லக்னோவில் டாக்டர் பீம்ராவ்.நினைவு மற்றும் கலாச்சார மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் குடியரசு தலைவர்
குடியரசுத் தலைவர் செயலகம் அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களின் படி சமுதாயத்தையும் நாட்டையும் கட்டமைப்பதில் நமது வெற்றி இருக்கிறது: குடியரசுத் தலைவர் அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களின் படி சமுதாயத்தையும் நாட்டையும் கட்டமைப்பதில் நமது வெற்றி இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறினார். இந்த திசையில் நாம் முன்னேறி இருக்கிறோம் என்று கூறிய அவர், ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்றார். லக்னோவில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவு மற்றும் கலாச்சார மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் இன்று (2021 ஜூன் 29) பேசிய அவர், அம்பதேகரின் பன்முகத்தன்மை மற்றும் தேசத்தை கட்டமைப்பதில் அவரது பங்கு ஆகியவை அவரது மிகச்சிறந்த திறன் மற்றும் திறமையை வெளிப்படுத்தியதாக கூறினார். அம்தேகர் ஒரு கல்வியாளர், பொருளாதரம் மற்றும் நீதித்துறை நிபுணர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், சமூகவியலாளர், சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்ல, கலாச்சாரம், மதம் மற்றும் ஆன்மிகத் துறைகளிலும் மிகச்சிறந்த பங்காற்றி உள்ளார். நியாயம், சமதர்மம், சுயமரியாதை மற்றும் இந்தியத்தன்மை ஆகியவை பாபாசாகேப