முன்னாவ் அமைச்சர் நிலோபர் கபில் தன் மீது பொய் புகார் கொடுத்ததாக தகவல்.
நேற்று முன்தினம் அவர் அளித்த தகவல் "நான் சிறப்பாகச் செயல்பட்டதால் தான், திருப்பத்துார் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதி களில், வாணியம்பாடியில் மட்டும் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அதிமுக மாவட்டச் செயலாளர் வீரமணி, என்னை கட்சியிலிருந்து நீக்க முயற்சி செய்தார். என் முன்னாள் உதவியாளர் பிரகாசம், நான் 6 கோடி ரூபாய் பெற்றதாக பொய்யான புகார் கொடுத்துள்ளார். அவர் வாங்கிய பணத்தை எல்லாம் நான் வாங்கியதாகப் பொய் கூறியுள்ளார். மக்களிடம் பெற்ற பணத்தை, அவர் திரும்பக் கொடுத்தாக வேண்டும். அவர் பணத்தை கொடுக்காவிட்டால், பாதிக்கப்பட்டவர்களோடு நானே சென்று, சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன்.
என் தாய் இறந்த போது, தி.மு.க., மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.,வுமான தேவராஜ் நேரில் வந்து துக்கம் விசாரித்தார். அதனால், அவர் வெற்றி பெற்றதற்கு, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இதில், என்ன தவறுள்ளது. என் தாய் இறந்ததற்கு கூட, வீரமணி துக்கம் விசாரிக்கவில்லை. தி.மு.க.,வில் சேர்வது குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை. ஊழல் புகாரால் தான், என்னை கட்சியில் இருந்து நீக்கினர் என்றால், பல முன்னாள் அமைச்சர்கள் மீது முதல்வர் ஸ்டாலின், கவர்னரிடம் ஊழல் புகார் கொடுத்துள்ளார். அவர்களை எல்லாம் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்குவரா? " என்ற வினா எழுப்பினார்.
கருத்துகள்