முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உயர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேரில் ஆஜராகாத உயர் அதிகாரிக்கு 'வாரன்ட்'

உயர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேரில் ஆஜராகாத உயர் அதிகாரிக்கு 'வாரன்ட்' நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் மற்றும் செயலர் அன்சுல் மிஸ்ரா இ ஆ ப வுக்கு ஜாமினில் வரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்காக, சென்னை, தரப்பாக்கத்திலுள்ள நிலம், நிறுவனப் பகுதியாக அறிவிக்கப்பட்ட  பின், நிலம் கையகப்படுத்தும் முடிவு கைவிடப்பட்டதையடுத்து, மீண்டும் குடியிருப்புப் பகுதியாக மறுவகை செய்யக் கோரி, கிரிஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. தொழில்நுட்ப குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், நான்கு மாதங்களில் சி.எம்.டி.ஏ., முடிவெடுக்கும்படி, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை அமல்படுத்தாததால், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் மற்றும் செயலருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை, கிரிஷ் தாக்கல் செய்தார்.  இவ்வழக்கில், உறுப்பினர் மற்றும் செயலர் அன்சுல் மிஸ்ரா ஆஜராக,  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மனு, தலை...

போலியாக பத்திரப்பதிவு செய்த 2 பேர் கைது: சார்பதிவாளர் உட்பட 7 பேருக்கு வலைவீச்சு

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே போலி பத்திரம் பதிவு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக சார்பதிவாளர் உட்பட 7 பேரை தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( 82). இவர் அதே கிராமத்தில் சர்வே எண் 422/1 ல் சுமார் 17 சென்ட் கிராம நத்தம் நிலத்தை முன்னோர்கள் காலம் தொட்டு ஆண்டு அனுபவித்து வருகிறார். இந்த நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன், கோபால், அங்கமுத்து, தயாநிதி, நாகமணி, விநாயகம் மனைவி நாகம்மாள், தீபன், முனுசாமி, ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து போலியான பட்டவை தயாரித்து கொண்டு அதில் தமிழக அரசின் கோபுர முத்திரை மற்றும் கும்மிடிப்பூண்டி மண்டல துணை வட்டாட்சியரின் முத்திரையை வைத்து கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண்கள் 2926, 2927, 2928 படி கடந்த அக்டோபர் 10ம் தேதி பதிவு செய்துள்ளனர். கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் செந்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார் இது குறித்து பாலகிருஷ்ணன் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்தனிடம் புகார் மனு கொடுத்தார். அவரது உத்தரவின்பேரில் நில அபகரிப்பு பிரிவு தடுப்பு போலீசார் வழக்கு பதி...

போதைப்பொருள் தடுப்புப் பணி இந்தியா அமெரிக்கா கூட்டு முதல் கூட்டம்

உள்துறை அமைச்சகம் இந்திய- அமெரிக்க போதைப் பொருள் தடுப்புப் பணிக் குழுவின் முதல் கூட்டம் இந்திய- அமெரிக்கா போதைப் பொருள் தடுப்புப் பணிக் குழுவின் முதல் கூட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் அதிகாரிகள், 2020 நவம்பர் 24 அன்று காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் போதைப் பொருள் தடுப்பு வாரியத்தின் துணை இயக்குநர் திரு சச்சின் ஜெயின், அமெரிக்காவின் தேசிய போதைப்பொருள் தடுப்புக் கொள்கை அலுவலகத்தின் உதவி இயக்குநர் திரு கெம்ப் செஸ்டர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். போதைப்பொருள் தடுப்பு குறித்தும் இது சம்பந்தமான சட்டங்களைக் கடுமையாக்குவது குறித்தும் இருநாட்டு பிரதிநிதிகளும் விவாதித்தனர். இந்தியா மற்றும் அமெரிக்காவில் போதைபொருள் சம்பந்தமான விஷயங்களில் நிலவும் சவால்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன. போதைப்பொருட்களை சட்டவிரோதமாக தயாரித்தல், உற்பத்தி செய்தல், விநியோகிப்பது ஆகியவற்றுக்கு எதிரான ஒத்துழைப்பை இருநாடுகளும் வலுப்படுத்துவதில் தங்களது உறுதித்தன்மையை இரு நாட்டு பிரதிநிதிகளும் வெளிப்படுத்தினர்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் விழாவும் விருதும்

சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசிய விருது, கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஒத்திவைப்பு சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசிய விருது,  கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்த வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்  அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இதையடுத்து ஏராளமான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களும், ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு, தேசிய தேர்வாணையத்தின் பார்வைக்கு அனுப்பப்படும். இதற்கான கூட்டம், நேற்று (டிசம்பர் 01, 2020) நடப்பதாக இருந்தது. எனினும் கொவிட்-19 பரவல் காரணமாக இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் குறைந்த பிறகு தேசிய தேர்வு ஆணையத்தின் கூட்டம் நடைபெற்று அது...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பத்து கூடுதல் நீதிபதிகள் நியமனம்

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 10 கூடுதல் நீதிபதிகள் நியமனம் சென்னை  உயர் நீதிமன்றத்துக்கு, 10 கூடுதல் நீதிபதிகளை, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். நீதிபதிகள் திரு கோவிந்தராஜூலு சந்திரசேகரன், திரு ஏ.ஏ.நக்கீரன், திரு வீராசாமி சிவஞானம், திரு கணேசன் இளங்கோவன், திருமதி ஆனந்தி சுப்ரமணியன், திருமதி கண்ணம்மாள் சண்முகசுந்தரம், திரு சத்தி குமார் சுகுமாரா குருப், திரு முரளி சங்கர் குப்புராஜூ, திருமிகு மஞ்சுளா ராமராஜூ நல்லையா மற்றும் திருமதி தமிழ்செல்வி டி.வலயபாளையம் ஆகியோரை மூப்பு வரிசை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.  இவர்கள் பதவிக்காலம் அவரவர் பொறுப்பேற்கும்...

ராஜஸ்தான் எம் எல் எ கிரன் மகேஸ்வரி கொரானாவால் மரணம்

மருத்துவமனை அறிக்கையின்படி, அக்டோபர் மாதம் நகரசபைத் தேர்தலின் போது கிரன் மகேஸ்வரி கோவிட்-19 பாதிப்பு சோதனை செய்திருந்தார். கோட்டா வடக்கு முனிசிபல் கார்ப்பரேஷனுக்கான (கே.என்.எம்.சி) பாஜகவின் இரண்டு தேர்தல் பொறுப்பாளர்களில் இவரும் ஒருவர், சுரு எம்.எல்.ஏ ராஜேந்திர ரத்தோர் மற்றவர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கோட்டாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) இது "தனிப்பட்ட இழப்பு" என்று கூறினார். அவர் ட்வீட் செய்ததாவது: “ராஜ்சமண்ட் எம்.எல்.ஏ கிரண் மகேஸ்வரி காலமானது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் தனது முழு வாழ்க்கையையும் சமூகத்திற்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்தார். அவரது மரணம் எனக்கு தனிப்பட்ட இழப்பு. அவளுடைய ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். எனது இரங்கல் அவரது குடும்பத்தினருக்கு சேர்க்கிறேன்”. “நான் கிரண் ஜியுடன் அரசியல் மற்றும் சமூக ரீதியாக நீண்ட காலம் பணியாற்றினேன். சமூகப் பிரச்சினைகளுக்கு, குறிப்பாக பெண்களின் உரிமைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அவர் ஒரு வலுவான குரலாக இருந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருந்த...

கடலூரில் பேரிடர் மீட்புப்படையினருக்கு விருந்து வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர்

நிவர் புயல் மீட்புக்கு கடலூர் மாவட்டம் வந்திருந்த தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பாராட்டி விருந்தளித்தார்.நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக மாவட்டத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களைப் பாதுகாக்கும் விதமாக, பல பாதுகாப்பு மையங்கள் அமைத்து, ஆட்டோ மற்றும் தண்டோரா மூலம் விளம்பரம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்குமூன்று வேளையும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் மீட்பு பணிக்காக அரக்கோணத்திலிருந்து 142 பாதுகாப்புப் படை வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் வந்திருந்தனர். இவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கடலூரில் 3 குழுக்களும், சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டையில் 3 குழுக்களும் முகாமிட்டு பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தங்கியிருந்தவர்களைச் சிறப்பிக்கும் விதமாக நவம்பர். 27 ல் கடலூர் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தேசிய பேரிடர் மீட்பு படையினரைப் பாராடடி விரு...

ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டக் கடல் கிராமத்தில் ஒதுங்கிய தங்கமணிகள்

ஆந்திரா மாநிலத்தில் நிவர் புயல் காரணமாக கரையொதுங்கிய தங்கத்தாலான மணிகளை பொதுமக்கள் அள்ளிச் செல்லும் காட்சி வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கன மழை காரணமாக, பல இடங்கள் வெள்ளக்காடானது. பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பாமல் தவித்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆந்திராவில் மக்கள் சிலருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.ஆந்திரா கிழக்குக் கோதாவரி மாவட்டத்தின் கடல் கிராமமான உப்படாவில் வெள்ளிக்கிழமை காலை கடற்கரைப் பகுதியில் தங்கம் போல ஏதோ தளதளவென்று மின்னுவதை மீனவர் பார்த்ததையடுத்து உடனடியாக ஊர் மக்களிடம் கூற, அனைவரும் கடற்கரைக்கு ஓடி வந்தபோது சிறிய சிறிய உருண்டைகள் போன்ற மணிகளாக தங்கம் கிடக்கவே, ஏராளமான மக்கள் கூடி கடற்கரையில் திரண்ட மக்களில் 50 க்கும் மேற்பட்டவர்கள் தலா 3000 ரூபாய்க்கு மதிப்பிலான தங்கத்தை எடுத்ததையடுத்து வரும் அலைகளில் மேலும் தங்கம் கிடைக்கும் என்று ஆர்வத்துடன் பல மணி நேரம் ஊர் மக்களில் பலர் அங்கேயே காத்துக் கிடந்தது குறித்து உள்ள...

கோவிட்-19 தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பிரதமர் கள ஆய்வு

பிரதமர் அலுவலகம் 3 மையங்களில் கொவிட் தடுப்பு மருந்தின் தயாரிப்பை பிரதமர் ஆய்வு செய்தார். கொவிட் தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய 3 நகரங்களுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார். அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில்நுட்ப பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கு அவர் சென்றார். தடுப்பு மருந்து தயாரிப்பு பயணத்தின் முக்கியமான கட்டத்தில் தங்களுக்கு உற்சாகம் அளிக்கவும், தங்களின் முயற்சிகளை வேகப்படுத்தவும் பிரதமர் நேரில் வந்து சந்தித்ததற்கு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தியாவின் உள்நாட்டு தடுப்பு மருந்து தயாரிப்பு துரித கதியில் வளர்ந்து வருவது...

பாலாற்றின் கரையோரங்களில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ள அபாய எச்சரிக்கை. பாலாற்றில் 40,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் மாவட்ட. த்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. பாலாற்றில் 40,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விதிக்கப்பட்டது. பாலாற்றில் 20,000 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதாலும் மேலும் 40 ஆயிரம் கன அடி நீர் வரை வரலாம் என்று எதிர்பார்ப்பதால் கீழ்கண்ட கிராமத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு தென்னிந்திய விவசாயத்தின் தாயாறாகும். இது கர்நாடகத்தில்  93 கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிமீ தொலைவும் தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே 100 கிமீ தொலைவிலுள்ள வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதற்கு மொத்தமாக ஏழு துணையாறுகள் உள்ளன அவற்றில் செய்யாறு, நீவா ஆறு ஆகியவை முதன்மையானவையாகும். வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிக...

கள்ளக்குறிச்சி கோவில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

தமிழகத்தில் பழைய ஆற்காடு ஜில்லா பின் தென்னார்க்காடு ஜில்லா பின் விழுப்புரம் மாவட்டம் அதிலிருந்து புதிதாக உருவான கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, அர்த்தநாரீஸ்வரர் கோவில் ரயத்து நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் ரயத்து நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்சி ரங்கராஜன் நரசிம்மன் மனு தாக்கல் செய்தார். அது நேற்று நவம்பர். 27 ஆம் தேதி நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில், "கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோயில் நிலத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பாக கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கருத்துக் கேட்புக் கூட்டம் நடப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பே முதல்வர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகள் தொடங்கி விட்டதாக...

இலஞ்சம் பெறும்போது பிடிபட்ட செக்கானூரணி பெண் காவல் ஆய்வாளர் அனிதா சிறையிலடைப்பு பணிவிடுவிப்பு

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா பொன்னமங்கலத்தைச் சேர்ந்த முத்துவுக்கும், நல்லதம்பிக்குமிடையே முன்விரோதமிருந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட தகராறில் முத்துவும், அவரது மனைவியும் தாக்கப்பட்டது குறித்த புகாரின் செக்கானூரணி காவல்துறையினர் நல்லதம்பி உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.  இவ் வழக்கை விசாரித்த சார்பு ஆய்வாளர் ஒருவர் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் விட்டுள்ளார். வழக்கு தொடர்பாக சமீபத்தில் குற்றப்பத்திரிகை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை அறிந்த நல்லதம்பி, அடிதடி சம்பவத்திற்கு சம்பந்தமில்லாத தனது மகன்கள் மாரி, கமலக்கண்ணன் ஆகியோர் பெயர்களை குற்றப்பத்திரிகையிலிருந்து நீக்கக் கோரி தற்போது பணியில் இருந்த செக்கானூரணி காவல் ஆய்வாளர் அனிதாவை அணுகினார்.  இருப்பினும், மூவரின் பெயர்களை நீக்க, காவல் ஆய்வாளர் ரூ. 1 லட்சம் வரை லஞ்சம் கேட்கவே நல்லதம்பி பேரம் பேசி ரூபாய். 80 ஆயிரம் தருவதாக சம்மதித்து, முதல் தவணையாக ரூபாய். 30 ஆயிரம் தருகிறேன், பெயர்களை நீக்கியதும் மீதத் தொகை கொடுப்பதாக ஒப்புக்கொண்டு சமரசமாகப் பேசி...

வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு இடமாற்றமான போட்டியாளர்கள்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி நான்காவது பாகம் போய்க் கொண்டிருக்கிறது. தினமும் விதவிதமான உள்வீட்டுப் பொறனி தந்து நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் பேச வைத்துக் கொண்டிருந்த பிக்பாஸுக்கே பெரிய டாஸ்க் தந்துவிட்டது இயற்கை. செம்பரம்பாக்கம் ஏரியோரம் நீர்நிலைகள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இடங்களில் ஈ.வி.பி.பெருமாள் சாமி ஸ்டூடியோவும் ஒன்று அதில் தான் பிக்பாஸ் எனும் கமலஹாசன் தொகுப்பாளராக இருந்து நடத்தும் உள்வீட்டுப் பொறனி (புறம் பேசுதல்) நிகழ்ச்சி முன்பே திட்டமிட்டு நடத்தும் நோக்கம் மக்கள் சுயமாக சிந்திக்கக்கூடாது என்பதே அது இளம் தலைமுறைகளை மிகுந்த அளவில் பாதிப்புக்கு உள்ளாக்குவதாக அறிகிறோம். இருதினங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை நாசரேத்பேட்டை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி வளாகத்திலிருக்கும் பிக்பாஸ் வீட்டை செம்பரம் பாக்கம் ஏரி திறந்ததால் மழை நீர் சூழ்ந்திருக்கிறது. வீட்டின் தோட்டப்பகுதி, நீச்சல் குளம் முழுக்க நான்கு அடி தண்ணீர் புகுந்தது. தொடர்ந்து மழை பெய்ததாலும் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதாலும் பிக் பாஸ் வீட்டில் நேற்றுக் காலையிலிருந்தே ஒருவித அசாதாரண சூழல் நிலவியிருக்கிறது. போட்டியாளர்கள் அத்த...

வங்கக்கடலில் புதிய புயல் 29 ஆம் தேதி தமிழக மத்தியமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

புவி அறிவியல் அமைச்சகம் புதுச்சேரி-தமிழகம் இடையே கரை கடந்தது அதி தீவிர புயல் ‘நிவர்’ புயலாக வலுவிழந்து காற்றழுத்தமாக மாறுகிறது. அதி தீவிர புயல் ‘நிவர்’ புதுச்சேரி-தமிழகம் இடையே கரை கடந்து, நேற்று காலை தீவிர புயலாக வலுவிழந்தது. இது படிப்படியாக ஆழ்ந்த காற்றழுத்தமாகவும், காற்றழுத்தமாகவும் வலுவிழக்கும் என இந்திய வானிலைத் துறை கூறியுள்ளது.   தென்மேற்கு வங்காள வரிகுடாவில் நிலை கொண்டிருந்த ‘நிவர்’ புயல் வடமேற்கு நோக்கி நகர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் நவம்பர் 25ம் தேதி 23.30 மணி முதல் நவம்பர் 26ம் தேதி 2.30 மணி வரை கரை கடந்தது. அப்போது மணிக்கு 120 கி.மீ முதல் 145 கி.மீ வரை  காற்று வீசியது. இது தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து, தமிழகத்தின்...

வாழ்கைப்படி புகாரளித்த நாளிலிருந்தே பெண்கள் பெறலாமென உச்சநீதிமன்றம் 60 பக்கம் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம். கைவிடப்பட்ட மனைவியும் குழந்தைகளும் ஜீவனாம்சம் கோரி புகார் அளித்த நாளிலிருந்தே அதைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என உச்சநீதிமன்றத் தீர்ப்பு. பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காக எந்தவொரு சட்டத்தை இயற்றவும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 15(3) வது பிரிவு அனுமதிக்கிறது. பெண்களும் ஆண்களுக்கு நிகரான ஊதியமும் வாய்ப்புகளையும் வழங்குவதற்குக் கூறு 39 வலியுறுத்துகிறது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதுகாப்பது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்புகளுள் மிகவும் முக்கியமானதாகும். மும்பையைச் சேர்ந்த தம்பதிக்கு இடையேயான மணவுறவுச் சிக்கலை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் இந்த இரண்டு கூறுகளையும் இதர சட்டங்களையும் சுட்டிக்காட்டி ஜீவனாம்சம் தொடர்பாக ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறது. நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வானது 67 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மனைவி மற்றும் அவரைச் சார்ந்திருக்கும் குழந்தைகளின் ‘நியாயமான தேவைகள்’, அவரது கல்வித் தகுதி, அவர...

புயல் வெளிச்சுற்று கடலூரைத் தொட்டது நாளை 13 மாவட்டங்களில் விடுமுறை

நிவர் புயலின் வெளிச்சுற்று கடலூரில் கரையை தொட்டதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் முக்கியப் பகுதி கரையைத் தொட இன்னும் 5 முதல் 6 மணி நேரமாகுமெனத் தெரிகிறது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொதுவிடுமுறை என முதலமைச்சர் அறிவிப்பு நிவர் புயலை எதிர்கொள்ள உள்ள 13 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறையாகும் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பொதுவிடுமுறை இன்று தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை 13 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையைகவ கடக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது. புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டினம் முதல் சென்னை வரை கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யும். இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும் என்பதை வானிலை மையம் வெளியிட்டுள்ளது வங்ககடலில் உருவாகி உள்ள நிவர் புயல் தற்போது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதுகட...