கர்நாடகா மாநிலம் மாண்டியாவிலும் பெங்களூரிலும் முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற்ற நிலையில், கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த, பல சங்கங்கள் கோரிக்கை விடுத்த முழு அடைப்புக்கு கர்நாடகம் முழுதும் ஆயிரத்து 900 அமைப்புகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க, மாநிலம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்த, காவக்துறை மாநில இயக்குநர் அலோக் மோகன் உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் சனிக்கிழமை இரவு 12 மணி வரை 144 தடையுத்தரவும் விதிக்கப்படுவதாக மாநகரக் காவல்துறை ஆணையர் தயானந்த் அறிவித்துள்ளார்.நடிகர் சித்தார்த் நடித்த சித்தா படம் இன்று தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான படத்தின் செய்தியாளர் சந்திப்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக மாநில காவிரி போராட்டக் குழுவினர் திடீரென உள்ளே புகுந்து முழக்கங்கள் எழுப்பியதனால் பாதியிலேயே நடிகர் சித்தார்த் வெளியேறினார். நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியில் கன்னட அமைப்பினர் முழக்கங்கள் எழுப்பிய நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது குரல் எழுப
RNI:TNTAM/2013/50347