ரூபாய் .5 கோடி மோசடி வழக்கு: எஸ்.ஆர்.தேவர் என்ற ராஜசேகர் தெலுங்கானா காவல்துறையினரால் கைது. தெலுங்கானா மாநிலத்தில் ரூபாய். 5 கோடி மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசிக்கும் ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரான எஸ் ஆர் தேவர் என்ற ராஜசேகர் என்பவரை தெலுங்கானாவிலிருந்து வந்த ஐந்து பேர் கொண்ட காவல் துறையினர் இன்று ஆகஸ்ட் - 31 செவ்வாய்க்கிழமை கைது செய்து தெலுங்கானாவிற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட எஸ்.ஆர். தேவர் 2021 தமிழக சட்டபேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் திருச்சுழி தொகுதியில் போட்டியிட்டவர். இவர் தெலுங்கானாவில் உள்ள காமிநேனி மருத்துவமனைக்கு ரூபாய்.300 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி 2018 ஆம் ஆண்டு ரூபாய். 5 கோடிக்கு டாக்குமெண்ட் சார்ஜ் என்று வாங்கி விட்டு ஏமாற்றியதாக லெட்சுமி நாரயணன் என்பவர் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத் கிங்கோட்டி சுப்பிரமணியன் மகன் லட்சுமிநாராயணன். இவரது தொழிலை விரிவு படுத்த காரைக்குடியைச் சேர்ந்த ராஜேஷ் சந்திரன், பெருமாள...
RNI:TNTAM/2013/50347