இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் இறைவனடி சேர்ந்தார். சில தினங்களுக்கு முன் சளித்தொல்லை காரணமாக சென்னை இராமச்சந்திரா மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை. இரண்டாவது பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இரு தினங்களாக மருத்துவர்கள் கடுமையாகப் போராடினர் இயல்பிலேயே போர்க் குணமிக்கவர் இராம.கோபாலன் 1984 ல் பயங்கரவாதிகள் தாக்குதலில் தப்பியவர் அந்த மனோதிடம் அவரை நிச்சயம் மீட்டு விடும் என எதிர்பார்த்தனர். அவரது 94 வயது முதுமை காரணமாக சிகிச்சைகள் பலனளிக்கவில்லை. வீரத்துறவி இராம கோபாலன் 19 செப்டம்பர் 1927 ல் தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழியில் பிறந்தவர். 1945 ல் ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக்காகச் சேர்ந்தார். டிப்ளமோ , ஏ.எம்.ஐ.ஈ. படித்து பின் மின் துறை வேலையை உதறி முழுநேர RSS பிரச்சாரக் ஆனார் பிராந்தியப் பிரச்சாரக் (மாநில அமைப்பாளர்) என்ற பொறுப்பு வரை வந்து தமிழகம் முழுவதும் RSS வேலைகள் வளரக் காரணமாக இருந்தவர். 1948 ல் RSS தடை செய்யப்பட்ட போதும் , 1975 மிசா நேரத்திலும் தமிழகத்தில் RSS இயக்கத்தை வழி நடத்தியவர். தமிழகத்தில் 1980 ம் ஆண்டு RSS ...
RNI:TNTAM/2013/50347