முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏழைகளின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், அவர்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் மத்திய அரசு படுபடுவதாக பிரதமர் தகவல்

இந்தியாவில் ஏழைகளின் கண்ணியத்தை நிலைநாட்டவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எங்களது அரசு பாடுபட்டு வருகிறது: பிரதமர் கடந்த 9 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றியமைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட  பல முன்முயற்சிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக ஒரு பதிவை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "கடந்த 9 ஆண்டுகளில், இந்தியாவின் ஏழைகளின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், அவர்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் எங்களது அரசு பாடுபட்டுள்ளது. பல்வேறு  திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றியுள்ளோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் மேம்படுத்துவது மற்றும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக எங்களது பணி தொடர்கிறது. #9YearsOfSeva pic.twitter.com/FsydmGoAcf” இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

40 லட்சம் பேருக்கு தொலை சட்ட சேவைத் திட்டம் இதுவரை ஆலோசனை

தொலை சட்ட சேவைத்திட்டம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது: 40 லட்சம் பேருக்கு வழக்குக்கு முந்தைய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தொலை சட்ட சேவைத் திட்டம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இத்திட்டத்தின் நாடு முழுவதும் 40 லட்சம் பயனாளிகள் வழக்குகளுக்கு முந்தைய ஆலோசனைகளை பெற்று பயனடைந்துள்ளனர். தொலை சட்ட சேவைப் பற்றிய விளக்கம்: சட்ட சேவைகளை எளிதில் பெற முடியாதவர்களுக்கு வழக்குக்கு முந்தைய கட்டத்தில் சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கான ஒரு இணையதள  வழிமுறையாக இது செயல்படுத்தப்படுகிறது. ஊராட்சி அளவில் அமைந்துள்ள பொது சேவை மையங்களில் (சி.எஸ்.சி) உள்ள காணொலிக் காட்சி அல்லது  தொலைபேசி வசதி மூலம் சட்ட உதவிகளை  தேவைப்படுபவர்கள் பெற முடியும்.  சட்ட உதவி தேவைப்படும் ஏழைகள்  மற்றும் பின்தங்கிய மக்களை வழக்கறிஞர்களுடன் இது இணைக்கிறது. 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தொலை சட்ட சேவை இப்போது டெலி-லா எனப்படும் மொபைல் செயலியின் மூலமாகவும், நேரடியாக கிடைக்கிறது.

விசாகப்பட்டினத்தில் நாளை கடற்படை விருது வழங்கும் விழா

விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறும் கடற்படை விருது வழங்கும் விழாவில் வீரதீரச் செயல்கள் மற்றும் சிறப்பு  சேவைக்கான விருதுகள் மற்றும் பதக்கங்களை கடற்படைத் தளபதி வழங்குகிறார் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் 2023 மே 31, அன்று வீரதீர செயல்கள், தொழில்முறை சாதனைகள் மற்றும் சிறந்த சேவையை வெளிப்படுத்திய கடற்படை வீரர்களை கௌரவித்து இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார், வீரதீரச் செயல்கள் மற்றும் சிறப்பு சேவைக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் சார்பில் வழங்கவுள்ளார். கடற்படை விருது வழங்கும் விழா மாலை நேரத்தில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். விழாவில் இரண்டு நவோ சேனா பதக்கம் (வீரதீர செயல்), 13 நவோ சேனா பதக்கம் (சிறந்த கடமையுணர்வு), 16 விசிஷ்ட சேவா பதக்கம் மற்றும் இரண்டு ஜீவன் ரக்ஷா பதக்கம் உட்பட 33 விருதுகள் வழங்கப்பட உள்ளன. சம்பிரதாய அணிவகுப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் விருது பெறுபவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த கடற்படை விருது வழங்கும் விழா இணையதளத

இந்தி மொழியை பயன்படுத்த வேண்டியது அவசியம் குறித்து அமைச்சர் கருத்து

அரசு விவகாரங்களில் சுயமரியாதை சின்னமாக மாறிவரும் இந்தி, ஒரே பாரதம்-உன்னத பாரதம் என்ற இலக்கை எட்ட நமக்குள் இணக்கத்தை உருவாக்குகிறது இந்தி:டாக்டர் மன்சுக் மாண்டவியா ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்கை எட்ட நமக்குள் இந்தி மொழி இணக்கத்தை உருவாக்குகிறது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அலுவலகப் பணிகளில் இந்தி மொழியை புகுத்த உதவும் வகையில் மத்திய அரசு இந்தி ஆலோசனைக் கமிட்டியை அமைத்துள்ளது. இந்தக் கமிட்டி இந்தியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக மாற்றுவதற்கான சிறந்த பரிந்துரைகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தி ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, நாட்டின் முன்னேற்றத்திற்கான  தேசிய அளவிலான முயற்சிகளில் இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி வலியுறுத்தியதை நினைவுகூர்ந்தார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களும் தங்களது அலுவலகப் பயன்பாட்டிற்கு இந்தி மொழியை பயன்படுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய அமைச்சர், இந்தப் பொறுப்பை ரசாயனம் மற்றும் உரத்துற

சென்னை வடக்கு கோட்ட. அஞ்சலகங்களில் மகளிர் மதிப்புத் திட்டம்" 2023 முகாம்

சென்னை வடக்கு கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் மகளிர் மதிப்புத் திட்டம் 2023-க்கான சிறப்பு முகாம் "சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை" முன்னிட்டு "மகளிர் மதிப்புத் திட்டம்" 2023-ஐ மத்திய அரசின் நிதி அமைச்சகம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. சென்னை வடக்கு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களில் இந்தத் திட்டம் துவங்குவதற்கான சிறப்பு முகாம் 29.05.2023 முதல் 31.05.2023 வரை நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எந்த ஒரு பெண்ணும் மற்றும் பெண் குழந்தையின் பெயரில் பாதுகாவலராக இந்த கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டம் ஆண்டுக்கு 7.5% என்ற அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது, இதில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கூட்டப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்படும். குறைந்தபட்சம் ரூ.1000/- மற்றும் நூறு ரூபாய்களின் மடங்குகளில் கணக்கைத் துவங்கலாம். ஒரு தனிநபர் அதிகபட்ச வரம்பு ரூ.2,00,000/-க்கு உட்பட்டு எத்தனை கணக்குகளையும் தொடங்கலாம். ஏற்கனவே இருக்கும் கணக்குக்கும் மற்ற கணக்கைத் தொடங்குவதற்கும் இடையே மூன்று மாத இடைவெளி பராமரிக்கப்படும். கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து ஓராண்டு முடிந்த பிறகு, தகுதியான இருப

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பில் மன்னகள் காலத்தை உணர்த்தும் நிகழ்வுகள்

நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது: பிரதமர் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நேரடியாகப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்ததன் மூலம்  நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தைத்  திரு மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வு பற்றிப் பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது; “நாட்டு மக்களாகிய நம் அனைவருக்கும் இன்று மறக்க முடியாத நாள். நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது. இந்த தெய்வீகமான, அற்புதமான கட்டடம், மக்களின் அதிகாரத்துடன், தேசத்தின் வளம் மற்றும் வலிமைக்குப் புதிய வேகத்தையும் பலத்தையும் தரும் என்று நான் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன்." “இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் திறக்கப்பட்ட நிலையில், நமது இதயங்களும் மனங்களும் பெருமை, நம்பிக்கை மற்றும் வாக்குறுதியால் நிரம்பியுள்ளன. வரலாற்றுச் சின்னமான இந்தக் கட்டடம் அதிகாரமளிக்கும் தொட்டிலாக இருக்கட்டும், கனவுகளைத் த