திம்மியம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மக்களை மதம் மாறும் படி, வலியுறுத்திய கும்பல் மீது நடவடிக்கை கோரி போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மத மாற்றம் செய்ய ஊருக்குள் புகுந்த நபர்களை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் விரட்டிய நிலையில் அவர்கள் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட நபர்களை விடுதலை செய்யக் கோரியும், மத மாற்றம் செய்யும் அமைப்புகளுக்குத் துணை போனதாக காவல்துறை ஆய்வாளரைக் கண்டித்தும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா திம்மியம்பட்டி கிராமம். கிராமத்தில் வசிக்கும் மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும் படி, கும்பல் ஒன்று பிரசாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதையறிந்த அக் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கணேஷ் பிரபு, அந்தக் கும்பலைக் கண்டித்திருக்கிறார். அதனால் கணேஷ் பிரபு மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில். காவல்துறை என்ன நடந்தது என்பதை விசாரிக்காமலேயே கணேஷ் பிரபு மீது பொய்யான வழக்கை பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும். அதைக் கண்டித்து, திம்மியம்பட்டி கிராம மக்கள் தங்களின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்த நிலையில் மேலும், இச்செயலை கண்டித்து நேற்று மாலை 3 மணியளவில் பு...