும் வெளிநாட்டிலிருந்து வந்த கணவர்.. பேரதிர்ச்சியில் ! சென்னை கேகே நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மனைவி நர்மதா. இந்த தம்பதியினருக்கு இருகுழந்தைகள் உள்ளனர். ஜனார்த்தனன் துபாயில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சென்னையில் தனியாக இருந்த நர்மதாவிற்கு திருநின்றவூர் போலீஸ் எஸ்ஐயுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும் பணம் அனைத்தையும் அந்த எஸ்ஐயிடம் கொடுத்து விட்டதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த ஜனார்தனுக்கு மனைவியின்  மீது சந்தேகம் ஏற்பட்டு தொடர்ந்து ஜனார்த்தனன்  கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில் நர்மதா எஸ்ஐ இருவரும் தனியாக சந்தித்தபோது அவரை பின்தொடர்ந்த ஜனார்த்தனன்  புகைப்படமும் எடுத்துள்ளார். பின்னர் அதைக் கொண்டு அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில

மகளுக்கு மாற்று மதத்தவர் டார்ச்சர்' கொடுத்ததை தட்டிக் கேட்டதால், பா.ஜ.,க பிரமுகர் வெட்டிக் கொலை

      மகளுக்கு மாற்று மதத்தவர் டார்ச்சர்' கொடுத்ததை தட்டிக் கேட்டதால், பா.ஜ.,க பிரமுகர் வெட்டிக் கொலை .... கொலையாளிகளை கைது செய்யக் கோரி, பா.ஜ.,வினர், அரசு மருத்துவமனை முன், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி, வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயரகு, 39. பா.ஜ.க,வின் பாலக்கரை மண்டல செயலாளரான இவர், காந்தி மார்க்கெட் பகுதியில், வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணியிலிருந்தார். நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, 'மார்க்கெட்'டில், உப்புப்பாறை பகுதியைச் சேர்ந்த முகமது பாபு, 20, அங்கு வந்து. விஜயரகுவுடன் தகராறு செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகமது பாபுமறைத்து வைத்திருந்த அரிவாளால் விஜயரகுவை கால் மற்றும் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பி ஓடி விட்டார். காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி விஜயரகு இறந்தார். சம்பவம் தொடர்பாக, காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தினர். 10ம் வகுப்பு படித்து முடித்து, வீட்டிலிருந்த விஜயரகுவின் மகளை, முகமது பாபு ஒருதலையாக காதலித்துள்ளார். மகள் வெளியில் சென்றபோது வழிமறி

போக்குவரத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் மோதலால் அடித்து உடைக்கப்பட்ட சுங்கச்சாவடி

            செங்கல்பட்டு பரணூர் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டுள்ளது  அதை முற்றிலுமாக சீரமைக்க ஒரு வாரமாகும் அது வரை அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள்.  பிரச்சினைக்கு மூலகாரணம் அரசுப்பேருந்து ஓட்டுனர் ஒருவரிடம் சுங்கக் கட்டணத்தை டோல்கேட் ஊழியர் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஏற்கனவே எடுத்தாகி விட்டது என்று சொல்லி இருக்கிறார். இதனை தொடர்ந்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மனித தாக்குதலில்  போய் முடிந்துள்ளது. வடநாட்டிலிருந்து வந்து பணியாற்றும் ஊழியரான அவர் அரசு பேருந்து ஓட்டுனரை கடுமையாக தாக்கியுள்ளார்.யார் மீது தவறோ?  சுங்கச்சாவடியில் காத்திருந்த மற்ற அரசுப்பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களும் பாதிக்கப்பட்ட ஓட்டுனருக்கு ஆதரவாக தட்டிக் கேட்க ஆரம்பிக்கவே சிறிது நேரத்தில் டோல்கேட் முழுவதுமாக அடித்து நொறுக்கப்பட்டதுநடந்திருப்பது மிகப்பெரிய  வன்முறை. சட்டப்படி பெரிய குற்றமே. என்றாலும் பல விஷயங்களை ஆராய வேண்டிய அளவுக்கு இந்த சம்பவம் வித்திட்டுள்ளது.. வாகன ஓட்டிகளிடம் அவற்றில் பயணிப்பவர்களிடமும் எதனால் இந்த ஆவேசம்? காரணங்களைவெகு சுல

குரோனா எனப்படும் ஒளிவட்ட வைரஸ் உலகமுழுவதும் எச்சரிக்கை நடவடிக்கை

          சீனாவில் கொரோனா வைரஸ் எதிரொலி... தொடர்ந்து அதிகரிக்கும் உயிர் பலி. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர்.  பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர். பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களுக்கு பரவியது.  பாம்புகளிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றியிருக்கலமா என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் இறைச்சியை தவிர்க்குமாறு அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  அறிகுறிகளாக மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை புண் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிற, மேல் சுவாச நோய்த்தொற்றுகளை போலவே, கொரானா அறிகுறியும் ஒத்திருக்கின்றன, எனவே வைரஸை அடையாளம் காண்பது சற்று கடினமாகிறது. இருமல் மற்றும் சளி போன்ற வழக்கமான அறிகுறியாக இருந்தாலும், காய்ச்சல் நீடித்தால் தாமதிக்காதீர். நீங்கள் கொரோ

முருகப்பா குழுமத்தில் பதவிப் போட்டியில் திருமதி வள்ளி அருணாசலம்

          டேர் மாளிகை  சென்னையிலுள்ள ஓர் எழில்படுக் கட்டிடம் ஆகும். இதில் தற்போது முருகப்பா குழுமத்தின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. 1938க்கும் 1940க்கும் இடையில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் வில்லியம் டேர் என்ற ஆங்கிலேய அதிகாரியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. வில்லியம் டேர் 1819-1838 காலகட்டத்தில் பாரி & கோ நிறுவனத்தின் ஒரு பங்காளியாக இருந்துள்ளார். இதனாலேயே இந்தக் கட்டிடம் அமைந்துள்ள ஜார்ஜ் டவுன் பகுதி பரவலாக பாரி முனை என வழங்கப்படுகின்றது. தற்போது ஈஐடி பாரி நிறுவனம் முருகப்பா குழுமத்தின் முதன்மை நிறுவனமாக விளங்குகின்றது.  இந்தக் கட்டிடம் உள்ள பகுதி முன்பு முத்தையால் பேட்டையின் பகுதியாக இருந்தது. 1758-59இல் கர்நாடகப் போரில் புனித ஜார்ஜ் கோட்டை முற்றுகையின் போது இங்குதான் பிரெஞ்சுப் படைகளின் பீரங்கிகள் வைக்கப்பட்டிருந்தன. போர் முடிவடைந்த பிறகு மீண்டும் இத்தகைய நிலை ஏற்படாதிருக்கும் பொருட்டு இங்கிருந்த கருப்பர் நகரம் முற்றிலுமாக தரை மட்டமாக்கப்பட்டு திறந்தவெளி உருவாக்கப்பட்டது. எஸ்பிளேடு என அழைக்கப்பட்ட இப்பகுதியை ஆறு எல்லைக் கம்பங்களைக் கொண்டு அடையாளமிட்டனர். இதில் தற்போது ஐந்து அழிந்து

புகார் மனுக்கள் 30 நாட்களில் தீர்வு

  முப்பது  தினங்களுக்குள் கொடுக்கும் புகார் மனுக்களுக்கு தீர்வு காணவேண்டும்;  கூடுதல் நாட்கள் தேவைப்பட்டால் அதனை மனுதாரரிடம் தெரிவிக்க வேண்டும்.  அரசாணை எண்:73 ஆனால் அதன்படி இதுவரை கொடுக்கும் மனுக்கள் பரிசீலனைக்கு வருவதில்லை அதுவே ஊழலுக்கு வழிவகுக்கும் நிலை தொடரக் காரணமாகிறது.

காவல்துறை ஆய்வாளர் என்ன ஆனார்.காணாமல் போனது உண்மை தானா

                            தூத்துக்குடி மாவட்டத்தில் டிஎஸ்பி.,யுடன் சண்டையிட்ட இன்ஸ்பெக்டர் ஒருவர் குறிப்பு எழுதி வைத்து விட்டு, மாயமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வருபவர் சுரேஷ். இவர் செய்துங்க நல்லூர் காவல் நிலையத்துக்கு ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் பணியில் இல்லை என்றும், அவர் அங்கு சரிவர காவல் பணிகளை மேற்கொள்வது இல்லை என்றும் குற்றச்சாட்டி காவல் நிலைய பொதுக் குறிப்பேட்டில் எழுதி வைத்து விட்டுச் சென்றார்.  அதற்கு பதிலடியாக, காலை 6:50க்கு பணிக்கு வந்த தன்னை 7:15 மணிக்கு டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு குறிப்பிட்ட வழக்கின் குற்றவாளிகளை பிடிக்க அறிவுறுத்தி வெளியே அனுப்பி வைத்ததாக, ரெகுராஜன் ஒரு குறிப்பை எழுதி வைத்து விட்டு போலீஸ் ஸ்டேசனில் இருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும், காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னை திட்டமிட்டு பழிவாங்குவதாகவும், புறக்காவல் நிலையம் கட்டுவதற்கு ஸ்பான்சர்களை பிடிக்க சொல்லி தொல்லை செய்வதாகவும், டிஎஸ்பி.,யின் டார்ச்சரால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள

சி பி ஐ யில் புதிய வேலை வேலை வாய்ப்புகள்

         சி பி ஐ யில் 2020 ம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு  ஆட்சேர்ப்பு  -30 பதவிகள்  சென்ட்ரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனில் புலனாய்வாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களுக்காக  சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி  21.02.2020  பதவி மற்றும் காலியிடங்கள்: பயிற்சியாளர்கள் - 30 அத்தியாவசிய தகுதி:  பட்டதாரி / முதுகலை அல்லது ஆராய்ச்சி மாணவராக இருக்க வேண்டும். நிச்சயமாக. கல்வித் தகுதிக்கு விளம்பரம் சரிபார்க்கவும். வயது எல்லை: வயது வரம்பு மற்றும் தளர்வுக்கான அறிவிப்பை சரிபார்க்கவும். தேர்வு செயல்முறை: தேர்வு நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். விண்ணப்ப முறை: ஆஃப்லைன் பயன்முறை வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். முகவரி: தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பின்வரும் முகவரிக்கு விரைவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும் காவல்துறைக் கண்காணிப்பாளர் (பயிற்சி), சிபிஐ அகாடமி, ஹப்பூர் சாலை, கம்லா நேரு நகர், ஹாஜியாபாத், உத்தரப்பிரதேசம் - 201002 க்கு விண்ணப்பிக்கலாம்: அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbi.gov.in க்குச் சென்று பார்க்க  “ஆட்சேர்ப்பு” என்பதைக் கிளிக

8 ம் நூற்றாண்டிலேயே அய்யனாருக்குப் பூனூல் உண்டு

       என்னதான் ஆயிற்று தமிழகத்துக்கு என்று தெரியவில்லை? அடிப்படை அறிவோ? அல்லது எதை பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பாத தற்குறியெல்லாம் எல்லாற்றிற்கும் நீதி சொல்கிறார்கள். குடியரசு தினத்தில் தமிழக சார்பாக கொண்டு வரப்பட்ட ஐயனாருக்கு எப்படி பூணூல் வந்தது என நக்கல் செய்து கொண்டுள்ளது ஒரு கும்பல்.இவர்கள் வாழ்நாளில் என்றாவது ஐயனார் கோவிலுக்கு போயிருப்பார்களா என்று தெரியவில்லை. Iconography என்ற ஒன்று இருப்பது இவர்களுக்கெல்லாம் தெரியுமா? தெரியாதா? என புரியவில்லை.எல்லா தெய்வங்களுக்கும் உள்ள அடையாளங்கள்,தோற்றங்க ள் சேகரித்து வைத்துள்ளார்கள்.தமிழ்நாட்டில் மிக பழமையான 8-10 ம் நூற்றாண்டு ஐயனார் சிலைகள் கூட கிடைத்துள்ளது. ஐயனார் கிழக்குத் திசை நோக்கி பார்த்திருப்பார் பெரும்பாலும்.மார்பில் பூணூல் அணிந்திருப்பார்.இளைஞராக இருப்பார் இதற்கு பொருள் சிலப்பதிகாரம் சொல்கிறது.மாலதி என்னும் அந்தணப் பெண்ணினால் ஒரு குழந்தை இறந்து போக,அவள் பாசண்ட சாத்தனான ஐயனாரை வேண்டுகிறாள். அவள் துயர் துடைக்க அந்தச் சாத்தன் குழந்தையாக அவதரித்து,பின் அந்தணச் சிறுவனாக வளர்ந்து,அதன் பின் கண்ணகியின் தோழியான தேவந்தி என்பவளை மணந்து அ

தஞ்சைக் குடமுழுக்குக்கு மொழிக்காரணம் தேடும் நாத்தீகவாதிகள்.. ..

23 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்காக கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் குடமுழுக்குக்கான யாகசாலை பூஜை வரும் 1-ம் தேதி தொடங்க உள்ளது.இராஜராஜ சோழன் மெய்கீர்த்தியில் கூட சமஸ்கிருதவார்த்தைகள் உண்டு  'திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்குயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளுர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கை நாடுங் கங்கை பாடியும் தடிகைபாடியும் நுளம்பபாடியும் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை புகழத்தர ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்னெழில் வளரூழியுனெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோ ராஜகேசரி வர்மரான ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு........'           இந்த மெய்க்கீர்த்தியானது  இராஜராஜனது புகழை எடுத்தியம்பி நிற்கிறது. இராஜராஜனை திருமாளோடு ஒப்பிடுவதாகும்ஆகமங்களைப் பற்றித் திருமூலரின் திருமந்திரத்தில் முதல் தந்திரத்திலேயே வேதத்தின் சிறப்பைப் பற்றி 6 பாடல்களும், அதற்குப் பின்னர் ஆகமச் சிறப்பு என்ற தலைப்பிலே 10 பாடல்களும் வருக

தொடர்ச்சியாகப் பிடிபடும் தேர்வு மோசடிக்கும்பலின் முகமூடிகள்

           அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வில் பெருமளவில் முறைகேடு நடந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர் ராமநாதபுரம் வந்து விசாரித்ததில் மோசடி உறுதி செய்யப்பட்டு, அதன் அறிக்கை டி.ஜி.பி.யிடம் வழங் கப்பட்டது. பின்னர் இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து நேற்று முன்தினம் 3 பேரும்,  அதிரடியாக கைது செய்யப்பட்ட னர். மேலும் சிலரை விசாரணைக்காக அழைத்து விசாரிக்க  ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில்தான் இந்த முறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததால், அதன் பெறுப்பாளர்களான 2 தாசில்தார்களிடம் சென்னையில் தீவிரமாக விசாரிக்க இந்த மோசடி பற்றி நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டு அதற்கேற்ப செயல்பட்டு, கச்சிதமாக அரங்கேற்றி உள்ளதும் அம்பலமாகி உள்ளது.புரோக்கர்கள் மற்றும் ஒரு பிரபல பயிற்சி மையத்தின் ஆலோசனையின்படியே ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களை மோசடிக்கு பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அவர்களை அணுகிய தேர்வர்களுக்கு ஆலோசனை அளித்து அந

ஆந்திர சட்டக்கல்லூரி முறைகேடுகள்

           போலி வக்கீல்கள் பட்டியல் ரெடி:  தாமாக முன்வந்து சான்றிதழை ஒப்படைத்தால் தப்பித்தீர்கள்:  இல்லையேல் கைது , பார்கவுன்சில் எச்சரிக்கை ஆந்திராவில் வக்கீல் பட்டத்தை பணம் கொடுத்து பெற்றவர்கள் குறித்த புகாரில் ஆந்திர சட்டக்கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டார், போலி வக்கீல்கள் சான்றிதழை சரண்டர் செய்தால் கைது நடவடிக்கையிலிருந்து தப்பலாம் மீறினால் கடும் நடவடிக்கை என பார்கவுன்சில் எச்சரித்துள்ளது. கல்லூரிக்குச் செல்லாமலேயே வக்கீல் பட்டம் பெறவும், ரெகுலராக கல்லூரிக்கு வந்ததாக போலி சான்றிதழ் வழங்கி பல போலி வக்கீல்களை உருவாக்கிய ஆந்திரா கல்லூரி முதல்வரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போலி வக்கீல்களை இனங்காணும் வேலையும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறியதாவது: “சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகர் வேகவதி தெருவை சேர்ந்த விபின்(59). தென்னக இரயில்வே துறையில் கார்டாக வேலை பார்த்து வந்தார்.  பணியிலிருக்கும் போதே துறையின் அனுமதியின்றி ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள சட்ட கல்லூ

ஒரே நாடு - ஒரேகார்டு

              திட்டத்தால் பொது விநியோக முறைக்கு சாதகமா,பாதகமா.                இந்தத் திட்டத்தின் முக்கியமான அம்சம், portability. இப்போது உணவு தானியங்களை வழங்குவது என்பது மாநில அரசிடம் இருக்கிறது. ஒவ்வொரு மாநில அரசும் தனது கொள்கைக்கு ஏற்றபடி இந்த உணவு தானியங்களை நியாய விலைக்கடைகளில் வழங்குகின்றன. தென்மாநிலங்களில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. யாருக்கெல்லாம் குடும்ப அட்டை இருக்கிறதோ, அவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள வேறு பல மாநிலங்கள் இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தார்கள். யாருக்குக் கொடுக்க வேண்டுமென்பதை முடிவுசெய்து, அவர்களுக்கு மட்டும் பொருட்களைக் கொடுப்பார்கள். இதுதான் தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு. ஆனால், இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பல மாநிலங்களில் பொது விநியோகத் திட்டமே செயல்படவில்லை என்பதுதான். இந்த ஏற்றத் தாழ்வுகளைக் களையத்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால்  2013 ம் ஆண்டு உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்ட