முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு முழுவதும்17 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் பணி இடமாற்றம்

தமிழ்நாடு  முழுவதும் மொத்தம் 17 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.  சென்னை திருமங்கலம் காவல் சரக உதவி ஆணையர் பி.வரதராஜன், மஹாகவி பாரதியார். நகருக்கும், கடலூர் மாவட்டம் நெய்வேலி உட் கோட்டத் துணைக் கண்காணிப்பாளர் சஃபியுல்லா சென்னை அண்ணா நகர் சரக உதவி ஆணையராகவும், திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் சரக உதவி ஆணையர் எல்.பாஸ்கர் புதுக்கோட்டை உட்கோட்டத் துணைக் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.மொத்தம் 17 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தேங்காய் பவுடர் என ரூபாய். 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்திய திமுகவின் சினிமா பிரபலம்

தேங்காய் பவுடர் என ரூபாய். 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை சில நபர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குக் கடத்திச் செல்வதாக, டெல்லியிலுள்ள போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு மற்றும் சிறப்புக் காவல் பிரிவுக்கு இரகசிய தகவல் வந்தது.   அந்த  போதைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் சிக்கிய நபர்  திமுக கட்சிப் பிரமுகராவார். டெல்லியிலிருந்து வெளிநாடுகளுக்குப் போதைப்பொருட்கள் கடத்திய வழக்கில்  தமிழ்நாட்டில்  திரைப்படத் துறைப் பிரபல நபரான அன்வர் உள்ளிட்ட மூன்று நபர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய்.75 கோடி மதிப்புள்ள 50 கிலோ போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர். பின் நடந்த தொடர் விசாரணையில், போதைப்பொருட்களைக் செய்யும்  கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டது சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் எனத் தெரிந்தது. ஆகவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில், மங்கை எனும் திரைப்படத்தின்  தயாரிப்பாளரும், தி.மு.க வின் சென்னை மேற்கு மாவட்ட அணியின் துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் சிக்கியது தெரிந்த பின் அவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   அதன்பின் திமுகவிலிருந்து

வருமான வரித்துறை காங்கிரஸ் பணம் ரூபாய்.64 கோடி பிடித்தம்'

காங்கிரஸ் பணம் ரூபாய்.64 கோடி பிடித்தம்'- வருமான வரித்துறை நடவடிக்கைக்கு பின் "வங்கி கணக்கில் இருந்து ரூ.64 கோடி பிடித்தம் செய்யப்பட்டது காங்கிரஸின் செயல்பாடுகளை முடக்குவதற்காக பாரதிய ஜனதா கட்சி  செய்த சதி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகளை, '2018, 19- ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதில் 45 நாள்கள் காலதாமதம் ஏற்பட்டிருந்ததற்கு அபராதமாக ரூபாய். 210 கோடியைச் செலுத்த வேண்டுமெனக் கூறி வங்கிக் கணக்கை  வருமான வரித்துறை முடக்கியதால் . இது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும், தொண்டர்களையும் கோபப்படச் செய்தது.  காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான், "காங்கிரஸ் கட்சியின் நான்கு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நன்கொடையளிக்கும் வகையிலுள்ள எங்களின் கிரவுட் ஃபண்டிங் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் கணக்கு முடக்கம் மட்டுமல்ல, ஜனநாயகத்தை முடக்குவதற்குச் சமம். தேர்தலுக்கான அறிவிப்பு வெளி

வயநாடு மற்றும் பந்திப்பூர் எல்லையிலும் வயநாட்டிலும் விலங்குகள்-மனித மோதல் குறித்து அமைச்சர் பேச்சு

மனித-விலங்கு மோதலைத் தவிர்க்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும், விலங்குகளிடம் பரிவு காட்டுவதும் அவசியம்: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வன விலங்குகள் மீது பரிவு காட்டும் அணுகுமுறையுடன் தொழில்நுட்பத்தை விழிப்புடன் பயன்படுத்துவதன் மூலம் தற்போது அதிகம் ஏற்படும் மனித-விலங்கு மோதல் சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்  கூறியுள்ளார் . பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று  (21.02.2024) செய்தியாளர்களிடம் பேசிய யாதவ், "குறிப்பாக வயநாடு மற்றும் பந்திப்பூர் எல்லையிலும் வயநாட்டிலும் விலங்குகள்-மனித மோதல் குறித்து அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தை விழிப்புடன் பயன்படுத்தல் தொடர்பாக மத்திய அரசு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறது என்று அவர்  கூறினார். நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறிய அமைச்சர், தற்போதைய நிலைமை குறித்து அமைச்சக அதிகாரிகள் தமக்குத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.   இந்திய வன விலங்குகள் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானிகள

தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம், புதுச்சேரி காவல்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம், புதுச்சேரி காவல்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுச்சேரி காவல் துறை மற்றும் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (Rashtriya Raksha University- RRU) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மற்றும் இணைப்பு உடன்படிக்கை திங்கட்கிழமை அன்று புதுச்சேரியில் கையெழுத்தானது. இத்துடன் மிஷன் கர்மயோகி திட்டம் புதுவையில் வெற்றிகரமாகத் துவங்கப்பட்டது. கல்வித் திட்டங்களை அங்கீகரிப்பதற்கும், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் தேசிய பாதுகாப்புத் துறையில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் இந்தக் கூட்டணி வழிவகுக்கும். நிகழ்ச்சியில் மூத்த காவல் கண்காணிப்பாளர் (குற்றம் மற்றும் புலனாய்வு) சுவாதி சிங் ஐபிஎஸ் வரவேற்புரை வழங்கினார். காவல்துறை பணியாளர்கள் மற்றும் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் ஒப்பந்தத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கவுரை ஆற்றினர். காவல்துறை தலைமை இயக்குநர் பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் பல்கலைக்கழகத்தின் சார்பு துணைவேந்தர் பேராசிரியர் (முனைவர்) கல்பேஷ்.எச்.வான்திரா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் உடன்படிக்கை

நியோ மேக்ஸ் சொத்துக்களின் பட்டியலை மார்ச் மாதம் 5 ஆம் தேதி அரசிதழில் பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்

 நியோ மேக்ஸ் நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தற்போதய தகவலாக வந்தவை  முதலில் புகார் தாரர் செட்டில்மென்ட் செய்திருக்க வேண்டும். இதை நிறைவேற்றும் வகையில் EOW எனும் பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ள 76.58 கோடி மதிப்பிலான சொத்துக்களின் பட்டியலை ஏற்கெனவே நீதிமன்றம் ஆணையிட்டுள்ளபடி மார்ச் மாதம்  4- ஆம் தேதிக்குள் கெஜட்டில் பதிவு செய்து அந்த அறிக்கையை மார்ச் 5 ஆம் தேதி அரசிதழில் பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் . அவைகள் DTCP அங்கீகாரம் பெற்றவையாக இருக்கலாம். ஆனால் இந்தச் சொத்துக்கள் அனைத்தும் காட்டிலும், மேட்டிலும், ஓடையிலும், கிடங்கிலும் நியோமேக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களால் வாங்கிப் போடப்பட்ட உதவாக்கரை நிலங்களென ஏற்கெனவே செய்திகள் வந்து விட்டதாலும், தரமான நிலங்கள் யாவும் பினாமி பெயரில் வாங்கப்பட்டு இரகசியமாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுளளன.  நிறுவனத்தின் மேல் வேறு எந்தப் புதிய புகாரும் இருக்கக் கூடாது. இது எவ்வாறு சாத்தியம்?. EOW க்கு புகார்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றனவே. நீதிமன்றம் ஒரு காலக்கெடு விதித்து புகாரை நிறுத்தலாம்

புகழ் பெற்ற வானொலி ஆளுமை அமீன் சயானி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

புகழ் பெற்ற வானொலி ஆளுமை அமீன் சயானி மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார் புகழ்பெற்ற வானொலி ஆளுமை அமீன் சயானி மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய ஒலிபரப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியதில் அமீன் சயானி முக்கியப் பங்காற்றியதாகவும், தமது படைப்புகள் மூலம் நேயர்களிடையே சிறப்பான பிணைப்பை வளர்த்ததாகவும் திரு மோடி கூறினார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; "வானொலியில் திரு அமீன் சயானியின் குரல் வசீகரம் மற்றும் இனிமையைக் கொண்டதாக இருந்தது. அந்தக் குரலை தலைமுறைகளைக் கடந்து மக்கள் நேசிக்கின்றனர். தமது பணியின் மூலம், இந்திய ஒலிபரப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். நேயர்களுடன் மிகவும் சிறப்பான முறையில் பிணைப்பை அவர் வளர்த்தார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நேயர்கள் மற்றும் அனைத்து வானொலி ஆர்வலர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்

ஓய்வூதிய நிதிஒழுங்குமுறை விதிகள் தொடர்பான திருத்தங்கள் வெளியீடு

தேசியஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை (NPST) மற்றும் நல்லாட்சிக்கான ஓய்வூதிய நிதிஒழுங்குமுறை விதிகள் தொடர்பான திருத்தங்களை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும்மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளையின் இரண்டாவது திருத்த விதிமுறைகள் மற்றும் ஓய்வூதிய நிதி திருத்த விதிமுறைகள்  ஆகியவற்றை முறையே 05.02.2024 மற்றும் 09.02.2024 அன்று வெளியிட்டுள்ளது. தேசிய ஓய்வூதிய அமைப்பு (என்பிஎஸ்) அறக்கட்டளையின் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திருத்தங்கள், அறங்காவலர்கள் தொடர்பான நிபந்தனைகள், அறங்காவலர் குழுவின் கூட்டங்களை நடத்துதல் மற்றும் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி நியமனம் தொடர்பான விதிகளை எளிதாக்குகின்றன. நிறுவனங்கள் சட்டம்- 2013 மற்றும் ஓய்வூதிய நிதிகளின் விரிவான வெளிப்படுத்தல் ஆகியவற்றிற்கு ஏற்ப ஓய்வூதிய நிதிகளை நிர்வகிப்பது தொடர்பான விதிகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை  திருத்தங்கள் எளிமைப்படுத்துகின்றன. மற்ற குறிப்பிடத்தக்க திருத்தங்கள் பின்வருமாறு: ஓய்வூதிய நிதி மற்றும் ஓய்வூதிய நிதியத்தின் ஆவணங்களின் தெளி

சமாதி அடைந்த சமணத் துறவி சிரோமணி ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜுக்கு அஞ்சலி

அண்மையில் சமாதி அடைந்த சமணத் துறவி சிரோமணி ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய அஞ்சலிக் கட்டுரை புனிதத் துறவி சிரோமணி ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜி, அண்மையில் சமாதி அடைந்து நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆழ்ந்த ஞானம், எல்லையற்ற இரக்கம் மற்றும் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் அவரது வளமான ஆன்மீக வாழ்க்கை அமைந்திருந்தது. பல சந்தர்ப்பங்களில் அவரது ஆசீர்வாதங்களைப் பெறும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன்.  நான் உட்பட எண்ணற்ற ஆத்மாக்களுக்கு வழிகாட்டிய அவரது இழப்பை மிக பெரிய இழப்பாக நான் உணர்கிறேன். அவரது அரவணைப்பு, பாசம் மற்றும் ஆசீர்வாதங்கள், நல்லெண்ணத்தின்  அடையாளங்கள் மட்டுமல்ல. அவை ஆன்மீக சக்தியின் ஆழமான பரிமாற்றங்களாக அமைந்ததுடன், அவரது தொடர்பு கிடைத்த அதிர்ஷ்டசாலிகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாகவும் இருந்தன. பூஜ்ய ஆச்சார்ய ஜி, ஞானம், இரக்கம் மற்றும் சேவை ஆகிய மூன்று அம்சங்களின் சங்கமமாக எப்போதும் நினைவுகூரப்படுவார். அவர் ஒரு உண்மையான தவசீலராக திகழ்ந்தார். அவரது வாழ்க்கை பகவான் மகாவீரரின்

இந்தியாவில், 1 ஏப்ரல் 2019 ஆம் தேதிக்கு முன் விற்கப்பட்ட வாகனங்களில் உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு வேண்டும்

இந்தியாவில், 1 ஏப்ரல் 2019 ஆம் தேதிக்கு முன் விற்கப்பட்ட வாகனங்களில் உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) பிளேட்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி முறை. எச்எஸ்ஆர்பி இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் இதுவே தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க விதி. ரூபாய். 5,000 முதல் ரூபாய். 10,000 வரை அதற்கு அபராதம் விதிக்கப்படும்.ஒரு HSRP யானது எரிபொருள் வகையைக் குறிக்கும் வண்ணக்-குறியிடப்பட்ட லேபிளுடன் உள்ள நம்பர் பிளேட்டுக்கு விண்ணப்பிப்பதென்பது ஆன்லைனில் முடியும் எளிதான செயல். நம்பர் பிளேட்டுகளில் 3 டி ஹாலோகிராம், ரிப்ளக்டிவ் ஃபிலிம், ஹலோ கிராம் 'இந்தியா’ என்ற பெயர் மற்றும் லேசர் மூலம் பொறிக்கப்பட்ட வரிசை எண் போன்ற சிறப்பு அம்சங்கள் இருக்கும். அதேபோல் ஜூலை மாதம் 2022 ஆம் நாளன்று அல்லது அதற்குப் பிறகு விற்கப்படும் வாகனங்கள் இப்போது தானாக HSRP வகை எண் பிளேட்டுகளுடன் வருகின்றன. கர்நாடகா போன்ற பல மாநிலங்கள் இப்போது 17 பிப்ரவரி 2024 ஆம் தேதிக்கு முன் பழைய வாகனங்களின் நம்பர் பிளேட்களை HSRP வகையில் மாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளன. வாகனத்தின்

பண மோசடிப் புகார் பாஜக நிர்வாகியான நடிகை ஜெயலட்சுமி கைது:

பண மோசடிப் புகார் பாஜக நிர்வாகியான நடிகை ஜெயலட்சுமி கைது: பாடலாசிரியர் சிநேகன் புகாரில் நடவடிக்கை பண மோசடிப் புகாரில் நடிகையும்,பாரதிய ஜனதா கடசியின் நிர்வாகியுமான நடிகை  ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார். அது குறித்து காவல்துறை  சார்பில் கூறப்படுவது யதெனில் : திரைப்படப் பாடலாசிரியர் சிநேகன், சென்னை மாநகரக்  காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததில், “சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்து வரும் நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியுமான நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.  இதை மறுத்ததோடு, நடிகை முறைப்படி பதிவு செய்து சினேகம் அறக்கட்டளை பெயரில் நற்பணிகளைச் செய்து வரும் தன் மீது அபாண்டமாகப் பழிசுமத்தி அவதூறு பரப்பும் பாடலாசிரியர் சிநேகன் மீது நடவடிக்கை எடுக்குமாறு நடிகை ஜெயலட்சுமியும், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். அதையடுத்து, இரண்து தரப்பிலும் பலமுறை அழைத்து காவல் நிலையத்தில்  விசாரித்தனர். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதையடுத்து  இ

பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்

பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்,                        இது ஃபெர்சிய நாட்டிலிருந்து இந்தியாவின் மும்பையில் குடியேரியவர்கள் தான் பார்சிக்கள், அங்கு பல கார்ப்பரேட்டுகளின் கம்பெனி வழக்கறிஞர்கள் எல்லோரும் பார்சிக்கள் தான் அதில் ஐந்து கோடி ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்கள்  பலரும் அந்த இனக் குழுதான், அதில் முக்கியமானவர் மூத்த வழக்கறிஞர்  பாலி நரிமன் பரப்பன அஹ்ரஹார சிறையில் வாடிய முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை ஜாமீனில் .வெளிக் கொண்டு வந்தவர்.         பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்,  பிரபல சட்ட அறிஞரும், மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஃபாலி நாரிமன் இன்று காலை டெல்லியில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஃபாலி நாரிமனுக்கு 1991 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் மற்றும் 2007 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. அவர் 1971 ஆம் ஆண்டு முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், 1991 முதல் 2010 வரை இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்.  பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக 20

2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை

நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை மார்ச் 20, 2023 அன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) (தற்போதைய விலையில்) ரூ. 28.3 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2022-23 ஐ விட (ரூ. 24.8 லட்சம் கோடி) 14% வளர்ச்சியாகும் . 2023-24 இல் (கடன் திருப்பிச் செலுத்துதல் தவிர்த்து) செலவினம்  ரூ. 3,65,321 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022-23 இன் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 14% அதிகமாகும். மேலும், ரூ.43,826 கோடி கடனை அரசு திருப்பி செலுத்தும். 2022-23ல், பட்ஜெட் மதிப்பீட்டை விட செலவு (கடன் திருப்பிச் செலுத்துதல் தவிர) 4% குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான ரசீதுகள் (கடன்கள் தவிர்த்து)  ரூ. 2,73,246 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022-23 இன் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 11% அதிகமாகும். 2022-23 இல், வரவுசெலவுகள் (கடன்கள் தவிர்த்து) பட்ஜெட் மதிப்பீட்டை விட 4% அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2023-24ல் வருவாய் பற்றாக்குறை  ரூ.