‘விடுதலையின் அம்ருத் மகோத்சவம புகைப்பட கண்காட்சி நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு நடத்தப்படும் ‘விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்’ புகைப்பட கண்காட்சி கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமி (KAHE) வளாகத்தில், 2021 மார்ச் 29 ஆம் தேதி முதல், மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின், கோவை மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் கற்பகம் உயர்கல்வி அகாடமி ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது. கற்பகம் உயர்கல்வி அகாடமியின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.சுடலைமுத்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, அமைதியின் அடையாளமான புறாவை நேற்று பறக்கவிட்டார். மேலும், புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, வாக்களித்தலின் முக்கியத்துவம் குறித்த கையெழுத்து பிரச்சாரத்தையும் அவர் தொடங்கி வைத்து உரையாற்றினார். பதிவாளர் டாக்டர் எம்.பழனிச்சாமி சுதந்திரத்தின் நன்மைகள் குறித்து பேசினார். கலை, அறிவியல் மற்றும் மானுடவியல் பிரிவின் டீன் டாக்டர் என்.வி.பாலாஜி, இந்த கண்காட்சியை பாராட்டி பேசினார். கூட்டத்தில் பேசிய தலைமை விருந்தினர், டாக்டர் எஸ்.சுடலைமுத்து, சமூகத்தில் சுதந்திரம் முக்க...
RNI:TNTAM/2013/50347