மாற்று அரசியலாக எழுந்து, ஏமாற்று அரசியலில் பலியான புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் மக்கள் தலைவராய் மாறும் இறுதி ஊர்வலம்
மாற்று அரசியலாக எழுந்து, ஏமாற்று அரசியலில் பலியான புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் எம்.ஜி.ஆரை முன்மாதிரியாகக் கொண்டு சினிமாவிலும், அரசியலும் ஈடுபட்ட விஜயகாந்த் சினிமாவில் மகத்தான வெற்றியும், அரசியலில் ஒரளவு வெற்றியும் பெற்றார்! சினிமாவில் அவர் தொட்ட உச்சமும், அரசியலில் அவர் தொட முடியாமல் போன உச்சத்தையும் ஆய்ந்தால் அவருக்கு நேர்ந்த துரோகம் குறித்து விவாதிக்க வேண்டிய நேரமிது, கேப்டன் என அழைக்க விஜயகாந்த் - 'விஜயராஜ் அழகர்சுவாமி' இயற்பெயர் கொண்டவர், தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என அறியப்படும் பிரபல முன்னணி முக்கிய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சட்டசபையின் முன்னால் எதிரகட்சித்தலைவராகவும் இருந்த ஓர் அரசியல்வாதி தூரத்து இடி முழக்கத்தில் துவங்கிய திரைப்பயணம் 1979 ஆம் ஆண்டு 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி 2015 ஆம் ஆண்டு வரை 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ்நாட்டு மக்களின் அன்பைப்பெற்றுப் பிரபலமானார். தெலுங்கு தாய்மொழியானபோதும் தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவரது திரைப்படங்கள் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி