முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் ஓய்வூதிய இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்பு

 "ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக அனைத்து ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் ஓய்வூதிய இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்படும்" - ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை செயலாளர் "ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக, அனைத்து ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் ஓய்வூதிய இணைய தளங்கள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் ஒருங்கிணைந்தக ஓய்வூதியதாரர்கள் வலைதளத்தில் ஒருங்கிணைக்கப்படும்" என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை செயலாளர் திரு வி ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார். ஏப்ரல் 26 அன்று பாங்க் ஆஃப் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்களின் போர்ட்டலின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், ஓய்வூதியதாரர்களின் நலனை மேம்படுத்த 'ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை' பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தல் அத்தகைய ஒரு முயற்சியாகும், இது டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்கள் மற்றும் பவிஷ்யா போர்ட்டல் போன்ற பல்வேறு வழிகளில் செயல்படுத்தப்படுகிறது என்று கூ

வாட்ஸ் ஆப்பில் ஆபாச வீடியோ சிக்கலில் சிக்கிய வட்டாட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தாசில்தாராக இருப்பவர் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம், தற்போது ஒக்கூரில் வசித்து வருகிறார், இவர் ஒரு பெண்ணுடன் ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. சம்பந்தப்பட்ட உல்லாச வீடியோவை அரசுத் துறை சார்ந்த வட்டாட்சியரான அவரே வாட்சப் செயலியில் ஸ்டேட்டஸாக வைத்திருந்ததாககூறப்படுகிறது. தாசில்தாரின் வாட்ஸ் ஆப் செயலியிலிருந்து டவுன் லோட் செய்து, வீடியோவை சமூக வலைதளங்களில்பலரும் பகிர்ந்து வருவதாகத் தெரிகிறது. மேலும் குறிப்பிட்ட வீடியோவில் சிக்கியவருக்குச் சிக்கல் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்பவர் என்பதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகங்கை மாவட்ட உயர் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். ஆபாச வீடியோவை பொது இடத்தில் பலரும் பார்க்கும் படி பகிர்ந்த குற்றத்திற்காக தாசில்தார் ராஜரத்தினம் மீது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தானாக முன்வந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிக்காத நிலையில், இது போன்ற வ

அரசுத் துறைகளில் உள்ள பெயர்களை தனியார் வாகனங்களில் பயன்படுத்துவதை மட்டுமே தடை செய்யலாம் அதுவே உண்மையான மோசடி

அணைத்துத் துறைகளிலும் போலியானவர்களும் மோசடிப் பேர்வழிகளும் உண்டு . நான் பத்திரிகையாளன். அதனால் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் உள்ள ஜனநாயக உரிமை. ஒருவர் வழக்கறிஞர் அவர் பயன்படுத்தும் வாகனத்தில் வழக்கறிஞர் என்ற அடையாளத்தை பொறித்துக்கொள்வது அவர் உரிமை. ஒருவர் மருத்துவர்.என அவரை அடையாளப்படுத்திக் கொள்வது அவரது உரிமையும் கடமையும். இதுபோன்று அரசு சாராமல் தனது துறைகளை அடையாளப்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது அதற்கு உரிமையுமில்லை. தீவிபத்து நேர்ந்து விட்டது என்பதால் யாரும் வீட்டில் சமையல் செய்யக்கூடாது என்பதைப்போல இருக்கிறது சென்னை காவல்துறையின் இந்த அறிவிப்பு. PRESS, ADVOCATE, DOCTOR, ENGINEER  என்று வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாத பகுதியில் எழுதி வைத்துப் போனால்  காவல்துறை நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்று நினைப்பதாக யார் சொன்னது? இதனால் சிறப்பு சலுகை எங்காவது கிடைக்கிறதா.      சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதிலையா? காவலர்கள் எப்போது வேண்டுமானாலும் உண்மைத்தன்மையை சோதனையிடலாம். சோதனை செய்யக்கூடாது என்று யார் சொன்னது? போலியாக இது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு சுற்றுபவர்களுக்கு ஜாமீன் இல்ல

முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தில் குழப்பம் பேரன் வீடியோ ஏற்படுத்தும் திகில்

முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தில் மகன்கள் ரேவண்ணா, முன்னாள் முதல்வர் குமாரசாமி இடையில் எப்போதுமே மோதல் தான். மண்டியா தொகுதியை குமாரசாமியும் ஹாசன் தொகுதியை ரேவண்ணாவும் 'பங்கு' போட்டுக் கொண்டது போலவே தான் அரசியல் நடவடிக்கைகள் எப்போதுமிருக்கும். ஹாசன் தொகுதிக்குள் குமாரசாமி நுழைவது கிடையாது; மண்டியா பக்கம் ரேவண்ணா போவது கிடையாது. தற்போது ரேவண்ணா மகன் பிரஜ்வல், ஆபாச வீடியோவில் சிக்கியிருப்பதும் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்பதும் சித்தப்பா குமாரசாமிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்கிறது அக்கட்சி வட்டாரங்கள். தற்போது பிரஜ்வல் வீடியோக்கள் தொடர்பாக கர்நாடக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதை நாங்கள் வரவேற்போம். பிரஜ்வல் ரேவண்ணா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை மேலிடம் தான் முடிவெடுக்கும். தற்போதைய நிலையில் மாநில அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு ஜி டி தேவே கவுடா தெரிவித்தார். பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் எந்தக் கருத்தும் தெரிவிக்கமாட்டோமென ப

நிா்மலாதேவி வழக்கில் தீர்ப்பு குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம்

நிா்மலாதேவி வழக்கில் தீர்ப்பு குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம். மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியா் முருகன், ஆய்வு மாணவா் கருப்பசாமி ஆகியோா் நிர்மலா தேவி வழக்கில் கைது செய்யப்பட்டனா். பின்னா், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு தொடா்பாக அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 2 வது மற்றும் 3 வது நபர்களான பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீதான குற்றச்சாட்டுகளில் போதிய ஆதாரமில்லாததால் வழக்கில் இருந்து இருவரும் விடுவிப்பு .      தீர்ப்பு நாளான ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி ஏப்ரல் 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும்” எனத் தெரிவித்த

கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை நடந்த பின்னணி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்து வந்தவர் கருப்புசாமி அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக மக்கள் மித்திரன் மணி மற்றும் கிராம உதவியாளர் எனும் தலையாரி சித்ரா ஆகியோரை மரண வாக்குமூலமாக எழுதியதாக கூறப்படும் கடிதத்தின் அடிப்படையில் கோமங்கலம் காவல் நிலையத்தினர் தேடிவந்த நிலையில்  நள்ளிரவில் தேனியில் கைது செய்யபட்டார்.  பின்னர் பொள்ளாச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மணியன் ஆஜர் படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையிலடைத்தனர். மேலும் உடுமலைப்பேட்டை வட்டம் கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கருப்புச் சாமி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. அப்போது கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி தனது கைப்பட ஒரு மரண வாக்குமூலத்தை கடிதமாக எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்ட நிலையில் கருப்புச்சாமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருவாய் துறை பணியாளர்கள் காத்திருப்புப் போரா ட்டமும் நடத்தினர். உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்தப் போராட்

குடும்பத் தகராறில் நெசவாளர் குடும்பத்தில் தீ வைப்பு மூவர் பலி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  வீரையன் கண்மாய் அருகில் உள்ள வைத்தியலிங்கபுரம் தங்கராஜ் (வயது 58). தேவாங்கர் சமூகத்தின் நெசவுத்  தொழிலாளி, கன்னடம் தாய் மொழி, நடமாடும் தேநீர் கடை நடத்தி வருகிறார் இவரது மனைவி லதா (வயது 50). இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் நவீன் (வயது 32). அவருடைய மனைவி செல்வி. இருவரும் சென்னை சிறு சேரி தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தையுள்ளது. தற்போது இவர்களும் காரைக்குடிக்கு வந்திருந்தனர். இதே போல் தங்கராஜின் இளைய மகன் ராஜேஷ். இவரும் சென்னையிலுள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தங்கராஜூவுக்கும், மனைவி லதாவுக்கும் பிள்ளைகள் தொடர்பாக அவ்வப் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவருத்தத்தில் இருந்தவர், தன் மனைவி, மகன்கள் தனது பேச்சை புறக்கணிப்பதாகக் கருதி விரக்தி அடைந்தாகக் கூறப்பட்டாலும். சம்பவம் நடந்த அன்று தங்கராஜ், மூன்று கேன்களில் பெட்ரோல் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார். இரவு அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.  அன்று அதிகாலையில் எழுந்த தங்கராஜ்

ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் ஓய்வூதிய இணையதளங்கள் ஒருங்கிணைப்பு

"ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக அனைத்து ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் ஓய்வூதிய இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்படும்" - ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை செயலாளர் "ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக, அனைத்து ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் ஓய்வூதிய இணைய தளங்கள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் ஒருங்கிணைந்தக ஓய்வூதியதாரர்கள் வலைதளத்தில் ஒருங்கிணைக்கப்படும்" என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை செயலாளர் திரு வி ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார். ஏப்ரல் 26 அன்று பாங்க் ஆஃப் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்களின் போர்ட்டலின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், ஓய்வூதியதாரர்களின் நலனை மேம்படுத்த 'ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை' பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தல் அத்தகைய ஒரு முயற்சியாகும், இது டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்கள் மற்றும் பவிஷ்யா போர்ட்டல் போன்ற பல்வேறு வழிகளில் செயல்படுத்தப்படுகிறது என்று கூ

2-ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான சிறப்பு ஏற்பாடுகள்

88 மக்களவைத் தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன மக்களவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம்  அனைத்து ஏற்பாடுகளையும்  செய்தது. இந்தத் தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் வானிலை இயல்பு நிலையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதிக வெப்பத்தை சமாளிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில்  (26.04.2024) வாக்குப்பதிவு நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் காலமானதால் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் 2-ம் கட்டத்திலிருந்து 3-ம் கட்டத்திற்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு சுமூகமாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்தது. அனைத்துக் கட்டங்களிலும் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து பொறுப்புடனும் பெரும

இந்திய பெட்ரோலிய நிறுவனம் 65-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது

இந்திய பெட்ரோலிய நிறுவனம் 65-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது நிலையான எரிசக்தி அறக்கட்டளை, எரிசக்தி, சுற்றுச்சூழல், நீர் கவுன்சில் (CEEW) மற்றும் நிலையான மேம்பாட்டு நிறுவனம் (IISD) ஆகியவற்றுடன்  எரிசக்தி அமைச்சகம் இணைந்து, நாளை முதல் (2024 ஏப்ரல் 29 முதல் ஏப்ரல் 30 வரை) 2 நாட்களுக்கு புதுதில்லியின் லோதி எஸ்டேட்டில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் "முக்கிய கனிமங்கள் உச்சி மாநாடு: பயன்கள் மற்றும் செயலாக்கத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் உச்சி மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாடு, இத்துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், அறிவைப் பகிர்வதற்கும், முக்கியமான கனிமங்களின் பயன்கள் மற்றும் செயலாக்கத்தில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் தூய்மையான எரிசக்தி இலக்குகளின் பின்னணியில் இந்த உச்சிமாநாடு நடத்தப்படுகிறது. இது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள் மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்களுக்கு அவசியமான முக்கியமான கனிம மூலப்பொருட்களின் (சிஆர்எம்) உள்நாட்டு விநியோகத்தை