நிதி அமைச்சகம் கான்பூரில் வருமான வரித்துறை சோதனை கான்பூர் மற்றும் தில்லியை சேர்ந்த மிகப்பெரிய குழுமம் ஒன்றில் 2021 ஜூலை 29 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பான் மசாலா மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் அக்குழுமம் ஈடுபட்டுள்ளது. கான்பூர், நோய்டா, காசியாபாத், தில்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ள மொத்தம் 31 இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பான்மசாலா மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய இரண்டு தொழில்களிலும் கணக்கில் வராத வருவாயை பெரிய அளவில் குழுமம் ஈட்டி வந்தது. கணக்கில் வராத பணம் போலி நிறுவனங்களின் மூலம் குழும நிறுவனங்களில் வரவு வைக்கப்பட்டதும், போலி நிறுவனங்ளை நாடு முழுவதும் குழுமம் உருவாக்கி இருந்ததும் சோதனையின் போது கண்டறியப்பட்டது. மொத்தம் 115 போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் முக்கிய இயக்குநர்கள் தாங்கள் போலியானவர்கள் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், கணக்கில் வராத பணம் குறித்த ஆவணங்களை ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருந்ததும் சோதனையின் போது கண்டறியப்பட்டது. குழுமத்தின் மொத்த சட்டவிரோத பண பரிவர்த்தனை செயல்பாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட்...
RNI:TNTAM/2013/50347