முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எம்எஸ்ஓ பதிவு 10 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட வேண்டும். டிராய் தகவல்

 "பலவகை ஒளிபரப்புமுறை இயக்குவோர் (எம்எஸ்ஓக்கள்) பதிவு புதுப்பித்தல்" குறித்த பரிந்துரைகளை இந்தியத் தொலைத்தகவல் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளது "பலவகை ஒளிபரப்புமுறை இயக்குவோர் (எம்எஸ்ஓக்கள்) பதிவு புதுப்பித்தல்" குறித்த பரிந்துரைகளை இந்தியத் தொலைத்தகவல் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் இந்திய ஒலிபரப்புத் துறையின் டிஜிட்டல்மயமாக்கல் 2012 ஆம் ஆண்டு தொடங்கி மார்ச் 2017-ல் நிறைவடைந்தது. ஆன்டெனா விநியோக முறை (டிஏஎஸ்) அமலாக்கத்தின் போது, ஜூன் 2012-ல் பலவகை ஒளிபரப்புமுறை இயக்குவோருக்குப் புதிய பதிவுகளை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வழங்கியது. ஜூன் 2022-ல் இதன் புதுப்பித்தல்/நீட்டிப்பு செய்யப்பட வேண்டும். இருப்பினும், எம்எஸ்ஓ பதிவுகள்  புதுப்பித்தல் பற்றி கேபிள் டிவி  நெட்வொர்க் விதிகள், 1994   குறிப்பிடவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, எம்எஸ்ஓ புதுப்பித்தல் நடைமுறை தொடர்பான விஷயங்கள்  குறித்த பரிந்துரைகள் கோரி தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடமிருந்து ஒரு குறிப்பை ஆணையம் பெற்றது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக்கள் கோரப்பட

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மருந்து நிறுவனங்களிடம் ஆய்வு

கொரோனா பரவலை முன்னிட்டு உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மருந்து நிறுவனங்களிடம் ஆய்வு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை & ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா பெருந்தொற்று சில நாடுகளில் வேகமாக பரவி வருவதையடுத்து உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பு மற்றும் கொரோனா மேலாண்மை மருந்துகள் மற்றும் கருவிகள் தயாரிப்பு குறித்து மருந்து நிறுவனங்களிடம் காணொலி காட்சி வாயிலாக இன்று ஆய்வு மேற்கொண்டார்.  கொரோனா பெருந்தொற்றின்போது மருந்து நிறுவனங்களின் பங்கு குறித்து மத்திய அமைச்சர் பாராட்டினார். இந்தியாவின் வலுவான மருந்து துறையின் வலிமையால் நமது உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ததோடு 150 நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளோம். இவற்றை தரத்தில் எந்த குறைவில்லாமலும் அதே நேரத்தில் விலையை உயர்த்தாமலும் இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டன  என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சர்வதேச விநியோக சங்கிலியின் போக்கை தொடர்ந்து கண்காணிக்குமாறு மருந்து நிறுவனங்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார். மேலும் கொரோனா மேலாண்மைக்கான உயிர் காக

இஸ்ரேலில் அரசு அமைக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிரதமர் வாழ்த்து

இஸ்ரேலில் அரசு அமைக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிரதமர் வாழ்த்து இஸ்ரேல் பிரதமராகப் பொறுப்பேற்று, அங்கு அரசு அமைக்கும் திரு பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “அரசு அமைக்க உள்ள திரு நெதன்யாகுவிற்கு @netanyahu மனமார்ந்த வாழ்த்துகள். நமது கேந்திர கூட்டுமுயற்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக இணைந்து பணியாற்ற மிகுந்த ஆவலோடு உள்ளேன்.”

1.5 லட்சம் ஆயுஷ்மான் பாரத்- சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்

1.5 லட்சம் ஆரோக்கிய மையங்களின் உருவாக்கம் என்ற இலக்கை அடைந்ததற்கு பிரதமர் பாராட்டு 1.5 லட்சம் ஆயுஷ்மான் பாரத்- சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் உருவாக்கப்பட்டு, இலக்கு எட்டப்பட்டிருப்பது, புதிய இந்தியாவில், புதிய ஆற்றலை புகுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளம் என்பது ஆரோக்கியமான குடிமக்களை சார்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர், “ஆரோக்கியமான குடிமக்களை சார்ந்துதான் இந்தியாவின் வளம் உள்ளது. மிக அதிக எண்ணிக்கையில் இது போன்ற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் நிறுவப்பட்டிருப்பது, இந்தப் பாதையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இந்த சாதனை, புதிய இந்தியாவில், புதிய ஆற்றலை புகுத்தவிருக்கிறது”, என்று கூறினார்.

பா ம க பொதுக்குழுவில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த தீர்மானம்

2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம் 2023-ஆம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் பா.ம.க.வின் மாநில பொதுக்குழு கூட்டம் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நாவற்குளம் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக முன்னாள் தலைவர் ஜி.கே மணி, பேராசிரியர் தீரன், வழக்கறிஞர் பாலு, மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் மறைந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பெண் மோடிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் வளர்ச்சி குறித்தும் நிர்வாகிகளின் உழைப்பு சம்பந்தமாக பாமக நிறுவனர் ராமதாஸ் இயற்றிய ஆத்திசூடியை அறிமுகப்படுத்தி வாசித்து காட்டினார். தொடர்ந்து பாமக பொதுக்குழுவின் தீர்மானங்கள் வாசிக்கப் பட்டன.  தொடர்ந்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், மே மாதம் 5 ஆம் தேதி  சித்ரா பவுர்ணமி தினத்தையொட்டி மீண்டும் வன்னியர் சங்க மாநாடு நடத்தப்படும் என அறிவித்துள்ளார். பிரதமர் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார். ஒரு கட்சி என்பது எம்பி,எம்.எல்.ஏ.க்களை வைத்து அல்ல

சமூக ஊடக வைரலான ஜசக் வீட்டு விளம்பரப் பலகை

திருநெல்வேலி திரைப்படத் துணை நடிகர் ஐசக் பாண்டியன்  தனது வீட்டை வாடகைக்கு விடுவதற்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளார். அது வைரலாகிறது. . ஆனால்  அப்படி என்ன வித்தியாசம் தெரியுமா? இதோ `வீடு வாடகைக்கு – குடிகாரர், வடமாநிலத்தவர், எடப்பாடி அதிமுக-வினர் அனுக வேண்டாம்’!  என உள்ள இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதைக்கண்ட வலைதள நபர்கள் பலரும், “அட என்னங்க இது… என்னதான் விமர்சனமா இருந்தாலும், மது குடிப்போரையும் அரசியல்வாதிகளையும் இப்படியா இணைக்கிறது” என்று கேட்கத் தொடங்கினர். ஐசக் பாண்டியனின்  நியாயம் இது  அவர் கூறுகையில்   “என்னை பொறுத்தவரை, குடி பழக்கமென்பது இளைஞர்களை பின்னோக்கி கொண்டு செல்வதாகும். இன்றைய தமிழ் இளைஞர்கள், குடிக்கு அடிமையாகியிருக்கிறார்கள். இவர்களால் தமிழ் சமுதாயத்தை பின்னோக்கி செல்லும். அவர்களால் வீட்டிலும் பிரச்னை வரும். அதனால் அவர்கள் என்னை அனுக வேண்டாம் எனவும். குடியால் மூழ்கிய நம்மூர் இளைஞர்கள் பலரும், வேலை வாய்ப்பையும் இழந்து வருகின்றனர். இதனால் வடமாநில தொழிலாளர்கள் இங்கே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.. தமிழ் பேசுவோரை விட இந்தி பேசுவோரும் பிற வட மாநில மொழி ப

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்து தமிழ்குமரன் விலகல்

பாட்டாளி மக்கள் கட்சியுன் தலைமை நிலையச் செய்தியில் இளைஞரணித் தலைவரான முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் விலகல் கடிதம்  பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்து சில சூழ்நிலைகள் காரணமாக விலகிக் கொள்வதாக கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதஸிடம்  ஜி.கே.எம். தமிழ்க்குமரன் ராஜினாமா செய்தார். 2022 அக்டோபர் 22 ஆம் தேதியில்   பா.ம.க. வின்  இளைஞரணித் தலைவராக  ஜி.கே.எம். தமிழ்க்குமரன் நியமனம் செய்யப்பட்ட நிலையில்  பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச்.ராமதாஸிடம் அவர்கள் ராஜினாமா செய்த கடிதத்தை  வழங்கியதாக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இராஜினாமாவுக்கான உண்மையான காரணம் விரைவில் தெரியவரலாம்.

2022 ஆம் ஆண்டு பசுமை செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் ரூ. 2218 கோடி மதிப்பில் 46 புதிய திட்டங்களுக்கு அனுமதி

 உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம் 2022-ம் ஆண்டில் உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம் 2022-ம் ஆண்டில் உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் முக்கிய  செயல்பாடுகள் மற்றும் சாதனைகளில் சில: பசுமை செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் ரூ. 2218 கோடி மதிப்பில் 46  புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 2021-22-ம் நிதியாண்டில் 10.42 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது.  இது முந்தைய நிதியாண்டில் 8.56 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்தது. பிரதமரின் குறு உணவுப்பதப்படுத்துதல் தொழில் நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்ட அடிப்படையில் 12 பிராண்ட் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறையின் உற்பத்தியுடன் கூடிய .ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெற 182 விண்ணப்பங்களுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இதில் 30 விண்ணப்பங்கள் சிறுதானியப் பொருட்கள் அடிப்படையிலான விண்ணப்பங்கள் ஆகும். விடுதலைப் பெருவிழாவின் 75-வது ஆண்டை முன்னிட்டு 75 உணவுப்

எல்லைப் பாதுகாப்பு படையினருக்கான ‘பிரஹாரி’ மொபைல் செயலி அறிமுகம்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர்  அமித்ஷா எல்லைப் பாதுகாப்பு படையினருக்கான ‘பிரஹாரி’ மொபைல் செயலியை புதுதில்லியில் இன்று அறிமுகம் செய்ததுடன் திருத்தப்பட்ட 13 கையேடுகளையும் வெளியிட்டார் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித்ஷா எல்லைப் பாதுகாப்பு படையினருக்கான ‘பிரஹாரி’ மொபைல் செயலியை புதுதில்லியில் இன்று அறிமுகம் செய்ததுடன் திருத்தப்பட்ட 13 கையேடுகளையும் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, எல்லைப் பாதுகாப்புப் படைக்கான இந்த பிரஹாரி செயலி செயலுக்கமான நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார். தற்போது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்குமிடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை இந்த செயலியின் மூலம் எளிதில் தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.  குறைதீர்ப்பு நடைமுறைகளை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்பதுடன் எல்லைப் பாதுகாப்புப் படைவீர்ர்களுக்கான நலத்திட்டங்களையும் இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினரின் செயல்பாடுகள், நிர்வாகம், பயிற்