அஇஅதிமுகவின் ஐடி விங் மாநாடு சென்னையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் முன்னெடுப்பில்
அதற்கு முன்னர் அதிமுக அமைப்புச் செயலாளர் டாக்டர் சி.பொன்னையன் பாஜகவிற்கு எதிராக காலஞ்சென்ற முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு முதல் முறையாக பாஜக விற்கு எதிராக குரல் கொடுத்தார் அதில் "தன்னை எதிர்க்கட்சி போல காட்ட நினைக்கிறது. அதற்கான பிம்பத்தை ஏற்படுத்த பாஜக ஏற்படுத்துகிறது. அதை நம்முடைய ஐடி விங் நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும். இதற்காக நம்முடைய ஐடி விங் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வர நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் தமிழ்நாட்டில் இன, மொழி, திராவிட உணர்வு உள்ள மாநிலம். இங்கு பா.ஜ.க வின் பருப்பு வேகாது.பாஜக எதிர்க்கட்சி போல செயல்பட தங்களை காட்டிகொள்கிறது. பா.ஜ.க.தான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற மாயை உருவாக்கப்படுகிறது. அது உண்மையில்லை. அந்த பிம்பத்தை நாம் உடைக்க வேண்டும்," என்று பொன்னையன் கருத்து தெரிவித்திருந்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவே பாஜகவுக்கு எதிராக அதிமுகவின் முதல் கருத்தாகும் இதற்கு ஏற்றபடி அதிமுக ஐடி விங்கில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு. விரைவில் பல புதிய நியமனங்கள் ஐடி விங்கில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கும் நிலையில்.அதிமுக வின்பொன்னையன் இப்படி இரண்டு நாள் முன்பு பாஜகவை விமர்சனம் செயத நிலையில் தற்போது தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ஐடி விங்கில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிமுக தனது ஐடி விங் மீது கவனம் செலுத்தி உள்ள நிலையில் பதிலாக பாஜகவும் ஐடி விங் நிர்வாகிகளை மாற்றியதன்படி மொத்தமுள்ள 60 பாஜக அமைப்பு மாவட்டங்களில் 49 மாவட்டங்களின் நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
புதிய ஐடி விங் மாவட்ட செயலாளர்கள் நியமனம் மீதமுள்ள மாவட்டங்களில் சில தினங்களில் புதிய நிர்வாகிகள் நியமனம் நடக்கலாம்.இதற்கான அறிவிப்பை பாஜக தமிழ்நாடு ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் வெளியிட்டார். சமீபத்தில் தான் பாஜகவில் புதிய . மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது ஐடி விங்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்