முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின்கட்டணக் கொள்ளை முடிவுக்கு வருமாயென வினவிய திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வீட்டுக்குச் சென்று குறைகளைக் கேட்டறிந்த மின்வாரிய அதிகாரிகள்

மின்கட்டணக் கொள்ளை முடிவுக்கு வருமாயென திரைப்பட இயக்குநர்  தங்கர்பச்சான் சமூக வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பிய நிலையில், மின்வாரிய அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்று குறைகளைக் கேட்டறிந்தனர்.


மின்கட்டண விவகாரத்தில் முதலமைச்சர் மனமிறங்குவாரா என அவர் எழுப்பியிருந்த கேள்வி தான் மின்வாரிய அதிகாரிகளை அவரது இல்லம் நோக்கிச் செல்ல வைத்துள்ளது.

இதுவே பொதுமக்களில் யாரேனும் ஒருவர் மின்வாரிய குறைகளை இப்படி சுட்டிக்காட்டினால் அவர்களது வீட்டுக்கும் சென்று அதிகாரிகள் புகார்களை கேட்டறிவார்களா என்ற கேள்விக்கு மின் வாரியம் தான் பதில் தர வேண்டும் இலஞ்சத்தில் மூழ்கிப் போன அலுவலகமான 

தமிழக மின்சார வாரியத்தின் மின் கட்டணக் கணக்கீட்டு முறை குறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வீட்டு மின் கட்டண கணக்கீடு முறையில் குளறுபடி நிகழ்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்ததையடுத்து இன்று அவரது வீட்டுகே சென்ற மின்வாரிய செயற்பொறியாளர்கள் தங்கர்பச்சானின் புகாரைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

நல்ல விஷயம்

மின் வாரிய அதிகாரிகளின் இது போன்ற துரித நடவடிக்கை பாராட்டத்தக்கது தான். ஆனால் இதுவே சாமனியர்களில் ஒருவர் இப்படி புகார் கூறியிருந்தால் அவர்களது குறையும் இதேபோல் உடனடியாக களையப்படுமா என்றால் அது சந்தேகமே. சினிமா, அரசியல், தொழில் பிரபலங்களுக்கு காட்டும் மரியாதையில் சிறிதளவாவது சாமானிய பொதுமக்களுக்கும் மின் வாரிய அதிகாரிகள் காட்ட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே நேற்று தங்கர்பச்சான்

மின் கட்டணம்
''அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில்தான் ஊதியங்களைப் பெறுகின்றனர். அதுவும் ஒரே ஒரு நாள்கூட தாமதமாகாமல். ஆனால், மின்சாரக்கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன. மாதம் மாதம் கணக்கெடுத்திருந்தால் 16 ஆயிரம் மட்டுமே என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும்.''

இரண்டே கால் மடங்கு

''ஆனால் கடந்த மாதத்தில் 36 ஆயிரம் ரூபாய் மின்சாரக்கட்டணமாக செலுத்தியுள்ளேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கெடுக்கப்படுவதால் இரண்டேகால் மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கைகளில் இந்த மின்சாரக் கட்டணக்கொள்ளையை தடுக்கும் விதமாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என தமிழக முதலமைச்சர் கூறியிருந்தார்.''

''இந்த நிலையில், அடுத்த மாத மின் கட்டணம் செலுத்தும் தேதியை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கிறேன். ஒரு வீட்டின் மின் கட்டணச் செலவே இவ்வளவு என்றால் மற்ற குடும்பச் செலவுகளை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. அடுத்த மின் கட்டணமும் இதேபோல் செலுத்தச்சொன்னால் அதற்கான திறன் தமிழ்நாட்டில் எத்தனை குடும்பங்களுக்கு இருக்கும் என்பதை முதலமைச்சர் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தொழில் வாய்ப்பின்றி, வேலை வாய்ப்பின்றி பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க இயலாமல் வருமானமின்றி தவித்துக் கொண்டிருக்கும் இம்மக்களுக்கு முதலமைச்சர் உடனடியாக மாதாந்திர மின் கட்டண முறையை அறிவித்து உதவ வேண்டுகிறேன்.''எனக  கூறியிருந்தார் இதனிடையே   அவரது பின் பதிவு இது     நேற்று! 

மின்சார கட்டணக்கொள்ளை முடிவுக்கு வருமா?

முதலமைச்சர் மனமிறங்குவாரா?

அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில்தான் ஊதியங்களைப் பெறுகின்றனர். அதுவும் ஒரே ஒரு நாள் கூட தாமதமாகாமல்! ஆனால் மின்சாரக்கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன! மாதம் மாதம் கணக்கெடுத்திருந்தால் 16 [பதினாறு] ஆயிரம் மட்டுமே என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும்.ஆனால் கடந்த மாதத்தில் 36 [முப்பத்தி ஆறு] ஆயிரம் ரூபாய் மின்சாரக்கட்டணமாக செலுத்தியுள்ளேன். 

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கெடுக்கப்படுவதால் இரண்டேகால் மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கைகளில் இந்த மின்சாரக் கட்டணக்கொள்ளையை தடுக்கும் விதமாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என முதலமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் அடுத்த மாத மின் கட்டணம் செலுத்தும் தேதியை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கின்றேன். ஒரு வீட்டின் மின் கட்டண செலவே இவ்வளவு என்றால் மற்ற குடும்பச் செலவுகளை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியவில்லை.அடுத்த மின் கட்டணமும் இதேபோல் செலுத்தச்சொன்னால் அதற்கானத்திறன் தமிழ் நாட்டில் எத்தனைக் குடும்பங்களுக்கு இருக்கும் என்பதை முதலமைச்சர் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தொழில் வாய்ப்பின்றி,வேலை வாய்ப்பின்றி பிள்ளைகளை பள்ளி,கல்லூரிகளில் சேர்க்க இயலாமல் வருமானமின்றி தவித்துக் கொண்டிருக்கும் இம்மக்களுக்கு முதலமைச்சர் உடனடியாக மாதாந்திர மின் கட்டண முறையை அறிவித்து உதவ வேண்டுகின்றேன்.

இப்படிக்கு 

தங்கர் பச்சான் 

சென்னை மாநகரம்- 600032

07.08.2021

---------------------------------------------------------------------------

இன்று!

எனது கோரிக்கையை அறிக்கையாக ஊடகங்களுக்கு அனுப்பிய ஒரு சில மணி நேரத்திலேயே மின்சாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் தொடர்புகொள்வதாக மிசாரத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் எனது கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். நேரில் வந்து மின் கணக்கு கட்டணம் தொடர்பான ஐயங்களை தீர்த்து வைக்க அதிகாரிகளை உடனே அனுப்புவதாகக் கூறியபொழுது முதலில் எனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தேன். பின்னர், அவருக்கு என்னுடைய பதிலாக ‘என்னுடைய கோரிக்கை மின் கணக்குத் தொடர்பானது அல்ல: தேர்தல் வாக்குறுதியில் முதலமைச்சர் அளித்திருந்தபடி, தற்போதுள்ள இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை மாற்றி மாதம் ஒருமுறை செலுத்தும் வகையில் உடனே செயல்படுத்த வேண்டும்’ எனும் எனது கோரிக்கையின் விளக்கத்தைக் கூறினேன்.

இந்நேரம் மின்துறை அமைச்சருக்கு எட்டிய செய்தி முதலமைச்சரின் பார்வைக்கும் சென்று சேர்ந்திருக்கும் என நம்புகின்றேன். மின் கட்டண சுமையால் இன்னல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே என்னைப்போன்றே முதலமைச்சரின் அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் அறிகின்றேன்!      மின் கட்டணத்தை மையமாக வைத்து கடந்த சில நாட்களாக புகார்கள் அதிகரித்து வருவதைக்

கவனத்தில் கொண்டு

இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் கவனத்தில் கொண்டு ஆரம்பத்திலேயே மின்வாரிய பிரச்சனைகளை, குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. திரைப்பட இயக்குநர் ஒருவரே, மின் கட்டண விவகாரத்தில் முதலமைச்சர் மனமிறங்குவாரா என்ற கேள்வியை எழுப்பி பொதுத்தளத்தில் அறிக்கை வெளியிட்டது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. மாதம் ஒருமுறை கணக்கெடுப்பு செய்ய கணக்காளர்களை மின்வாரிய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

என்பதை துறை அமைச்சர் என்ற முறையில் விளக்க வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன