முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மத்திய பட்ஜெட் 2022-ல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடக்க அமர்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார்

மத்திய பட்ஜெட் 2022-ல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடக்க அமர்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார் மத்திய பட்ஜெட் 2022-ல் நிதியமைச்சரால் செய்யப்பட்ட அறிவிப்புகளின் தீவிர அமலாக்கம் பற்றி விளக்குவதற்கு தொடர்ச்சியாக பல்வேறு துறைகள் குறித்து இணையவழி கருத்தரங்கிற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பல்வேறு துறைகளில் அமலாக்க உத்திகளுக்கு ஆலோசனைகள் வழங்க இந்தத் தொடர் கருத்தரங்கு ஒரே தளத்திற்கு அரசு மற்றும் தனியார் துறைகள், கல்வித்துறை, தொழில்த்துறை ஆகியவற்றைச் சார்ந்த நிபுணர்களைக் கொண்டுவருகிறது.  “தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி” என்ற பொருளில் 2022 மார்ச் 2 அன்று மத்திய அரசின் பல்வேறு அறிவியல் சார்ந்த அமைச்சகங்கள், துறைகளுடன் இணைந்து முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், இணையவழி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கருத்தரங்கின் தொடக்க அமர்வு பிரதமரின் உரையுடன் தொடங்கும்.  இதைத் தொடர்ந்து நான்கு பொருள்களில் வெவ்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் உரையாற்றுவார்கள். நிறைவாக, இந்த அமர்வுகளில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை அமலாக்கத்திற்கு ஏற்ப அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் அமைச்சர்களும், செயல

உக்ரைனிலிருந்து தங்களின் குடிமக்களை மீட்டுவரும் பணியில் இந்தியாவும் மற்ற சில நாடுகளும்- ஓர் ஒப்பீடு

உக்ரைனிலிருந்து தங்களின் குடிமக்களை மீட்டுவரும் பணியில் இந்தியாவும் மற்ற சில நாடுகளும்- ஓர் ஒப்பீடு உக்ரைனில் சீனாவைச் சேர்ந்த 6,000 பேர் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டின் குடிமக்களை வெளியேற்றும் திட்டங்களை ஒத்திவைத்துள்ளது. அதேசமயம் இந்தியா ஆபரேஷன் கங்கா திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி, இந்தியர்களை மீட்டு வருகிறது. உக்ரைனிலுள்ள சீனக் குடிமக்களுக்கு அந்நாடு பயண அறிவுரைகளை வெளியிடாமல் ஆதரவு நடைமுறைகளை மேற்கொள்ளாத நிலையில் இந்தியா தொடர்பு எண்கள், பயண அறிவுரைகள், ஆதரவு நடைமுறைகளை இந்தியக் குடிமக்களுக்கு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 900 ஊழியர்கள் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை அமெரிக்காவால் வெளியேற்ற இயலவில்லை. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் ஒரே மாதிரியான பயண அறிவுரைகளை வெளியிட்டுள்ளன. உதவிக்கான தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளன. ஜெர்மனியும் தனது குடிமக்களை வெளியேற்றி கொண்டுவரும் நிலையில் இல்லை. உக்ரைனுக்கான பிரிட்டன், ஜெர்மனி தூதரகங்கள் கீவ் நகரிலிருந்து மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்தியத் தூதரகம் அங்கேயே செயல்படுகிறது.

காரைக்குடி திருச்சிராப்பள்ளி இடையில் மின் பாதையில் பல்லவன் சோதனை ஓட்டம்

காரைக்குடி திருச்சிராப்பள்ளி இடையில் மின் இரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்ற நிலையில் பல்லவன் சோதனை ஓட்டம்.  விரைவில் விருதுநகர் ரயில் போக்குவரத்து துவங்க வாய்ப்பு விருதுநகர்-காரைக்குடி ரயில் விரைவில் வழக்கம்போல் திருச்சி வரை இயக்கப்படலாம் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர்-காரைக்குடி டெமோ ரயில் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு வாரமும் புதுக்கோட்டை வழியாக சனி கிழமை காலை திருச்சிராப்பள்ளி  செல்லும். பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து மீண்டும் இந்த ரயில் ஞாயிறு மதியம் திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை வழியாக காரைக்குடி செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று மதியம் இந்த ரயில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. மேலும் இந்த டெமொ ரயிலின் பெயர் பலகை திருச்சிராப்பள்ளி⇋காரைக்குடி⇋விருதுநகர் என்றிருந்துள்ளது. இதற்கு முன் விருதுநகர்⇋காரைக்குடி என்று மட்டுமே பெயர் பலகை இருந்தது. இந்த டெமொ ரயிலின் தற்போதைய பெயர் பலகையை பார்க்கையில் இது தற்போது இயக்கப்பட்டுவரும் பல சிறப்பு ரயில்களில் பெயர் பலகையை போலவே உள்ளது. எனவே விரைவில் இந்த

வேளாண்மை செய்யும் நிலங்களில் அரசு மதுக்கடைகளைத் திறக்கக்கூடாதென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

வேளாண்மை செய்யும் நிலங்களில் அரசு  மதுக்கடைகளைத் திறக்கக்கூடாதென  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.   திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா, ஆரம்பாக்கம் கிராமத்தில் யாழினி நகரிலுள்ள அரசு மதுக் கடை திறக்க கூடாதென தடை விதிக்கக்கோரி, அவ்வூரைச் சேர்ந்த அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இவ் வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் இந்தப் பகுதி வேளாண்மை செய்யும் நஞ்சை நிலம் என்பதால் அரசு மதுக்கடை திறக்கப்போவதில்லை என்றும், சட்ட விதிகளின்படி உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் என்றும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு, வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், வேளாண்மை நிலங்களில் மதுக் கடைகளை அரசு அமைக்கக்கூடாது எனவும், சட்ட விதிகளின்படி, உரிய இடத்தில் தான் அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

சென்னை நந்தனம் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை தெரிந்துக் கொள்ள இந்த கண்காட்சி உதவும்: மத்திய இணை அமைச்சர் தகவல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனுபவித்த சிரமங்கள் அவர்களது தியாகம் ஆகியவற்றை பொதுமக்கள் கண்டு படித்து உணரும் வகையில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம்/ பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் சென்னை நந்தனம் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பான புகைப்படக் காட்சி சென்னையின் பாரம்பரியமிக்க புத்தகக் காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான நிகழ்வு எனவும், சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றிய பல்வேறு அறியப்படாத வீரர்களின் தியாகம், வரலாறு ஆகியவை இந்த புகைப்படக் கண்காட்சி மூலம் வெளிப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்கள், வருங்கால சந்ததியினர் மற்றும் பலரும் அறியப்படாதசுதந்திர போராட்ட வீர

இரஷிய முன்னேற்றத்தைத் தடுக்க பாலத்தில் தன்னைத்தானே வெடிக்கச் செய்து மனித வெடிகுண்டாக மாறிய உக்ரேனிய வீரர்

இரஷிய முன்னேற்றத்தைத் தடுக்க பாலத்தில் தன்னைத்தானே வெடிக்கச் செய்து மனித வெடிகுண்டாக மாறிய உக்ரேனிய வீரர் கிரிமியாவிலிருந்து ரஷியப் படைகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக செய்தி வெளியிட்டுள்ளன. கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ஹெனிசெஸ்க் பாலத்தில் ரஷிய டாங்கிகளின் வரிசையைத் தடுக்க துணிச்சலாக செய்லபட்டு வீர மரணம் அடைந்துள்ளார். விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் என்பவர் .செச்சென் படையை ( இரஷ்ய ஆதரவுப் படை ) இரஷ்யா உக்ரேனில் களமிறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்லாவிக் இஸ்லாமியர்களால் ஆனது இப்படை..மிக்க போர்க்குணம் மற்றும் இரக்கமற்ற தாக்குதல் முறைகளுக்கும் இப்படை பெயர்பெற்றதாக கூறப்படும் நிலையில் உக்ரேனிலிருந்து முதல் தொகுதி இந்திய மாணவர்கள் உக்ரேன்-ரோமானியா எல்லை  வழியாக மீட்கப்பட்டனர் உக்ரேனிலுள்ள இந்தியர்களை ஹங்கேரி மற்றும் ரோமானியா நாட்டு எல்லைகள் வழியாக மீட்க இந்தியா முடிவு  கிரிப்டோ கரன்சி எனப்படும் பணமில்லா "மின்னணு பணத்திற்கு" ரஷ்யா மாறிவிட்டதால் இனி பிற நாட்டின் அரசு வங்கிகளை சார்ந்து ரஷ்யா பொருளாதாரம் இயங்க வேண்டிய

இரு சக்கர வாகனங்களை ஏற்றிச் செல்லும் ட்ரெய்லர்களுக்கான அறிவிக்கை வெளியீடு

 இரு சக்கர வாகனங்களை ஏற்றிச் செல்லும் அதிகபட்சமாக மூன்று அடுக்குகளைக் கொண்ட கனரக வாகனங்கள் மற்றும் ட்ரெய்லர்களுக்கான அறிவிக்கை வெளியீடு இரு சக்கர வாகனங்களை ஏற்றிச் செல்லும் அதிகபட்சமாக மூன்று அடுக்குகளைக் கொண்ட கனரக வாகனங்கள் மற்றும் ட்ரெய்லர்கள் எனப்படும் பின் இணைந்த ஊர்திகளுக்கான அறிவிக்கையை பிப்ரவரி 25-ம்தேதி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த வாகனங்கள் ஓட்டுநர் பிரிவை விட பாரம் ஏற்றும் பகுதி நீட்டிக்கொண்டிராதவாறு இருக்க வேண்டும். மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் 1989-ன் பிரிவு 93-ஐ திருத்த இது வகை செய்யும். 40-50 இரு சக்கர வாகனங்களை ஏற்றும் வகையில்  கொள்திறனை அதிகரிக்க இது உதவும்

உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வி ஒவ்வொரு குழந்தையின் உரிமை: குடியரசுத் துணைத் தலைவர்

உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வி ஒவ்வொரு குழந்தையின் உரிமை: குடியரசுத் துணைத் தலைவர் அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு  வலியுறுத்தியுள்ளார். பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் கொள்கைகளைத்  தனியார் பள்ளிகள் உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆதரவற்றோர் மற்றும் நலிந்தோருக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் அவர். பெங்களூருவில் உள்ள கிரீன்வுட் உயர்நிலை சர்வதேசப் பள்ளியில் கலை, நாடகம் மற்றும் இசைக்கான நவீன உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவற்றை இன்று திறந்து வைத்த பிறகு கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு நாயுடு, இளம் வயதிலேயே சேவை உணர்வை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். "பள்ளிகள் தங்கள் பாடத்திட்டத்தில் சமூக சேவையை சேர்க்க வேண்டும், இதனால் சமுதாயத்திற்குத் திரும்பக் கொடுக்கும் மனப்பான்மையை குழந்தைகளிடம் இளம் வயதிலேயே வளர்க்க வேண்டும்," என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார் படிப்பு, விளையாட்டு, இணைப்  பாடத்தி

1,600 கோடியில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

ஐந்தாண்டுகளுக்கு ரூ 1,600 கோடியில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்  என்ற மத்தியத் துறைத் திட்டத்தை ரூ 1,600 கோடி மதிப்பீட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு தேசிய அளவில் செயல்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக தேசிய சுகாதார ஆணையம் இருக்கும். சுகாதாரச்  சேவைகள் சூழலியலில் டிஜிட்டல் சுகாதாரத்  தீர்வுகள் மகத்தான பலனைத் தருகின்றன. கோவின், ஆரோக்கிய சேது மற்றும் இ-சஞ்சீவனி ஆகிய செயலிகள் சுகாதாரச்  சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் வகிக்கக்கூடிய பங்கை நிரூபித்துள்ளன. இருப்பினும், தொடர்ச்சியான கவனிப்பு மற்றும் வளங்களைத்  திறம்படப்  பயன்படுத்துவதற்கு இத்தகைய தீர்வுகளை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஜன்தன், ஆதார் மற்றும் கைபேசி ஆகிய மூன்றின் மீதும் மற்றும் அரசின் பிற டிஜிட்டல் முயற்சிகள் வடிவிலும் அமைக்கப்பட்ட அடித்தளங்களின் அடிப்படையில், பரந்த அளவிலான வசதிகளை வழங்குவ

ஃபைபர் இணைய சேவைக்கு பங்குதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

ஃபைபர் இணைய சேவைக்கு பங்குதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன  தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். வட்டத்தில்  உள்ள குறிப்பிட்ட நகர மற்றும் கிராமப் பகுதிகளில், ஃபைபர் இணைய வசதி (FTTH) மற்றும் அதன் தொடர்புடைய மற்ற சேவைகளை வழங்குவதற்காக, வருவாய் பகிர்வு அடிப்படையில், பங்குதாரர்களாக பதிவு செய்வதற்கு, தகுதி வாய்ந்த நிறுவனங்கள் / கேபிள் டிவி ஆபரேட்டர்கள்/ தனிநபரிடமிருந்து விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.03.2022. இது தொடர்பான விவரங்களை www.tamilnadu.bsnl.co.in என்ற இணையதள  முகவரியில் காணலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு, அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவகத்தில் உள்ள எஃப்.டி.டி.ஹெச். தொடர்பு அதிகாரி அல்லது தலைமை பொது மேலாளர், தமிழ்நாடு வட்டம், சென்னை அலுவலகத்தில் உள்ள எஃப்.டி.டி.ஹெச். அதிகாரிகளை 9449500580, 9486103800 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு  கொள்ளலாம் என தமிழ்நாடு தொலை தொடர்பு வட்ட உதவி பொது மேலாளர் (மக்கள் தொடர்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ரூபாய் 50 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியது

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ரூபாய் 50 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியது 25.2.2022 அன்று வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தூத்துக்குடி முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு ரூபாய் 50 லட்சம் வழங்கியது. வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் தலைவர் திரு டி.கே.ராமச்சந்திரன் I.A.S அவர்கள், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சென்னையில் தலைமைச் செயலகத்தில் சந்தித்து 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். கோவிட் பெரும் தொற்றினை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை முடுக்கி விட வேண்டிய அவசியத்தை உணர்ந்து தென் தமிழகத்தின் சரக்கு பரிமாற்ற நுழைவு வாயிலாக திகழும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தேவைகளை உணர்ந்து, கோவிட் பெரும் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் ரூபாய் 40.5 லட்சம் செலவிலும் கோவிட் மருந்துகள் ரூபாய் 17.5 லட்சம் செலவிலும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் ரூபாய் 1.5 லட்சம் செலவிலும் வழங்கியுள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பாரதப் பிரதமரின் நிவாரண நிதிக்காக ரூபாய் 2கோடியும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண ந

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள வேலைக்குச் செல்வோருக்கு அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் பட்டியல்

 வெளிநாட்டு வேலைக்குச் செல்வோர் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமே செல்ல வேண்டும் – குடிபெயர்வோர் பாதுகாவலர் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வோர், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் மட்டுமே செல்ல வேண்டும் என, வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளை குடிபெயர்வோர் பாதுகாவலர் திரு.எம்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு – பாதுகாப்பாக” என்ற தலைப்பில், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று நடைபெற்ற நடைபயணத்தை, சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், வெளியுறவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய குடிபெயர்வோர் பாதுகாவலர் திரு.வெங்கடாசலம், முறையான ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடு செல்பவர்களுக்கு மட்டுமே, அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் உதவி செய்ய முடியும் என்றார். முறையான முகவர்கள் மூலம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வோருக்கு மட்டுமே தமிழ்நாட்டிலும், புதுதில்லியிலும் உள்ள குடிபெயர்வோர் ப