தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், நாம் ஒன்று சேர்ந்து வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம்- குடியரசு துணைத் தலைவர். கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், குடியரசு துணைத்தலைவர், பெரும்பாலான நாடுகள் பொது முடக்கத்துக்கு முடிவு கட்டி, பொருளாதார நடவடிக்கைளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதாகக் கூறியுள்ளார். பொருளாதாரத்துக்கு ஊக்கம் கொடுக்க அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ள அவர், ஒவ்வொருவரும், விதிமுறைகளைப் பின்பற்றி, தேவையான தடுப்பு முயற்சிகளை எடுத்து, அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னெப்போதும் கண்டிராத இந்தச் சுகாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உரிய போராட்டத்தில் மக்கள் ஒற்றுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள திரு. நாயுடு, ஆன்மீகம் மற்றும், அறிவியல் மீதான நமது நம்பிக்கையில் தான் நம் நாட்டின் வலிமை அ