ஜூன் 30 வரை ஊரடங்கை அமல் படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஒருவாரம் நீடிப்புஜூன் 30 வரை ஊரடங்கை அமல் படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்த நிலையில்தமிழகத்தில் ஜூன் மாதம் 7 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பதாகத் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஜூன் மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் 13 வகைகள் கொண்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுமென்றும் .

 தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் :- தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக வருகிற 31 மே 2021 வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு வரும் 1 ஜுன் 2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில் நோய் தொற்றின் தன்மையை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய் தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலை மதிப்பற்ற உயிர்களை காக்கும் நோக்கத்திலும் இந்த முழு ஊரடங்கு             7 ஜுன் 2021 காலை 6 மணி வரை மேலும் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

பொதுமக்களின் அத்தியாவசிய அன்றாடத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையிலிருந்து வரும் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். மேலும் மளிகைப் பொருட்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியுடன் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

இதுதவிர அடித்தட்டு பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் 13 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் ஜூன் மாதம் முதல் வழங்கிட கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா