முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய பாடத்திட்ட கட்டமைப்புக்கான கட்டாய ஆவணத் திட்டத்தை தர்மேந்திர பிரதான் தொடங்கி வைக்கிறார்.

தேசிய பாடத்திட்ட கட்டமைப்புக்கான கட்டாய ஆவணத் திட்டத்தை தர்மேந்திர பிரதான் தொடங்கி வைக்கிறார். தேசிய பாடத்திட்ட கட்டமைப்புக்கான கட்டாய ஆவணத் திட்டத்தை மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் 29 ஏப்ரல் 2022 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்.  தேசிய கல்விக் கொள்கை 2020, தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு வளர்ச்சிக்காக  பள்ளிக்கல்வி, முன்கூட்டிய குழந்தை பருவ கவனிப்பு மற்றும் கல்வி, ஆசிரியர் கல்வி மற்றும் வயதுவந்தோர் கல்வி ஆகிய நான்கு பிரிவுகளை பரிந்துரைத்துள்ளது.  கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் சி என் அஸ்வத் நாராயண், கர்நாடக ஆரம்ப மற்றும்  இடைநிலை கல்வித்துறை அமைச்சர் டாக்டர் பி சி நாகேஷ் தேசிய பாடத்திட்ட கட்டமைப்புக்கான தேசிய வழிகாட்டும் குழுவின் தலைவர் டாக்டர் கே கஸ்தூரி ரங்கன், மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவித்தல் துறை செயலாளர் திருமதி அனிதா கார்வால் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் இயக்குனர் பேராசிரியர் டி பி சக்லானி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். பாடத்திட்ட கட்டமைப்பு பணிகள் முழுவதும் காகிதமில்லா முறையில், ப

அணு விஞ்ஞானி டாக்டர் அருண்குமார் பாதுரி மறைவுக்கு இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இரங்கல்

அணு விஞ்ஞானி டாக்டர் அருண்குமார் பாதுரி மறைவுக்கு இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இரங்கல் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஹோமி பாபா இருக்கையில் பணியாற்றிவந்த விஞ்ஞானி டாக்டர் அருண்குமார் பாதுரி மாரடைப்பு காரணமாக கல்பாக்கத்தில் 27.4.2022 பிற்பகல் காலமானார். காரக்பூர் ஐஐடியில் உலோகவியல் பொறியியல் பட்டப்படிப்பும், ஆராய்ச்சி முனைவர் பட்டமும் பெற்ற டாக்டர் அருண்குமார் பாதுரி, 1983-ம் ஆண்டு டிராம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய பயிற்சி பள்ளியில் இணைந்து அணுசக்தி துறையில் பயிற்சி பெற்றார். பின்னர் 1984-ம் ஆண்டு கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்த அவர், ஜூலை 1, 2017 முதல் 31.8.2021 வரை அந்த மையத்தின் இயக்குனராக பொறுப்பு வகித்தார்.  பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் இந்த மையத்தில் உள்ள ஹோமி பாபா ஆராய்ச்சி இருக்கையில் பணியாற்றிவந்தார். பொருட்கள் இணைப்புத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அவர், சர்வதேச அளவிலான 2 காப்புரிமைகளை  பெற்றுள்ள டாக்டர் ஏ கே பாதுரி, ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் 2021

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் 2021-ன் கலாச்சார நிகழ்ச்சிகள் மிகவும் அருமை: விளையாட்டு வீரர்கள் விளையாட்டு வீரர்கள் கடினமாக உழைத்து வரும் நிலையில், அவர்களை மகிழ்வித்து, சூழ்நிலையை உற்சாகமாக வைத்திருக்கும் பொறுப்பை, பெங்களூருவில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் 2021-ஐ நடத்தும் ஜெயின் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஜெயின் பல்கலைக்கழக வளாகத்தில் 25 ஏப்ரல் 2022 முதல் 02 மே 2022 வரை நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிக்காக, அதன் அமைப்பாளர்கள் அங்குள்ள ஒரு பெரிய மைதானத்தில் மேடையை எழுப்பியுள்ளனர். நடனம், இசை மற்றும் ஃபேஷன் காட்சி உள்ளிட்டவை இந்த எட்டு நாள் நிகழ்வின் போது நடத்தப்படுகிறது. கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் 2021-ல் கலந்துகொள்ளும் அனைவரும் (விளையாட்டு வீரர்கள், குடும்பத்தினர், தன்னார்வத் தொண்டர்கள் போன்றோர்) பங்கேற்கக்கூடிய இந்த கலாச்சார நிகழ்வில், காவேரி கைவினைப் பொருட்கள், சணல் பைகள் மற்றும் இயற்கை சோப்புகள் போன்ற சுவாரஸ்யமான பொருட்களுடன் கூடிய ஏராளமான அரங்குகளும் உள்ளன. நாள் முழுவதும் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும் சமயத்தில், வளாகத

இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (செர்ட்-இன்) செயல்படுகிறது.

பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணையத்திற்கான நடைமுறைகள் மற்றும் சைபர் சம்பவங்களைப் புகாரளித்தல் தொடர்பான வழிகாட்டுதல்களை செர்ட்-இன் வெளியிட்டுள்ளது தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் 70பி பிரிவின் விதிகளின்படி, நாட்டில் இணையப் பாதுகாப்புத் துறையில் பல்வேறு செயல்பாடுகளுக்கான தேசிய நிறுவனமாக இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (செர்ட்-இன்) செயல்படுகிறது. இணைய அச்சுறுத்தல்களை செர்ட்-இன் தொடர்ந்து ஆய்வு செய்வதோடு, புகாரளிக்கப்படும் சைபர் சம்பவங்களைக் கண்காணிக்கிறது. நிறுவனங்கள் மற்றும் பயனர்களுக்கு அவர்களின் தரவு/தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப உள்கட்டமைப்பைப் பாதுகாக்க உதவும் ஆலோசனைகளை செர்ட்-இன் தொடர்ந்து வழங்குகிறது. இணையம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான அவசர நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக, சேவை வழங்குநர்கள், இடைத்தரகர்கள், தரவு மையங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல்களை செர்ட்-இன் பெறுகிறது. சைபர் சம்பவங்கள் மற்றும் தொடர்புடைய நிகழ்வுகளை கையாளும் போது, இடையூறு விளைவிக்கும் சில இடைவெளிகளை செர்ட்-இன் கண்டறிந்துள்ளது. அடையாளம் காணப்பட்ட இட

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றத் தவறிய மின்சார வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றத் தவறிய மின்சார வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து ஆணையம் உத்தரவு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மீறி செயல்பட்டு வந்த தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தாமதமாக மின் இணைப்பு வழங்கிய மனுதாரா்கள் அனைவருக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சாா்பில் 2004 ஆம் ஆண்டு தமிழகத்தில் மின்வாரியத்தில் மேற்கொள்ளப்படும் மின் இணைப்பு வழங்குதல் உள்பட அனைத்து மின்வாரியம் தொடா்பான பணிகளுக்கும் காலக்கெடு நிா்ணயித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதன் படி வீடுகளுக்கு, விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் மின் இணைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு மீட்டா் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதை மின்வாரியம் தாமதப்படுத்தி வந்தது. குறித்து கோயமுத்தூர் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் மின் இணைப்புக்காக மாதக் கணக்கில் காத்திருக்கும் பயனாளிகளுக்கு

உயர் நீதிமன்றத்திற்கு மே மாதம் கோடை கால விடுமுறை

கோடை காலம் துவங்கியதால் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும்  மதுரை கிளைக்கு மே மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கோடை கால விடுமுறையென உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் பி.தனபால் அறிவித்துள்ளார்.     மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடை காலம்.       தினசரி வெப்பநிலை சராசரியை விட அதிகமாக இருக்கும். ஆகவே பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலம் தொட்டு நீதிமன்றங்களுக்கு. மே மாதம் விடுமுறை விடப்பட்டே வந்த நிலையில் ஆண்டு தோறும் அதை பின்பற்றி விடுமுறை வழங்கிய நிலையில்  மேலும் தற்போது கொரோனா பரவல்  மூன்றாம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.  அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பலவாறான பணிகளை மேற்கொள்கிறது. இச் சூழ்நிலையில் வெயிலின் தாக்கத்தையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்னகிறதனைத் தொடர்ந்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்திற்கு மே 1 முதல் 31 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவசர வழக்க

இந்திய ரயில்வே மற்றும் சி-டாட் இணைந்து பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இதர பாதுகாப்பு சேவை

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இதர பாதுகாப்பு சேவைகளுக்காக இந்திய ரயில்வே மற்றும் சி-டாட் இணைந்து செயல்பட உள்ளன இரயில்வே அமைச்சகம், டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்துடன் (சி-டாட்) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் 27 ஏப்ரல் 2022 புதன்கிழமை அன்று கையெழுத்திட்டது. ரயில்வேயில் சி-டாட்டின் தொலைதொடர்பு தீர்வுகள் மற்றும் சேவைகளை செயல்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சி-டாட் மற்றும் ரயில்வே அமைச்சகம் இணைந்து இந்திய ரயில்வேயில் தொலைத்தொடர்புகளை நவீனமயமாக்கும் வகையில் கீழ்கண்டவற்றில் இணைந்து செயல்படும்: பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இதர பாதுகாப்பு சேவைகளுக்காக எல்டிஈ-ஆர் தொழில்நுட்பத்தை உலகத்தரத்தில் பின்பற்றுதல், மேக் இன் இந்தியா கொள்கையின்படி 5ஜி பயன்பாடு, பொருட்களின் இணையம், இயந்திரங்களுக்கான செயல்பாடுகள், ஒன்றிணைந்த நெட்வொர்க் மேலாண்மை இயக்கம், கண்ணாடி இழை கண்காணிப்பு/நெட்வொர்க் மேலாண்மை, காணொலி மென்பொருள், உரையாடல் பயன்பாடு, ரவுட்டர்கள் மற்றும் சுவிட்சுகள் ஆகிய பிரிவுகளில் இணைந்து செயல்படவுள்ளன. சி-டாட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு

ஆதிவாசி மானிய மேலாண்மை அமைப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சியை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஏற்பாடு

ஜார்க்கண்டில் ஆதிவாசிகளுக்கான உதவித் திட்டங்கள் ADIGRAMS குறித்த இரண்டு நாள் பயிலரங்கை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது பழங்குடியினர் விவகார அமைச்சகம் (MoTA) அதன் 'மக்கள் தொடர்புத் திட்டத்தின்' ஒரு பகுதியாக, அரசு திட்டங்களை முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து அடித்தட்டு நிலையில் உள்ள மக்களுக்குச் சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 27 மற்றும் 28-ம்  தேதிகளில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள  முக்கியப் பணியாளர்களுக்கு ADIGRAMS (ஆதிவாசி மானிய மேலாண்மை அமைப்பு) குறித்த இரண்டு நாள் பயிற்சியை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம்  ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள  அமைச்சகத்தின் 'திட்ட வளாகத்தில்' நடைபெற்றது. பழங்குடியினர் திட்ட அமலாக்கத்துடன் தொடர்புடைய 66 முக்கிய அதிகாரிகள், மாவட்ட நல அலுவலர்கள், மாநிலம் முழுவதும் உள்ள 24 மாவட்டங்களிலிருந்தும் திட்ட மேலாண்மை பிரிவு (PMU) மற்றும் ஒருங்கிணைந்த பழங்குடியின மேம்பாட்டுத் திட்ட அதிகாரிகள் ஆகியோர் இந்த பயிற்சியில் தீவிரமாக

அஞ்சல் துறை ஆன்லைன் மூலம் தேசிய ஒய்வூதிய திட்டம் NPS சேவைகளை வழங்குகிறது

அஞ்சல் துறை ஆன்லைன் மூலம் தேசிய ஒய்வூதிய திட்டம் NPS சேவைகளை வழங்குகிறது தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறை (DoP), தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS - அனைத்து குடிமக்களுக்கான  மாதிரித் திட்டம்), ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படும் இந்திய அரசின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை, அதன் குறிப்பிட்ட சில அஞ்சலகங்கள் மூலம் 2010-ம் ஆண்டு முதல் நேரடியாக வழங்கி வருகிறது. அஞ்சல் துறை தேசிய ஓய்வூதியத் திட்டத்தை NPS (அனைத்து குடிமக்களுக்குமான  மாதிரித் திட்டம்) 2022-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் வழங்கி வருகிறது. 18-70 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் எவரும் "தேசிய ஓய்வூதிய அமைப்பு -ஆன்லைன்" என்ற மெனு தலைப்பின் கீழ் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.indiapost.gov.in) சென்று இந்த ஆன்லைன் வசதியைப் பெறலாம். குறிப்பிட்ட இணைப்பிற்கான இணையதள முகவரி: https://www.indiapost.gov.in/Financial/Pages/Content/NPS.aspx   இந்த இணையதளத்தில் புதிய பதிவு, ஆரம்ப / அடுத்தடுத்த பங்களிப்பு மற்றும் முறையான முதலீட்டுத் திட