சென்னை துறைமுகம். சரக்கு கையாளுதல் மற்றும் கொள்கலன்களில் புதிய சாதனையைபா படைத்துள்ளது

சரக்கு கையாளுதல் மற்றும் கொள்கலன்களில் புதிய சாதனையை சென்னை துறைமுகம் படைத்துள்ளது


2021 அக்டோபரில் 44,65,459 டன் சரக்குகளை கையாண்டு அதன் முந்தைய சாதனைகளை சென்னை துறைமுகம் முறியடித்துள்ளது. இதற்கு முன்னர் 2021 ஜூனில் 39,43,100 டன் சரக்குகளை சென்னை துறைமுகம் கையாண்டிருந்தது.

மேலும் 2021 அக்டோபர் மாதத்தில் 1,53,948 டிஇயூ கொள்களன்களை கையாண்டு முக்கிய சாதனையை சென்னை துறைமுகம் எட்டியுள்ளது. 2020 டிசம்பர் மாதத்தில் 1,51,754 டிஇயூ கொள்களன்களை கையாண்டது முந்தைய சாதனையாக இருந்தது.


 2020 டிசம்பரில் கையாளப்பட்ட 93,484 டிஇயூ கொள்களன்களை விட அதிகமாக 2001 அக்டோபரில் 94,330 டிஇயூ கொள்களன்களை கையாண்டு சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் சாதனை படைத்துள்ளது.

முனைய செயல்பாட்டாளர்களான சென்னை கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் மற்றும் சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட், இதர பங்குதாரர்கள் மற்றும் துறைமுக அலுவலர்களை மேற்கண்ட சாதனைக்காக சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் திரு சுனில் பாலிவால் ஐஏஎஸ் பாராட்டியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா