சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ரூ 24.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ரூ 24.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் ஒருவர் கைது.   


விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, ஏர் அரேபியா விமானம் ஜி9-471 மூலம் சார்ஜாவில் இருந்து சென்னை வந்திறங்கிய திருவாரூரை சேர்ந்த கலையரசன் கருணாநிதி, 31, என்பவரை வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர்.

அவரை சோதனையிட்ட போது, அவரது உடலில் இருந்து 602 கிராம் எடை கொண்ட தங்க பசை நான்கு பொட்டலங்களில் கைப்பற்றப்பட்டது. அதில் இருந்து ரூ 24.2 லட்சம் மதிப்புடைய 495 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கம் எடுக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா