பக்ரீத் பண்டிகையை கமுன்னிட்டு குடியரசுத் தலைவர் மற்றும் துணை தன் தலைவர் வாழ்த்து

குடியரசுத் தலைவர் செயலகம்

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்துபக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு, தன்னலமற்ற மனப்பான்மை மற்றும் தியாக உணர்விற்கு நன்றி செலுத்துவதற்காகவும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்காக இணைந்து பணியாற்றவும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நமது மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளவும், ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பாகவும் பக்ரீத் பண்டிகை அமைகிறது.

பெருந்தொற்றின் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பின்பற்றி, சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்காகப் பணியாற்றி, கொவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராட உறுதி ஏற்போம்”, என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது -

‘‘ பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தியாகத் திருநாளான பக்ரீத், கடவுள் மீதான இறுதி பக்தியை எடுத்துக்காட்டுகிறது.      

நமது நாட்டில் பண்டிகைகள், குடும்பத்தினர் மற்றும் சமுதாயத்தினருடன் இணைந்து கொண்டாடும் நிகழ்வாக உள்ளன. ஆனால், தற்போதைய கொவிட்-19 தொற்று காரணமாக, இந்தாண்டு கொண்டாட்டத்தை அடக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். பக்ரீத் பண்டிகையை அதிக முன்னெச்சரிக்கையுடனும், கொவிட் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியும் ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். 

இந்த பக்ரீத் பண்டிகை, நமது வாழ்வில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டுவரட்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.                                     இனி இதன் வரலாறு காண்போம்:இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபம் இப்றாஹீம். முற்காலத்தில் தற்போதய ஈராக்கில் வாழ்ந்து வந்ததாகவும் நெடுநாட்களாக, குழந்தை இல்லாதவருக்கு   இரண்டாவது மனைவி ஹாஜரா மூலம் ஓர் ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். என்ற வரலாறு கூறும் அம் மக்கள் இஸ்மாயீல், பால்யப் பருவத்தை எட்டிய போது, அவரைத் தனக்குப் பலியிடுமாறு, கடவுள், இப்ராஹிம் கனவின்  கட்டளையிட்டதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிடத் துணிந்த நிலையில் ஜிப்ரயீல் எனும் வானவரை அனுப்பி, இறைவன்  தடுத்ததாகவும். பதிலுக்கு ஓர் ஆட்டை கொடுத்து, இஸ்மாயீலுக்குப் பதில் அந்த ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டதாகவும்.

இந்தச் சம்பவத்தின் அடிப்படையிலேயே, இஸ்லாமிய மக்கள் தியாகத் திருநாள் கொண்டாடுகின்றனர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகள் மற்றும் ஒட்டகம் பலியிட்டு, இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.  புராண காலத்தில்           சிறுத்தொண்டர் நாயனார் செய்த செயல் போலவே இப்ராஹிம் செய்த செயல் இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை கால வித்தியாசங்கள் மட்டுமே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்