முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

 


தைப்பூசமும், பாலபிஷேகமும்.
(இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.
தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி
பழனியிலும்,
வடலூரிலும், 
இலங்கையிலும்,
மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு 
மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலையில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். இதற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடியும் பால்குடமும் எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு. சுங்கபத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோவிலுக்கு 272 படிகளை ஏறிவருகிறார்கள்.
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன்  அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலிலும் தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
மலேசியாவில்  ஈப்போ அருகில் குனோங் சீரோவில்  அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது .
சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச்சிறப்பாககொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்தே விழா களைகட்டும். சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும்.ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.
தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம் முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள். பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.
தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த 12 வகை திரவியங்களை எள் எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.
சாமி சிலைகளுக்கு ஏன் இப்படி விதம் - விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்? இதன் பின்னணியில் என்ன தத்துவம் - என்ன அறிவியல் உண்மை அடங்கியுள்ளது என்று நீங்கள் நினைக்கலாம்.
இதற்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால், ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும். இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.
எந்த கடவுளுக்கு, எந்தெந்த திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதனால் மக்களுக்கும், இந்த உலகுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.
அந்த வகையில் சிவனை அபிஷேகப் பிரியர் என்றும், விஷ்ணுவை அலங்காரப் பிரியர் என்றும் கூறியுள்ளனர். பொதுவாகவே கடவுளின் உள்ளம் அபிஷேகம் செய்ய, செய்ய குளிரும். அது அபிஷேகத்தை ஏற்பாடு செய்து நடத்தும் பக்தனையும் குளிரச் செய்யும். அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும்.
எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.
அபிஷேகத்துக்கான கால அளவு மட்டுமின்றி, அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் திரவியங்களையும் எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்று வகுக்கப்பட்டுள்ளது.
எள் எண்ணெய் - 1 லிட்டர், பஞ்ச கவ்வியம் - 5 லிட்டர், மாவு வகைகள் ஒவ்வொன்றும் 1 கிலோ, மஞ்சள் பொடி 200 கிராம், பசும்பால் 7 லிட்டர், தயிர் 15 லிட்டர், தேன் 500 கிராம், நெய் ஒரு கிலோ, நெல்லி முள்ளிப்பொடி - 300 கிராம், கரும்புச்சாறு - 4 லிட்டர், பன்னீர் - 500 கிராம், அன்னம் - 5 கிலோ, வாசனை திரவிய தீர்த்தம் - 20 லிட்டர் என்ற முறையில் தான் அபிஷேகத்துக்குரிய திரவியங்களின் அளவு இருக்க வேண்டும்.
பஞ்சாமிர்த அபிஷேகத்துக்கு 20 வாழைப்பழம், ஒரு பெரிய பலாபழம், 15 மாம்பழம் மற்றும் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து பஞ்சாமிர்தம் தயாரிக்க வேண்டும். அதுபோல பஞ்சகவ்யம் (பசுஞ்சாணி கோமூத்திரம், பால், தயிர், நெய்) தயாரிப்பது பற்றி கோவில் குருக்களிடம் கேட்டால் சொல்வார்கள்.
அபிஷேகத்துக்குரிய திரவியங்களை இத்தகைய அளவுகளில் தயாரிப்பது மட்டும் முக்கியமல்ல, அந்த அபிஷேகப் பொருட்களை சுவாமி முன்பு, எப்படி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் கூட விதிமுறை உள்ளது. இது பற்றி சிந்தியாகமத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
சுத்தமான ஒரு வெள்ளைத் துணியை விரித்துக் கொள்ள வேண்டும். அதன் மீது அரிசியை பரப்ப வேண்டும். நடுவில் அபிஷேகத்துக்குரிய பால் வைக்க வேண்டும். வடக்கில் தேன், தெற்கில் நெய், மேற்கில் நாட்டுச் சர்க்கரை, கிழக்கில் தயிர் வைக்க வேண்டும்.
வாயு மூலையில் மாம்பழம், நிருதி மூலையில் பலாப்பழம், அக்னி மூலையில் வாழைப்பழம், ஈசான மூலையில் வாசனை திரவிய தீர்த்தம் வைத்தல் வேண்டும்.
அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆகமப்படி திரவியங்களை வரிசைப்படி எடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.
முன்பெல்லாம் மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள். சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உள்பட சில ஆலயங்களில் ஆகமப்படி இன்றும் எந்த ஒரு அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்க முடியாது. ஆனால் மற்ற ஆலயங்களில் இப்போதெல்லாம் பாலாபிஷேகம் உள்பட எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள். திருவண்ணாமலையில் ஈசனுக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம்.
மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகங்களையும் பார்க்க கூடாது என்று நம் முன்னோர்கள் தடை விதித்ததற்கு காரணம் உள்ளது. அபிஷேகம் செய்யப்படும்போது அந்த விக்கிரகம் அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால்தான் அபிஷேகத்தை பார்க்க வேண்டாம் என்றார்கள்.
ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம்.
நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ... தெரியவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர். மூலவர் சிலைகளில் இருந்து வெளிப்படும ஆற்றல் பக்தர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பெரும்பாலான ஆலயங்களில் பெயரளவுக்கு சில அபிஷேகங்களை மட்டுமே பக்தர்கள் பார்க்க செய்வார்கள்.
நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும்.
அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.
தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.
அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது.
அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர்.
இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும்.
பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.


குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் லயன் சித்தி விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோவிலை வந்து நிலையடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். மற்றவர் பெருந்திரளாக தேரினை இழுத்துச் செல்கிறார்கள். அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் சிறப்பு 
அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம்  பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும்.அன்றைய தினம் குழந்தைகளுக்கு காது குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்வார்கள்.
மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல்,  போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
 தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.
தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை.எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.
கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்.
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது.
அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.
அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான்.
தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள்.
எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர்.
சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.
ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்
தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்
தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.
தைப்பூசத்தின் போது பக்தர்களால் சிலை (விக்ராஹம்) மீது பால் ஊற்றுவது குறித்து 
சில மாற்று மதத்தவர்களால் கேள்வி கேட்கப்படுகிறது, இது  வீண்செயல் என்று கூட அவர்களால் கருதப்படுகிறது
மலேசியாவில் வாழும்  இந்தியர்களிடையே கூட சில முக்கியஸ்தர்களுக்கும் சந்தேகம் இருந்தது.
அபிஷேகம் செய்வது நல்லது என சிலரும் ஆனால் அது மோசமாக மாறுகிறது
பால் பக்தர்களால் குடிக்கப்படவில்லை, அது வீணாகிறது, அது பாவம். எனவே இல்லை என சிலரும் 
விவாதங்கள் செய்யும் நிலை 
அபிஷேகம் என்பது கோயில்களில் தெய்வத்திற்காக (சிலை) கடைபிடிக்கப்படும் ஆகம விதிக்கு உட்பட்ட சடங்கு
கோயில்கள் கட்டப்பட்ட நாளிலிருந்து (சிற்ப சாஸ்திரம்). பல வேறுபட்ட பொருட்கள்
பஞ்சகவ்யா, பஞ்சாமிர்தா, பால் போன்ற அபிஷேகத்திற்கு 16 வகையான பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 முதலியன அவை சிலை மீது படும் திட அல்லது திரவப்   பொருட்கள்
சிறந்த அதிர்வுகளுக்குப்  பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் கரிமப்பொருட்கள்.
வேதியல் இரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. வெவ்வேறு பொருட்கள் ஒவ்வொன்றும் அதன் சுயத்தைக் கொண்டுள்ளன
பக்தர்களுக்கு அதன்  நன்மைகள் சேரும்போது
விக்ராஹம் உண்மையில் ஒரு அதிர்வு உமிழும் யந்திரம். ஒவ்வொரு அணுவும்
சொந்தத் திறனில் அதிர்வுறும். கருங்கல்லில் உள்ள அணுக்கள் (விக்ராஹம்)
முன் நிபந்தனை கொண்ட அலை நீளத்தில் அதிர்வுறும். மேலும் இது நிபந்தனைக்குட்பட்டது
குறிப்பிட்ட நன்மைகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட மந்திரத்தால்.
விக்ரஹாவின் சடங்குகளில் மந்திரம், யந்திரம் மற்றும் தந்திரம் ஆகியவை அடங்கும்
சரியாக செய்யப்பட்ட சடங்கின் போது, ​​பொருட்களின் துகள்கள்
சிலையின் மீது ஊற்றப்பட்ட பால், திட்டமிடப்பட்ட கடவுளைக் குவிக்கும்
அதிர்வு மனிதர்களுக்கும் இயற்கையுக்கும் சேர்தல்  நல்லது.தீர்த்தப் பிரசாதமாக வழங்கப்படும்
சிலையிலிருந்து வரும் அபிஷேகப் பாலில் இருந்து சேகரிக்கப்படும் பால் அளவு சிறிதாக இருந்தாலும் 
மந்திரங்கள் நேர்மறை ஆற்றலை சேர்க்கும்.என்பது 
நம்பிக்கை வரலாற்று நிகழ்வாகும் 
மலேசியாவில்  ஸ்ரீ விஜயாவில் அரசு மற்றும் நீதித்துறை சார்புப் பிரமுகர்களால்.சில
நேர்மறை தெய்வீகச் செயல்கள் இந்த பாலபிசேகத்திற்கு  எதிராக 
தைப்பூசம் போன்ற முக்கிய  விழாக்களில், தடையாக  உள்ளன
அது, பாலுக்கு பதிலாக, தண்ணீர் அல்லது மஞ்சள் கலந்த தண்ணீரை ஏன் பயன்படுத்தக்கூடாது?
நாம் பல்வேறு பொருட்களுடன் அபிஷேகம் செய்யலாம். ஆனால் வெகுஜனத்தின் போது
தைபுசம் போன்ற அபிஷேகம், ஒரு பொருளை நிர்வகிக்க எளிதாக இருக்கும்.
இந்துக்கள் பாலை மிகவும் ஆகம மற்றும் அத்தியாவசிய பொருளாக தேர்வு செய்கிறார்கள்
தைப்பூசம்.


அபிஷேகம் பால் ஊற்றப்பட்டது, மீதமுள்ள பால் எப்போது பாயும்
சூழலில் சுதந்திரமாக. இவை, தெய்வீக அதிர்வு பரவுகிறது
சுற்றுச்சூழல் மற்றும் வளமான நிலம், தாவரங்களை வளர்ப்பது மற்றும் உதவும்
விலங்குகள். இது உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களுக்கு நேர்மறையான பிரகாசத்தை அளிக்கிறது
சுற்றி. அதன் பாதையைச் சுற்றியுள்ள எந்த எதிர்மறை சக்தியையும் அது அகற்றும்.
தைபுசத்தின்  போது அதன் மிக சக்திவாய்ந்ததாக பாலபிசேகமிருக்கும். இது
முருகனிடம் சரணடையும் மக்களின் இதயத்தில்.நிறைந்த 
சாஸ்திரம், முருகன் தாய் சக்தியிடமிருந்து வேல் (ஈட்டி) பெற்றார்
(வட இந்தியாவில் ஸ்கந்தமாதா) சூரபத்மனை (அசுரன்) தோற்கடிக்க.
யுத்தத்தில்  அவரது படை வலிமையானது வேல் உலோகத்தாலும்  உபாயத்தினால்  அதன் சுற்றியுள்ள எதிர்மறை சக்தியை அகற்றும். அதனால்
முருகனின் ஆன்மீக  அதிர்வுகளை பரப்புவதன் மூலம், அது மனிதகுலத்திற்கு உதவும்.
புராணங்களின்படி, முருகன் சூரபத்மனை (அசுரர்) கொன்றார்.
உண்மையில், நம் ஒவ்வொருவருக்கும் முருகனின் அறிவாற்றல் மற்றும் வலிமை   தேவை
நம்மில் உள்ள அசுரன் எனும் அறியாமையைக் அழிக்க இது தைப்பூசத்தின் போது பக்தர்களால் நடைபெறும் பாலபிசேகம் 
 நம்மில் உள்ள அசுரர்களைக் கொன்றுவிடும் எனவும்  முருகன் கோபம் தணிந்து சாந்தமாகவும்  அதைக் குறைக்க அவர் பாலில்  குளிக்க வேண்டும் (அபிஷேகம்).
முருகப் பெருமானுக்கு பால் கொண்டு செல்வது, அது இறைவனை நேசிக்கும் பக்தர்கள்  பிரியமாக வழங்கும் பாலை 
விரும்புகிறார். முருக பகவருக்கு பால் கொண்டு செல்வதாக பக்தர்களாகிய மக்கள் சபதம் செய்து. அவர்களின் பிரார்த்தனையின் போது அதை 
பூர்த்தி செய்யவது.அவர்கள் சுய வழிபாடு  அதற்கு பதிலாக அவை அபிஷேகத்திறகு பாலை  கொண்டு செல்கின்றனர்.
இது பக்தி மற்றும் நன்றி செலுத்தும் செயலாகும், மேலும்
அவர்களுக்கு அது திருப்தி தரும்    பாதைகளில் பக்தி  ஒன்றாகும்
இந்து மதம். நீங்கள் விரும்பும் மற்றும் சமரசம் செய்த பாதையை பின்பற்றுபவர்கள். உள் அடிப்படை ஆன்மீக பால் அபீஷேகம், ஐந்து கூறுகளைக் கொண்டிருப்பது முக்கியம் அதில் 
பொருட்கள். பாலில் நெய்  தயிர் , மோர்+ வென்னை  5 பொருள்கள்
அபிஷேகம் சிறந்த பலனைத் தரும். இது ஒரு முழு நன்மையையும் தெய்வீகத் தன்மையை  அளிக்கிறது. இந்த
பால் தைப்பூசத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
மலேசியாவில் கண்டனம் செய்பவர்கள் பால் வீணடிக்கப்படுவதை மட்டுமே பார்க்கிறார்கள், எனெனில் அவை மட்டுமே அவர்களின் கடவுள் நம்பிக்கை 
இது ஒருவரின் பசிக்கு உணவளிக்கும் என்றும் தகவல் பரப்புவதும்   ஆம் அது உண்மையான பால் ஒருவருக்கு உணவளிக்க முடியும்.
ஆனால் அபிஷேகத்திலிருந்து கிடைக்கும் நன்மைகளையும் திருப்தியையும் அவர்கள் அறியவில்லை
பக்தர்கள் சுற்றியுள்ள முழு சமூகங்களுக்கும் அபிஷேகம் பயனளிக்கிறது.
நீங்கள் கடவுளின் நோக்கத்தை நிறைவேற்றும்போது என  நம்பப்படுகிறது, நீங்கள் அறுவடை செய்வீர்கள்
நல்ல முயற்சி உங்கள் முயற்சியின் 10 மடங்கு.
 பசுவின் பால் மட்டுமே அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது
பால் அபிஷேகம்  'ஹலால்'
யாரும் சாலையில் பாலை ஊற்றுவதில்லை  இந்து எதிர்ப்பாளர்கள்
அதை ஏன் நிறுத்தச் சொல்கிறாகள்
இந்துக்களின்  சடங்குகளும் சம்பிரதாயங்களும் மட்டுமே நம் அணைவருக்கும் முக்கியமாகும் என 
ஓம் நமசிவய  இந்துதர்ம மாமன்றத்தின் தலைமை பீட அய்யா ஸ்ரீ A.ராதாகிருஷ்ணன். ஆலோசனையுடன்.சிவசித்தி ஆன்மீகஅறக்கட்டளை,மலேசியா
இத் தகவல் தருகிறார்கள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு