அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்காரர்கள் தாமே மேற்கொள்ளும் நடவடிக்கை (உரிமையை தாமே மாற்றுவது) 2. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலோ அல்லது வருவாய்த்துறையினர் உரிமையாளாரால் மேற்கொள்ளும் விற்பனையின் மூலமான நடவடிக்கை (கட்டாய உரிமை மாற்றம்) 3. ஒருவருக்கு பின் ஒருவர் என்ற வாரிசுரிமை மூலமான அடிப்படையில் (வாரிசுரிமை மாற்றம்) தமிழ்நாட்டில் பொதுமக்கள் பட்டா பெறுவதற்கும், பட்டா மாற்றம் செய்வதற்கும் தமிழக அரசு சட்டங்களையும், விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளது. அதில் சில முக்கியமான பகுதிகளை நாம் அறிந்து கொண்டால் பட்டா பெறுவதும், பட்டா மாற்றம் செய்வதும் எளிதாகிவிடும். 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்டாப்பதிவு புத்தகச் சட்டம் : பிரிவு 3(1) - தாசில்தார் ஒவ்வொரு நில உடமையாளருக்கும் அவர் சொந்தமாக வைத்திருக்கும் நிலத்தை பொருத்து அவர் விண்ணப்பத்தின் பேரில் பட்டா பதிவு புத்தகம் ஒன்றை வழங்க வேண்டும் பிரிவு 3(7) - தாசில்தார் பட்டா மாற்றம் செய்வதற்கு முன் நிலத்தில் அக்கறை கொண்டுள்ளவர்களுக்கு நியாயமானதொரு வாய்ப்பினை கொடுக்க வேண்டும் பிரிவு 3(9) - பட்டா பதிவு புத்தகத்தில் அடங்கியுள்ள பதிவுகள், விவரங்கள் ஆகியவற்றுக்காக ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் பட்டா பதிவு புத்தக பதிவேடு பராமரிக்கப்பட்டு வர வேண்டும் பிரிவு 3(10) - உரிய கட்டணங்கள் செலுத்தப்படுவதன் பேரில் நில உடமையாளருக்கு பட்டா பதிவு புத்தகம் வழங்கப்பட வேண்டும். பிரிவு 10 - பட்டாவில் மாற்றம் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் முதலில் மனுவை தாசில்தாரிடம் தான் கொடுக்க வேண்டும். தாசில்தாரே முதன்மை அதிகாரி ஆவார். பிரிவு 12 - தாசில்தார் உத்தரவின் மீது வருவாய் கோட்டாட்சியரிடம் முதல் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும் பிரிவு 13 - வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை எதிர்த்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்புபுத்தக விதிகள்: விதி 3(1) - தாசில்தார் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களை ரயத்துக்களைபஹ பொருத்தமட்டில் ஒவ்வொரு உரிமையாளருக்கும், இந்த சட்டத்தின் கீழ் பட்டா விவரக்குறிப்பு புத்தகம் வழங்கப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிட்டு சம்பந்தப்பட்ட கிராமத்தில் தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும் விதி 7 - பட்டா உரிமை புத்தகங்களுக்கான கட்டணம் ரூ. 20 /- ஆகும் விதி 13 - இந்தச் சட்டத்தின் கீழ் பட்டா பதிவு புத்தகத்தில் யாருடைய உரிமைகள் அல்லது பற்றுகள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதோ அல்லது பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நபர் தாசில்தார் கேட்டுக் கொள்வதன் பேரில் தாசில்தாரின் ஆய்வுக்காக, இச்சட்டத்தின் யாதொரு நோக்கத்திற்காக விவரங்களையும், ஆவணங்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் தாசில்தாருக்கு அளிக்க வேண்டும் விதி 14 - இச்சட்டத்தின் கீழ் தாசில்தார் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக 30 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியரிடம் முதல் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டும் விதி 15(1) - தாசில்தார் அல்லது வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை திருத்தியமைக்க வேண்டும் என்று கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்து கொள்ள வேண்டும் விதி 15(2) - மேற்சொன்ன கால அளவிற்குள் அந்த மனுவை, மனுதாரர் தாக்கல் செய்ய முடியாமல் போனதற்கு நியாயமான, போதுமான காரணம் உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் கருதினால் விதி 15(1) ல் கூறப்பட்டுள்ள கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் உத்தரவை திருத்தியமைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொள்ளலாம் ஆட்சேபனைகளை எப்படி தாக்கல் செய்ய வேண்டும்? 1. தாசில்தாரின் பட்டா மாற்றம் இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்புகள் 14 மற்றும் 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது 2. இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்புகள் 14 மற்றும் 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி பட்டா மாற்றம் செய்வதற்கு முன் ஏற்கனவே கூட்டுப்பட்டாவில் உள்ள எனக்கு நீதிக்குட்பட்டு அறிவிப்பு கொடுக்காமலும், வாய்ப்பு அளிக்காமலும் என் தரப்பு வாதத்தை கேட்காமலும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது சட்டப்படி தவறாகும் 3. இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 375 ன்படி தாசில்தார் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை மதித்து நடக்கவில்லை 4. வருவாய் நிலை ஆணை எண் 31 ஐ பின்பற்றி பட்டா மாற்றம் செய்யப்படவில்லை 5. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை தாசில்தார் கடைபிடிக்கவில்லை 6. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 3(7) ன்படி நிலத்தில் அக்கறை கொண்டுள்ள எனக்கு முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை. அறிவிப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை 7. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 7 ல் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை தாசில்தார் பின்பற்றவில்லை 8. தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ன் விதி 3 ன்படி சம்பந்தப்பட்ட கிராமத்தில் பட்டா மாற்றம் குறித்து அறிவிப்பு செய்யப்பட்டு தண்டோரா போடப்படவில்லை 9. VAO வருவாய் நிலை ஆணை மற்றும் கிராம நிர்வாக நடைமுறை நூல் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை மீறி சட்ட விரோதமாக பட்டா மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளார். 10. இயற்கை நீதிக்கு புறம்பாகவும், சட்ட விரோதமாகவும் பட்டா மாற்றம் தாசில்தாரரால் செய்யப்பட்டுள்ளது. தற்போது அரசு பத்திரப்பதிவு செய்தவுடன் பட்டா மாறுதல் தானாகவே நடக்கும் என்பதில் மக்களின் பாரம் குறைகிறது மற்றும் ஊழல் நடக்காது அடுத்தவர் சொத்து திருட்டு ப் போகாது இப்படி பல நன்மை உண்டு. கிராம நிர்வாக அலுவலர் என்பவர்கள் அரசு பொது ஊழியர்கள் மக்களின் பங்கு சேவையாளர்கள் அவர்கள் மக்களின் ஏஜமான்கள் அல்ல. அவர்கள் தற்போது இந்த பத்திரப்பதிவு செய்தவுடன் பட்டா மாறுவதால் தாங்கள் இலஞ்சம் வாங்கி மாற்றம் செய்ய முடியாது என்பதாலேயே இப்போது போராடுகின்றனர் இது இந்திய ஊழல் தடுப்பு சட்டத்திற்கு விரோதமான செயலாகும். அதை அரசு தடுக்கவேண்டும். “பத்திரப் பதிவு முடிந்தவுடன் கணினி வாயிலாக உடனே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் எதிர்ப்பாம்.” பட்டா என்பது வரிசெலுத்தும் ஆவணம் என் என்பதை மறந்து இராமன் வீட்டுச் சொத்தை குப்பன் வீட்டுக்கு பட்டா கொடுத்து வழக்கு நீதிமன்றம் வரை சென்ற கதை இனி இல்லை. அவர்கள் விரும்புவ தெல்லாம், பத்திரத்தை தூக்கிக் கொண்டு கிராம நிர்வாக அலுவலர்களான இவர்கள் முன் போய் கை கட்டி மக்கள் நிற்க, அவர் நம்மை உட்கார வைத்து, முதலில் எந்தவிதமான பட்டா? 1. Simple Transfer Patta அதாவது வெறும் பெயர் மாற்ற பட்டாவா? 2. RPT பட்டாவா ? அல்லது TPT பட்டாவா 3. Sub-Division பட்டாவா? என்பதை ஆய்ந்து அதற்குத் தக்கவாறு, யார் யாருக்கு எவ்வளவு? அதாவது கிராம நிர்வாக அலுவலருக்கு எவ்வளவு,வருவாய் ஆய்வாளருக்கு க்கு எவ்வளவு, நில அளவரான சர்வேயருக்கு எவ்வளவு, தலைமை சர்வேயருக்கு எவ்வளவு, துணை வட்டாச்சியருக்குக்கு எவ்வளவு, கடைசியாக தாசில்தாருக்கு எவ்வளவு என கூட்டல் கணக்கெல்லாம் நமக்கு கற்றுக் கொடுத்து விட்டு, அப்பாவியாய் முகத்தைக் காட்டி பேரம் பேசிப் பேசி, சொத்தின் மதிப்புக்கும், விஸ்தீரணத்திற்குத் தக்க இலஞ்சத் தொகையை அவர் நிர்ணயம் செய்து நம்மிடம் கோரிக்கை வைக்க, நாமும் உள்ளுக்குள் மனம் நொந்து, வெந்து, சகித்து பணிவுடன் பேரம் பேசி,பலரும் அவர்களை இலஞ்ச ஒழிப்புத்துறையில் காட்டிக்கொடுக்காத பலரும் அவர்களது மனம் நோகா வண்ணம் சில/ பல ஆயிரங்களைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு, அழுகையுடன் அட்வான்ஸ் கொடுத்து விட்டு, அதை வெளியில் தெரியாமல் அவர்களின் பின் நடையாய் நடந்து செருப்புத் தேய்ந்த பின் அவர்கள் நம் மீது கருணை காட்டி காசைக் கறாராக கறந்து கொண்டு, நம் சொத்துக்கு, நம் பெயரில் அரசுக்கு வரி கட்டும் பட்டாவைத் நம் கையில் திணித்து அனுப்புவது தான் கிராம நிர்வாக அலுவலர்கள் விரும்பும் சிறந்த முறையாம். அதை விடுத்து பத்திரப் பதிவு முடித்த உடன் பட்டாவைக் கைமேல் பெறலாம் என்று மக்களுக்கு வசதி செய்தால், இலகரங்களில் அவர்கள் இழக்கும் லஞ்ச வருவாயை எவ்வாறு ஈடு செய்வது ? தங்கள் தினசரி உபரி வருமானத்தை விட்டுக் கொடுத்து மக்களுக்கு சேவை செய்யும் அளவுக்காக இவர்கள் அரசு ஊழியர்களை தயார் படுத்தி வைத்திருக்கிறார்கள்? மக்கள் நலனுக்கான அரசு திட்டத்தை இலஞ்சம் கிடைக்காது என்ற காரணத்தால்நேரடியாக எதிர்க்கும் அளவுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் தைரியசாலிகளாக இருப்பதற்கு நாம் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகளும் ஒரு காரணம் அரசு உத்தரவு எதிர்க்கும் இவர்கள் பதவியில் நீடிக்கலாமா என்ற வினா வரும்போது மக்களே விழித்துக் கொள்ளுங்கள். நம்மிடம் கொள்ளையடிக்க கிராம நிர்வாக அலுவலர்கள் வெளிப்படையாக அரசின் மக்கள் நலத்திட்டங்களை எதிர்க்கிறார்கள் என்றால் யார் ஏமாளிகள் என்று புரிந்து போராட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் நிலை வரும் வரை இந்த ஊழல் வாதிகள் நிலை இப்படித்தான் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா