முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குஜராத்தில் மறைந்த தலைவர் கேசுபாய்பட்டேலுக்கு குடியரசுத் தலைவர் துணை குடியரசு தலைவர் பாரதப் பிரதமர் அஞ்சலி

எங்கள் அன்பான மற்றும் மரியாதைக்குரிய கேசுபாய் காலமானார்… நான் மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைகிறேன். அவர் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் கவனித்துக்கொண்ட ஒரு சிறந்த தலைவராக இருந்தார். அவரது வாழ்க்கை குஜராத்தின் முன்னேற்றம் மற்றும் ஒவ்வொரு குஜராத்தியின் அதிகாரம் ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. கேசுபாய் ஜனசங் மற்றும் பாஜகவை வலுப்படுத்த குஜராத்தின் நீளம் மற்றும் அகலம் கடந்து பயணம் செய்தார். அவர் அவசர பல் மற்றும் ஆணியை எதிர்த்தார். உழவர் நலப் பிரச்சினைகள் அவரது இதயத்திற்கு மிக நெருக்கமானவை. எம்.எல்.ஏ, எம்.பி., அமைச்சர் அல்லது முதல்வராக இருந்தாலும், பல உழவர் நட்பு நடவடிக்கைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தார். நான் உட்பட பல இளைய காரியகார்த்தங்களை கேசுபாய் வழிகாட்டினார். எல்லோரும் அவரது அன்பான தன்மையை நேசித்தார்கள். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. நாம் அனைவரும் இன்று துக்கப்படுகிறோம். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் நலம் விரும்பிகளுடனும் உள்ளன. அவரது மகன் பாரதிடம் பேசி இரங்கல் தெரிவித்தார்.குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் தகவலில் திரு கேசுபாய் பட்டேல் மறைவிற்கு குடியரசுத் து

தலைவர்கள் வாழ்ந்தவரை ஜாதி பார்த்ததில்லை அரசியலால் ஜாதி தலைவர்கள் பின் வருகிறது

தேசியவாதியாக நேதாஜி வழியில் வாழ்ந்த பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை நிகழ்வில் முதல் முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். தேவரின் குரு பூஜை, ஆண்டுதோறும் தென் மாவட்டங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் அனைத்து கட்சியினரும் அமைப்புகளும் கலந்துகொண்டாலும், விசிக நிர்வாகிகள் இதுவரை கலந்துகொண்டதில்லை. அக்டோபர் 30 113ஆவது ஜெயந்தியும் 58ஆவது குரு பூஜையையும் முன்னிட்டு, தேனி மாவட்டம் பங்களா மேடு பகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த குரு பூஜை நிகழ்வில் விசிகவினர் கலந்துகொண்டுள்ளனர். தேனி கிழக்கு மாவட்ட விசிக மாவட்டச் செயலாளர் நாகரத்தினம் தலைமையில் இரண்டு வாகனத்தில் 20 பேர் சென்று முத்துராமலிங்கத் தேவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு அன்னதானத்திலும் கலந்து கொண்டனர் விசிக மாவட்டச் செயலாளர் நாகரத்தினம் தலைமையில் அவர் கூறியதாவது "கடந்த காலங்களில் இரண்டு சமூகமும் வெறுப்பும், பகையுமாக இருந்து வருகிறது. இனிவரும் காலங்களிலும் இப்படியிருக்கக்கூடாது நல்லிணக்கமாக இருக்கவேண்டுமென்று தலைமையிடம் கேட்டோம

இந்தியாவில் இந்திரா பிரியதர்ஷினி காந்தி நினைவு கூறும் பல நிகழ்வுகள்

இந்திய இரும்பு பெண்மணியை அவரது நினைவு நாளில் நினைவு கூர்வோம் இந்திரா பிரியதர்ஷினி காந்தி. 1917 நவம்பர் 19 ல் அலகாபாத், உத்தரபிரதேசத் ஜவஹர்லால் நேருவுக்கும் கமலாவுக்கும் மகளாகப் பிறந்து ஃபெரோஸ் காந்தியை மணந்ததால் காந்தி என்ற பெயர் ஒட்டிக்கொண்டது. ராஜீவ் காந்தி மற்றும் காந்தியும் மகன்கள் அவர்கள் பெயரில் காந்தி இணைந்ததும் அவ்வாறே. ஜெனீவாவின் சர்வதேசப் பள்ளி, விஸ்வபாரதி பல்கலைக்கழகம், சாந்திநிகேதன்; சோமர்வில் கல்லூரி, ஆக்ஸ்போர்டு சங்கம்: இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம்: இந்திய சுதந்திர இயக்கம் அரசியல் சித்தாந்தம்: வலதுசாரி, தாராளவாதியான அவர் இந்தியாவின் முதல் பெண் பிரதமரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மையமான நபராகவும் விளங்க நேரு மகள் என்ற தகுதியே முதலில் . 1966 முதல் 1977 வரை பணியாற்றிய இந்திரா காந்தி, பின்னர் 1980 முதல் 1984 ல் அவரது படுகொலை வரை பிரதமராகப் பணியாற்றியவர், இந்தியாவில் இரண்டாவதாக மிக நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்த ஒரே பெண்மணியுமாவார். மதக் காட்சிகள்: இந்து மதம் வெளியீடுகள்: என் உண்மை (1980), நித்திய இந்தியா (1981) கடந்து சென்றது: 31 அக்டோபர், 1984 நினைவுநாள் : சக்தி

தேசியவாதி தேவர் நினைவிட அரசியல் விழாவில் முதல்வர் அமைச்சர்கள் அஞ்சலி

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் ஹரிசனங்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்து எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு. நிலையில் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடி ராஜாஜி, வைத்தியநாதஐயர், என்.எம்.ஆர். சுப்புராமன் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர்களில் பசும்பொன் உ முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டுமெனக் கேட்டார்கள். அதற்கவர், "என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள், அன்னை மீனாட்சி கோவிலில் ஆலயப்பிரவேசம் செய்கையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி, அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேனென்றார்". "அந்த ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாதய்யர், ஹரிசனங்களை அழைத்து வரும்போது அடியேனும் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அந்த ரவுடிக்கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்" என ஒரு துண்டு பிரசுரம் மூலம், தேவரின் அறிக்கை வெளியானது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 8 ஜூலை 1939-ல்

சௌடு மண் அனுமதியில் ஆற்று மணல் திருட்டு உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் கமிஷனர் நியமனம்

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் சௌடு உபரி மண் எடுக்க வழங்கப்பட்ட உரிமம் மற்றும் குத்தகை விபரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு ராமநாதபுரம் மாவட்டம் ராஜ சிங்க மங்கலத்தில் உபரி மண் அள்ள உரிமம் பெற்றுக்கொண்டு, கோட்டைக்கரை ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு அது நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது தொடர்பான புகைப்படங்களைத் தாக்கல் செய்ததையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும் போது 5 முதல் 10 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு மணல் அள்ளப்பட்டுள்ளது தெரிகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்ய வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வழக்கறிஞர் ஆணையராக நியமிக்கப்படுகிறார். அவர் உபரி மண் அள்ள உரிமம் பெற்ற இடத்தில் ஆய்வு நடத்தி, பட்டா நிலத்தில் உபரி மண் அள்ள அனுமதி பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக ஆற்றுப் படுகையில் மணல் அள்ளப்பட்டுள்ளதா? அந்த மண் எந்த வகையானது? கோட்டைக்கரை ஆற்றில் மணல் அள்ளப்பட்டுள்ளத

நீட் தேர்வில் அரசுபள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு முதல்வர் அஸ்திரம் ஒரே கல் மூன்று மாங்காய்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்தது. உண்மையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு தான் உருவாக்கப்பட்ட கமிஷன் பரிந்துரைத்திருந்தது. ஆனால் தமிழக அரசு தான் இதை 7.5 சதவீதமாகக் குறைத்து விட்டது. இங்கேயே அரசுக்கு முதல் சறுக்கல் அதனால்தான் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.. ஏற்கனவே காலதாமதமாகி விட்ட நிலையில் மேலும் அவகாசம் கேட்டார்.. பொதுவாக, ஆளுநரை யாரும் உத்தரவிட்டு வலியுறுத்த முடியாது என்றாலும் கூட ஏன் இந்தத் தாமதம் என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்தும் விட்டனர்.மக்களுக்கு அதிருப்தி ஏற்படும் அளவுக்கு இந்த விவகாரம் பெரிதாகியது.. இதில் அரசியலும் பின்னிப் பிணைந்திருப்பது தான் பலரையும் அதிர வைக்க முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி இந்தச் சட்ட மசோதாவின் மூலமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து மக்களின் மனதில் இடம் பிடிக்க நினைத்தார். ஏற்கனவே பல்வேறு அறிவிப்புகள் மூலம் மாணவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எடப்பாடியாருக்கு நல்ல பெயருள்ளது. அதில் இவ் உள் ஒதுக்கீடும் அமைய வேண்டும் என விரும

பா ஜ கவில் வழக்கறிஞர் வானதி சீனிவாசன் தேசிய மகளீரணித் தலைவராக நியமனம்

தேசிய அளவில் பதவி பாஜகவின் மகளிரணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜகவில் மாநில துணைத் தலைவர் தமிழிசையைப் போலவே மிகத் தீவிரமான கட்சிப் பணி யாற்றி வருபவர். எதையும் நாசூக்காகவும், அதேசமயம் புள்ளி விவரத் தரவுகளுடன் பொறுமையாகப் பேசுவது இவரது சுபாவம். தமிழிசை இருக்கும்போதும் சரி, இல்லாதபோதும் சரி, பாஜகவின் கொள்கைகளை எல்லா இடங்களிலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் பயன்படுத்துவார்.. தமிழிசையைப் போலவே நாகரீகமான வார்த்தைகளையே பயன்படுத்துவார். சமீபத்தில் பாஜக மேலிடம் தேசிய நிர்வாகிகளை நியமித்தது அதில், தமிழகத்தைச் சேர்ந்த யார் பெயரும் இடம் பெறவில்லை. எப்படியாவது தங்களுக்குப் பொறுப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களில் வானதியும் ஒருவர். சமீபத்தில் வந்த அண்ணாமலைக்கு கூட பொறுப்புகளை வழங்கிய நிலையில், அண்ணாமலைக்கு பதவி தந்தது தவறில்லை, அதற்கு கட்சியில் அதிகாரம் உண்டு என்று நியாயப்படுத்தி பேசியவர் வானதி. தமிழக பாஜகவில் மாநில துணைத் தலைவராக இருப்பவர் வானதி சீனிவாசன். கோவையைப் பூர்வீகமாக கொண்டவர் கட்சியில் படிப்படியாக வளர்ந்து இன்று தேசியப் பதவியை எட்டி

தி மு க. பிரமுகர் பையா கௌன்டருக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை

தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூரிலுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாட்டில் 22 வெவ்வேறு இடங்களில் வருமான வரி சோதனைகள் நடந்தன. தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் நந்தா கல்விக் குழு வருமான வரித் துறையின் ரேடரின் கீழ் வந்துள்ளது. சென்னை, ஈரோட், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாநிலத்தின் நான்கு முதல் ஐந்து மாவட்டங்களில் 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோயம்புத்தூரில் வருமான வரி அதிகாரிகளால் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சோதனைகளுக்கு முக்கிய காரணம், இந்தக் கல்வி நிறுவனங்கள் வரிகளைத் தவிர்த்துவிட்டதாக வருமான வரி அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.வரி ஏய்ப்பு புகாரின் பேரில், தமிழகத்தில்   கோவை தி.மு.க மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தகவலை அறிந்த பகுதி தி.மு.க.வினர் பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன் வீட்டின் முன் குவிந்துள்ளனர். மேலும், வருமான வரித்துறையினரின் சோதனையைக் கண்டித்து முழக்கமும் எழுப்பினர்.  கல்

சுற்றுலா அமைச்சகத்தின் எனது தேசத்தைப்பார் இணையக் கருத்தரங்கு

சுற்றுலா அமைச்சகம் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் எனது தேசத்தை பார் என்ற இணையத் தொடரில் பண்டி: ராஜ்புத் தலைநகரின் மறந்துவிட்ட பாரம்பரிய கட்டிடக் கலை என்ற தலைப்பில் இனிய கருத்தரங்கு மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் எனது தேசத்தை பார் என்ற இணையத் தொடரில் கடந்த 24 ஆம் தேதி "பண்டி: ராஜ்புத் தலைநகரின் மறந்துவிட்ட பாரம்பரிய கட்டிடக் கலை" என்ற தலைப்பில் நடைபெற்ற இணைய கருத்தரங்கு ராஜஸ்தானில் உள்ள பண்டி மாவட்டத்தைப் பற்றி அமைந்திருந்தது. இடைக்கால இந்தியாவின் சக்தி வாய்ந்த ராஜ்யங்களுக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க சிறிய பகுதிகள் அவ்வளவாக பிரபலமாகவில்லை. டெல்லி ஜெய்ப்பூர் ஜெய்சால்மர் உதைப்பூர் அகமதாபாத் லக்னோ உள்ளிட்ட இடங்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம், சிறிய நகரங்கள் மற்றும் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள், ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தென்கிழக்கு ராஜஸ்தானில் அமைந்துள்ள ஹடா ராஜ்புத்தின் தலைநகரமான பண்டி அப்படிப்பட்ட ஓர் பிரசித்தி பெறாத தலம் ஆகும். இந்த நகரத்தின் பாரம்பரியக் கட்டிடக் கலை குறித்து நகர்ப்புற கட்டிட வடிவமைப்பாளரான திரு சாருதத்தா தேஷ்முக், இ

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்-2020

பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2020 மத்திய கண்காணிப்பு ஆணையம் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடிக்கிறது. ஒவ்வொரு வருடமும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை (அக்டோபர் 31) முன்னிட்டு இந்த வாரம் கடைபிடிக்கப்படுகிறது.  குடிமக்களின் பங்களிப்புடன் நேர்மை மற்றும் நாணயத் தன்மையை இந்த மாநாடு உறுதி செய்கிறது. 'விழிப்பான இந்தியா, வளமான இந்தியா' என்னும் கருப்பொருளில், இந்த வருடம் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை  கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய புலனாய்வுப் பிரிவு நடத்தும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை வரும் 27ம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி மத்திய அரசு நிறுவனங்களில் கணினி மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்படும். அனைத்து நிறுவனங்களும் கொவிட்-19 முன்னெச்சரிக்கை வழிமுறைகளைக் கடைப்பிடித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு

அறிவியல் தொழில்நுட்பத்துறை புதிய கிருமி நாசினி

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை புதிய வகை கிருமிநாசினிகள் ரசாயனங்களின் பக்க விளைவுகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன, கோவையை சேர்ந்த நிறுவனத்தின் புதுமை கொவிட்-19 பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள ரசாயனங்கள் நிறைந்த கிருமி நாசினிகள் மற்றும் சோப்புகளால் அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலம் ஏற்பட்ட அரிப்பு மற்றும் காய்ந்தத் தன்மை ஆகியவற்றில் இருந்து விரைவில் விடுதலை எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) கிருமி நாசினிகளுக்கு மாற்றுகளை உருவாக்கி உள்ளன. இந்த புதிய வகை கிருமி நாசினிகள் ரசாயனங்களின் பக்க விளைவுகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன. தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைதல் வளர்ச்சி வாரியம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முயற்சியான, ஐஐடி மும்பையின் புதுமைகள் மற்றும் தொழில்முனைதல் சங்கத்தால் செயல்படுத்தப்பட்ட, கவச் என்பதன் கீழ் மொத்தம் 10 நிறுவனங்கள் பாதுகாப்பான கிருமி நாசினி தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளன. மும்பையை சேர்ந்த இம்ப்லாக்ஸ் வாட்டர் சிஸ்டம்ஸ், கோவையை சேர்ந்த எடா ப்யூரிபிகேஷன், புனேவை சேர்ந்

தமிழிலுள்ள பக்தி இலக்கியமே புரியாமல் சமஸ்கிருத நூல் விவாதம் நடத்தும் அரசியல் கட்சி நபர்கள்

குஷ்பு தலைமையில் பா.ஜ.க மகளிர் அணியினர் திருமாவளவனைக் கண்டித்து சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தர்ணா போராட்டம் நடத்தச் சென்றவர்கள் வழியில் திருப்போரூர் வட்டம் முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்ட குஷ்புவும் அவருடன் வந்தவர்களும் அப்போது, `இந்தப் போராட்டத்தை பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதைக் கண்டித்தே நடத்தவிருந்தோம் எனும் குஷ்பு தமிழ்நாட்டுப் பெண்களின் கற்பு பற்றி குஷ்பு கேவலமாகப் பேசுகிறார்' என்று, பெண்களின் மகப்பேறு ஆரோக்கியம் குறித்து அவர் சொன்ன கருத்துகள் கத்தரிக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் பரப்பப்பட்டபோது பாதிக்கப்பட்டவராக நின்றார் குஷ்பு. இப்போது அதே கத்தரிப்பு, சித்திரிப்பு வேலைகளை அவரே செய்துகொண்டிருப்பதாக கருத்து உலாவர `கைது செய்யப்பட்டு காவல்துறை வேனில் இருக்கிறோம். இறுதி மூச்சுவரை பெண்களின் கண்ணியத்துக்காகப் போராடுவோம்' என்று ட்விட்டரில் பதிவு செய்தும் `ஒவ்வொரு பெண்ணுக்காகவும் நடத்தப்படும் போராட்டமிது' என்றார். உண்மையில் அரசியல் விளையாட்டில் குஷ்பு எனும் பெண் பயன்படுத்தப்படும் விதத்தை பார்க்கும்போது, நமக்குத்தான் அவர் மேல் பரிதாபம், அயற்சி ஏற்படுகிறது. அரசி

குழந்தை பராமரிப்பு ஆண் பணியாளருக்கும் விடுமுறை புதிய சீர்திருத்தம்

பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் குழந்தை பராமரிப்பு விடுமுறை தொடர்பான சீர்திருத்தம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் பணியாளர் மற்றும் பயிற்சி துறையால் கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தங்களில் சிலவற்றைக் குறித்து மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று எடுத்துரைத்தார். அரசின் ஆண் பணியாளர்களுக்கும் தற்போது குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்படுவதாக அப்போது அவர் கூறினார். ஆனால், குழந்தை பராமரிப்பு விடுமுறை ஒற்றை பெற்றோராக இருக்கும் ஆண் பணியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். குழந்தையை தனி ஒருவராக பராமரிக்கும் மனைவியை இழந்தோர், விவாகரத்து பெற்றவர்கள் உள்ளிட்டவர்களுக்கும், மற்றும் திருமணம் ஆகாதவர்களுக்கும் கூட இந்த விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர் கூறினார். அரசுப் பணியாளர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான மிகப்பெரிய சீர்திருத்தம் என்று இதை வர்ணித்த டாக்டர் ஜிதேந்திர

இயக்குநர் சங்கர் குறித்து சிங்கமுத்து கருத்து ரசிகர்கள் விவாதப் பொருளானது

தமிழ் திரையுலகில் இயக்குனர் ஷங்கர் பல பிரம்மாண்டமான படைப்புக்களைத் தந்துள்ளார். சில படங்கள் மற்றொரு படத்தைத் தழுவி எடுத்தது ஷங்கர் காப்பியடித்து முதலாவது எந்திரன் அது பைசென்டினல் மேன் படத்தின் தழுவல்,அடுத்து ஜென்டில் மேன் அது ராபின் ஹூட் தழுவல் அடுத்து இந்தியன் அது நாம் பிறந்த மண் தழுவல் அந்நியன் அது செவென் { 7 } என்பதன் தழுவல் இதில் ஐ படமும் ஒரு ஆங்கிலப்படக் காப்பி என்று தகவல் இதை காப்பியோ அது ஒரே எண்ணமா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். அவரைப் பற்றி நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து ஒரு பேட்டியில் "தற்போது பிரபல இயக்குனர் ஷங்கரின் ஆரம்பகால சினிமா தேடுதல் பயணத்தில் அவருடைய நண்பருடன் சைக்கிளில் எனது அரிசி மண்டியில் ஓசி டீ வாங்கி குடிச்ச காலமெல்லாம் உண்டு. ஏனென்றால் விஜய்யின் அப்பாவிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றிய ஷங்கர்  என்னுடைய அரிசி மண்டிக்கு அவருடைய நண்பருடன் வருவது வழக்கம்.அப்போது தான் எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அதன் பின் நான் ஒரு ஜோதிடர் என்பதை அறிந்த ஷங்கர், அவருடைய கையைப் பார்க்கச் சொன்னார்.அதன்பின் அவருடைய கையைப் பார்த்ததும் மிரண்டு போனேன், ஏனென்றால் அவர் மிகப் பெரிய இ

பாதுகாப்பு அமைச்சருடன் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டாக்டர் திரு மெர்க் எஸ்பெருடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இருநாட்டு உயரதிகாரிகள் அளவிலான கூட்டத்தில் சந்திப்பு; பெக்கா ஒப்பந்தத்தில் இருநாடுகளும் விரைவில் கையெழுத்து அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் மார்க் டி எஸ்பெர், 2+2 அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவரை புதுடெல்லியில் இன்று சந்தித்து பேசினார். ராணுவத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, தகவல் பரிமாற்றம், ராணுவ வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆய்வு செய்தனர். இரு நாடுகளும் தத்தமது ஆயுத படைகளுக்கு இடையேயான தொடர்பு குறித்து திருப்தி தெரிவித்தனர். கொரோனா தொற்று பரவல் காலத்தில் ராணுவத்தின் செயல்பாடு குறித்தும் குறிப்பாக ராணுவ ஒத்துழைப்புக் குழு சம்பந்தமாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையே அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் பெக்கா ஒப்பந்தத்த

பிசிசிஐ சூழ்ச்சிகளுக்கு ரோகித்சர்மா எடுத்துக்காட்டு -ஸ்ரீ அய்யர்

​ரோஹித் சர்மா பி.சி.சி.ஐயின் சூழ்ச்சிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு - எனது புதிய புத்தகத்தைப் படியுங்கள் என ஸ்ரீ ஐயர் ரோஹித் சர்மா கூறுகிறார், ஆனால் பி.சி.சி.ஐயின் சூழ்ச்சிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டுபுதிய புத்தகம் இந்திய கிரிக்கெட் அணித் தேர்வு எப்போதுமே சூழ்ச்சிகளால் நிரம்பியுள்ளது - எந்த ........ இல்லாத ஒரு பேட்ஸ்மேன் சில வாரங்கள் தொலைவில் உள்ள ஒரு தொடரை விளையாட தகுதியற்றவர் என்று கருதப்படுகிறார். இந்த சந்தேகத்திற்குரிய அழைப்பில் கேப்டனிடம் கேட்டதற்காக பயிற்சியாளர் நீக்கப்பட்டார். இதைப் புரிந்து கொள்ள, பாலிவுட், கிரிக்கெட் மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டத்தைப் பயன்படுத்தி ஐபிஎல் எவ்வாறு உருவானது என்பதை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும். யார் அதைக் கட்டுப்படுத்துகிறார்கள், அதைவிட முக்கியமாக, மேட்ச் பிக்ஸிங் இன்றும் பரவலாக இருக்கிறதா? இதைப் பற்றி தெரிந்துகொள்ள அமேசானில் கிடைக்கும் எனது புதிய புத்தகத்தைப் படியுங்கள், பார்க்க வேண்டிய இந்த வீடியோ காணொலியில் ஸ்ரீ ஐயர் கூறுகிறார். ​

நித்தி ஆயோக் அடல் இன்னோவேஷன் மிஷன் இணைந்து நடத்தும் சுழற்சி பொருளாதார நிகழ்ச்சி

நித்தி ஆயோக் இந்திய-ஆஸ்திரேலிய சுழற்சி பொருளாதார ஹேக்கத்தானை ஆஸ்திரேலிய காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அடல் இன்னோவேஷன் மிஷன் நடத்துகிறது 2020 டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், இந்திய-ஆஸ்திரேலிய சுழற்சி பொருளாதார ஹேக்கத்தானை ஆஸ்திரேலிய காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அடல் இன்னோவேஷன் மிஷன் நடத்துகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் சுழற்சி பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்கான புதுமையான வழிகளைப் பற்றி சிந்திக்கும் போது, இரு நாடுகளின் பிரதமர்கள் கலந்துகொண்ட மெய்நிகர் மாநாடு ஒன்றில் ஜூன் 4-ஆம் தேதி அன்று இந்த நிகழ்ச்சியைப் பற்றிய எண்ணம் உருவானது. சிறந்து விளங்கும் மாணவர்கள், புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) மற்றும் இரு நாடுகளின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால், புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளை கண்டறிதல் மற்றும் மேம்படுத்துதல் குறித்து இந்த நிகழ்ச்சியின் போது கவனம் செலுத்தப்படும். பேக்கேஜ் கழிவுகளை குறைத்தல் குறித்தான புதுமைகள், உணவு விநியோக சங்கிலிகளில் கழிவுகளை குறைப்பதற்கான புதுமைகள், நெகிழி கழிவை

பரேலியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமணை பூமிபூஜை அமைச்சர் கங்குவார் பங்கேற்பு

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உத்தரப்பிரதேசத்தின் பரேலியில்100 படுக்கைகள் கொண்ட புதிய இஎஸ்ஐசி மருத்துவமனைக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் திரு கங்குவார் பங்கேற்பு; புனித நாளான தசராவன்று அப்பகுதி மக்களுக்கு ஓர் பரிசு உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் உள்ள 100 படுக்கை வசதிகளைக் கொண்ட புதிய இஎஸ்ஐசி மருத்துவமனை கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு சந்தோஷ் குமார் கங்குவார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உயர் சிகிச்சைக்காக இதுவரை டெல்லி எய்ம்ஸ் அல்லது லக்னோவில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று வந்த பயனாளிகள் இந்த இஎஸ்ஐசி மருத்துவமனை தொடங்கப்பட்ட பின் பெரிதும் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார். இந்த மருத்துவமனையில் சாமானிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் மாதிரி மருத்துவமனையாக இது மாறும் என்றும் அவர் கூறினார். ரூபாய் 90 கோடி மதிப்பில் 4.67 ஏக்கர் நிலத்தில் இந்த மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இதன் வாயிலாக பரேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த

பாரதப் பிரதமருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்தித்துப் பேச்சுவார்த்தை

பிரதமர் அலுவலகம் பிரதமருடன் அமெரிக்க அமைச்சர்கள் சந்திப்பு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திரு மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் மார்க் எஸ்பர் ஆகியோர், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, அமெரிக்க அதிபரின் வாழ்த்துகளை, அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர். அமெரிக்க அதிபருக்கும், பரஸ்பர வாழ்த்தை தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததையும் நினைவு கூர்ந்தார். இந்தியா-அமெரிக்கா இடையே இன்று நடந்த,  2 பிளஸ் 2 இருதரப்பு கூட்டம் ஆக்கப்பூர்வமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது என பிரதமர் திரு. நரேந்திர மோடி யிடம், அமெரிக்க அமைச்சர்கள் தெரிவித்தனர்.  தொலைநோக்கு மற்றும் இலக்குகளை அடைய, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதிலும், இணைந்து செய்லபடுவதிலும், அமெரிக்க அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டுவதாக அவர்கள் கூறினர். 2 பிளஸ் 2 கூட்டம் வெற்றிகரமாக முடிந்ததை பிரதமர் பாராட்டினார். சமீப ஆண்டுகாலமாக இருதரப்பு உறவில் வளர்ச்சி மற்றும் சர்வதேச யுக்திகளில் இணைந்து செயல்படுவது திருப்தி அளிப்பதாக

இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரம் அனுசரிப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு வாரம் அனுசரிப்பு இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு வாரம்-2020 அக்டோபர் 27-ஆம் தேதி முதல் நவம்பர் இரண்டாம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. ஊழலினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் திரு ஆர் மாதவன், சென்னை விமானநிலைய இயக்குநர் திரு சி வி தீபக் மற்றும் சரக்குத் துறையின் பொது மேலாளர் திரு டி முரளிதரன் ஆகியோர் ஒருமைப்பாட்டு உறுதி மொழியை வாசிக்க இந்திய விமான நிலையத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். 'விழிப்பான இந்தியா, வளமான இந்தியா' என்பது இந்த ஆண்டு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு வாரத்தின் கருப்பொருளாகும். இந்த நிகழ்வின்போது மேதகு குடியரசுத் தலைவர், மேதகு துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் உரைகளை இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் வாசித்தனர். ஊழல் தடுப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோ

சேலம் உருக்காலையில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2020

சேலம் உருக்காலையில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் சேலம் உருக்காலையில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2020, ‘விழிப்பான இந்தியா, வளமான இந்தியா’ என்ற தலைப்பில் துவங்கியது.   திரு சஞ்சீவ் தனேஜா, நிர்வாக இயக்குநர், பணியாளர்களுக்கு நேர்மை உறுதிமொழியை முன்மொழிந்தனர்.  தலைமை பொது மேலாளர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செய்திகளை வாசித்தனர்.  கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2020 அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் சேலம் உருக்காலையிலும் SRCL நிறுவனத்திலும் ஆன்லைன் வினாடி-வினா, வாக்கியம் மற்றும் கட்டுரை போட்டிகள், கைப்பிரதி விநியோகம் மற்றும் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.

திருப்பராய்த்துறை ஸ்ரீ இராமகிருஷ்ன தபோபனம் உப தலைவர் சுவாமி திவ்யாநந்தர் காலமானார்

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் உப தலைவராக இருந்த சுவாமி திவ்யானந்தர் (86) நேற்று திருச்சியில் காலமானார். திருச்சிராப்பள்ளியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ ராமகிருஷ்ண தபோபனம் இதை திருப்பராய்துறை ஸ்ரீ தாருகாவணேஸ்வரர் ஆலயம் புனரமைத்து 1900 ஆண்டு கட்டிய கானாடுகாத்தான் வெ. வீர.நாகப்ப செட்டியார் குமாரர் இரண்டாம் திருப்பணிச் செம்மல் கானாடுகாத்தான் வெ.வீர.நா.அருணாசலம் செட்டியார் உதவியால் முன்னால் ஆளுநர் நிதியமைச்சர் மற்றும் பல பதவிகள் வகித்த சி.சுப்பிரமணியத்தின் சிறிய தகப்பனாரான சித்பவாநந்தரால் 1944 ல் துவங்கப்பட்டது அதில் 1971-ல் தபோவனத்தில் இணைந்தவர், 1977-ல் தபோவனத்தின் நிறுவனரான சித்பவானந்தரிடம் சந்நியா தீட்சை பெற்று, திவ்யானந்தர் என்ற பெயரில் தனது பணியைத் தொடங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் கிளை நிறுவனங்களான திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பரத்வாஜா ஆசிரமம், ஸ்ரீ ராமகிருஷ்ண சிறுவர் காப்பகம் ஆகியவற்றின் பொறுப்பாளராக 32 ஆண்டுகள் பணியாற்றினார். மேலும், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, உடன்குடி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பள்ளிகளின் செயல

தொழில் நிறுவன கடன் இனி வட்டிக்கு வட்டி மக்களிடம் பொருந்தாது

வட்டியின் மீது வட்டியை தள்ளுபடி செய்வதற்கான வழி முறையை மத்திய அரசு வெளியிட்டது. 2020 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை பெறப்பட்ட கடன்களுக்கு இது பொருந்தும். ரூ. 2 கோடி வரையிலான தனிநபர் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன்களுக்கு வட்டியின் மீது வட்டி பொருந்தாது.

இந்திய குடிமைப்பணி வனத்துறை தேர்வர்கள் விபரம் இணையத்தில் தகவல்

மத்திய பணியாளர் தேர்வாணையம் குடிமைப்பணிகளுக்கான (முதல் நிலை) தேர்வு 2020-ல் வெற்றி பெற்று குடிமைப் பணிகளுக்கான (முதன்மை) தேர்வு 2020, மற்றும் இந்திய வனத்துறை பணிகளுக்கான (முதன்மை) தேர்வு 2020-க்கு தகுதி பெற்றோர் 2020 அக்டோபர் 4-ம் தேதி நடைபெற்ற குடிமைப்பணிகளுக்கான (முதல் நிலை) தேர்வு முடிவின் அடிப்படையில் கீழ்கண்ட பதிவு எண்களைக் கொண்டவர்கள் குடிமைப்பணிகளுக்கான (முதன்மை) தேர்வு 2020-க்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் தற்காலிகமானதாகும். தேர்வு விதிமுறையில் கூறப்பட்டுள்ளபடி, இந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் விரிவான விண்ணப்பப்படிவம் 1-ன் வாயிலாக குடிமைப்பணிகளுக்கான (முதன்மை) தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப்படிவங்கள் மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில்((https://upsconline.nic.in)) வரும் அக்டோபர் 20-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி மாலை 6.00 வரை மட்டும் இடம்பெற்றிருக்கும். அனைத்து தகுதி உள்ள விண்ணப்பதாரர்களும் 08/01/2021 வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ள குடிமைப்பணிகளுக்கான (முதன்மை) தேர்வு 2020-அனுமதிக்காக  விரிவான விண்ணப்ப படிவங்களை ஆன்

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய. கால அவகாசம் இந்த ஆண்டு வரை நீட்டிப்பு

நிதி அமைச்சகம் வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகியவை நீடிக்கப்பட்டுள்ளன. கொவிட் -19 பெருந்தொற்று காரணமாக, வரி செலுத்துவோர் வருமானவரி சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை மேற்கொள்வதில் சவால்களை சந்தித்து வருவதால் வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள்(சில விதிகளில் தளர்வுகள் அளிக்கும்) அவசரசட்டம் 2020 (‘அவசர சட்டம்’) கடந்த 2020 மார்ச் 31-ம் தேதி கொண்டு வரப்பட்டது.  அதன்படி பல்வேறு விஷயங்களில் காலவரம்புகள் நீடிக்கப்பட்டன. இந்த அவசர சட்டத்துக்குப் பதில், வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள்(சில விதிகளில் தளர்வுகள் அளிக்கும்) சட்டம் கொண்டு வரப்பட்டது. அவசர சட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த 2020 ஜூன் 24-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், நிதி ஆண்டு மதிப்பீடு வருடம் 2019-20-க்கான அனைத்து விதமான வரிசெலுத்துவோருக்கான காலக்கெடு 2020 நவம்பர் 30-வரை நீடிக்கப்பட்டது. எனவே 2020ம் ஆண்டில் ஜூலை 31, அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்யப்பட வேண்டிய வருமான வரி 2020 நவம்பர் 30ம் தேதி தாக்கல் செய்ய வேண்டிய தேவை எ

பனிச்சிறுத்தைகளைப் பாதுகாக்க நடவடிக்கை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தகவல்

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் பனி சிறுத்தைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தகவல். பனி சிறுத்தை திட்டத்தின் கீழ் அதன் வாழ்விடத்தையும், பனி சிறுத்தையையும் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பாபுல் சுப்ரியோ கூறி உள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு பனி சிறுத்தைத் திட்டம் தொடங்கப்பட்டது. 2020 சர்வதேச பனி சிறுத்தை தினத்தை முன்னிட்டு காணொலி காட்சி வழியே உரையாடிய திரு.சுப்ரியோ, பனி சிறுத்தை வாழ்விட பாதுகாப்புக்காக இயற்கை வன மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு கடமைப்பட்டிருப்பதாக கூறினார். உள்ளூர் பங்களிப்பாளர்களைக் கொண்டு இயற்கை வன மேலாண்மை பங்கெடுப்பு அடிப்படையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து உலகளாவிய பனி சிறுத்தை மற்றும் சூழல் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு தரப்பாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த காணொலி காட்சி சந்திப்பில் பேசிய  திரு.சுப்ரியோ, இந்தியா  மூன்று பெரிய இயற்கை