காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான இராகுல் காந்தி தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் ஒரு தேசிய தலைவர் போல இல்லாமல் பொதுமக்களை அணுகிப் பேசியுள்ளார். அடுமனைக் கடைகளில் தேனீர் குடித்தார் அதோடு கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட பலருடன் ஒரு காட்டுப்பகுதிக்குச் சென்றவர், கிராமத்து இளைஞர்களுடன் சேர்ந்து சமையல் மூலம் காளான் பிரியாணி தயார் செய்து சாப்பிட்டது காணொலி மூலமாக சமூக வலைத்தளங்களில் நேற்றே வைரலான நிலையில் ஒரு z பிரிவு பாதுகாப்பில் உள்ள அகில இந்தியத் தலைவர் இப்படிக் கிராமத்தில் வீட்டு முறைப்படி செய்யப்படும் சமையலை வீடியோ எடுத்து யூ-டியூப்பில் பதிவிடும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குழுவினர், காளான் பிரியாணி உணவினை கரூர் அருகே அரவக்குறிச்சி ரோட்டில் ஒரு முருங்கைத் தோப்பில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ராகுல்காந்தி சென்று அவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார். அவர் அந்த இடத்திற்கு செல்லும் போது மிகவும் ஆவலுடன் சென்றார். அந்தக் குழுவினர...
RNI:TNTAM/2013/50347