2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சுமார் 37 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தகவல் 2022 ஆகஸ்ட் 31 வரை தமிழ்நாட்டில் சுமார் 37 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. சென்னை நெசப்பாக்கம் பகுதியில் பிபிசிஎல் பெட்ரோல் நிலையம் அருகே இன்று (செப்டம்பர் 29) நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 பெண் பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு இணைப்புகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி வழங்கினார். இந்திய எண்ணெய் கழகம் 19,21,340 இணைப்புகளையும், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் 9,42,521 இணைப்புகளையும், பிபிசிஎல் 8,12,293 இணைப்புகளையும் வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். 2021-22 நிதியாண்டில் 62,06,748 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வாங்க தமிழ்நாட்டில் பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.413.90 கோடி எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மத்திய அரசால் பரிவர்த்தனை செய்யப்பட்
RNI:TNTAM/2013/50347