திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் குண்டாறு பகுதியில் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.கொடைக்கானல் கூக்கால் கீழ் குண்டாறு பகுதியில் நகராட்சி பொது குடிநீர் கிணறு உள்ளது அந்தக் கட்டிடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளில் ஒரு புலி நடந்து செல்வது பதிவானது. அதே போல வத்தலக்குண்டு சாலையில் உள்ள குருசரடி மயிலாடும்பாறை இடையே உள்ள வனப்பகுதியிலிருந்து வந்த புலி சாலையில் கடந்தது அந்த வழியாக வந்த வாகன ஒட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில்,'' கீழ் குண்டாறு பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்துள்ளோம். புலி நடமாட்டத்தை கண்டறிய டிராப் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன'' என்றார்.
சென்னையில் நிலமோசடி செய்யும் திருட்டு அடாவடிக் குழுவினருடன் தொடர்பு வைத்துக் கொண்டு நில மோசடி அபகரிப்பு அக்கிரமப் பிரவேஷம் செய்ய முயன்றவர்களுக்குச், சாதகமாக கூலிக்கு லஞ்சமாகப் பணம் பெற்றுக் கொண்டு செயல்பட்ட அரசு பணியை நேர்மையாகச் செய்யாத குற்றச்சாட்டில் சிக்கியுள்ள காவல்துறை ஆய்வாளர் ஆனந்த்பாபு வீடு உள்ளிட்ட அவருக்குச் சொந்தமான நான்கு இடங்களில், சி.பி.ஐ., உயர் அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள் சென்னை சோழிங்கநல்லுார் பகுதியில் வசிக்கும் கார்த்திக். என்பவருக்கு, அதே பகுதியில், 18.25 சென்ட் நிலம் இருந்துள்ளது. அதை, அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், சரவணன், தேவன், சீனிவாசன் உள்ளிட்டோர், போலியான ஆவணங்கள் உற்பத்தி செய்து அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். அது குறித்து, ஆலந்துார் நீதிமன்றத்திலும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையிலும் தற்போது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. பிரச்னைக்குரிய இடத்திற்கு பட்டா வழங்கக் கூடாது என அரசு சுற்றறிக்கை உள்ளதால், கார்த்திக், நீலாங்கரை சார் பதிவாளர் அலுவலகம், சோழிங்கநல்லுார் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையி