நபார்டு வங்கியின் மண்டலத் தலைமைப் பொதுமேலாளராக ரா. ஆனந்த் பொறுப்பேற்றார் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல நபார்டு வங்கியின் புதிய தலைமைப் பொது மேலாளராக திரு ரா. ஆனந்த் பொறுப்பேற்றுள்ளார். அவரது நியமனம் 2024, ஜுன் 01 முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரியில் பயின்ற வேளாண் பொறியாளரான திரு ஆனந்த், நபார்டு வங்கியில் பணியில் சேர்வதற்கு முன் தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் ஐந்தாண்டு காலம் பணியாற்றியுள்ளார். 1993-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள நபார்டு வங்கியில் இணைந்த இவர், கடந்த 30-ஆண்டுகளாக இவ்வங்கியில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு துறைகளில் பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். ஒடிசா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் மும்பையில் உள்ள அலுவலகங்களில் திரு ஆனந்த் பணியாற்றியுள்ளார். வேளாண் மேம்பாடு, ஊரக வளர்ச்சி, சிறு தொழில், நெசவு, உள்ளிட்ட துறைகளில் உயர் பதவிகளை வகித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலாளராகப் பணியாற்றுகையில் ஊரக வாழ்வாதார மேம்பாடு, திறன் மேம்பாடு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
RNI:TNTAM/2013/50347