முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இணையதள குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சட்ட உதவிகள் வழங்கப்பட குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

இணையதள குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டியது அவசியம்: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இணைய தளக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு உடனடியாக சட்ட உதவி வழங்க வேண்டியதன் அவசியத்தை குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.  புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு கவுன்சில் (ஜிசிடிசி) ஏற்பாடு செய்திருந்த 3-வது இணையதளப் பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் பங்கேற்று நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.  நிறைவு அமர்வில்  உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், நாட்டின் தொலைதூர மூலையிலும் தகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். இந்தியா 820 மில்லியனுக்கும் அதிகமான இணையதள பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். 2023-ம் ஆண்டில் உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 50 சதவீதம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தொழில்ந

நமது அரசியல் சாசனம், நமது பெருமை' கொண்டாட்டத்தின் மண்டல நிகழ்வு

'நமது அரசியல் சாசனம், நமது பெருமை' கொண்டாட்டத்தின் மண்டல நிகழ்வு உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் 16-ம் தேதி நடைபெறுகிறது மத்திய அரசின் சட்ட அமைச்சகத்தின் நீதித்துறையால் ஆண்டு முழுவதும் நடத்தப்படும், நமது அரசியல் சாசனம், நமது பெருமை (ஹமாரா சம்விதான் ஹமாரா சம்மான்') கொண்டாட்டத்தின் இரண்டாவது மண்டல நிகழ்வு 2024 ஜூலை 16 அன்று பிரயாக்ராஜில் உள்ள அலகாபாத் மருத்துவ சங்க மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு நிறைவை இது நினைவுகூருகிறது. மைகவ் (MyGov) தளத்தில் 2024 ஜனவரி 24 முதல் 2024 ஏப்ரல் 23 வரை நடைபெற்ற இணையதளப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு, இந்த நிகழ்ச்சியின்போது பரிசுகள் வழங்கப்படும். மக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியாக, 'ஹமாரா சம்விதான் ஹமாரா சம்மான்' தளம் இந்த நிகழ்ச்சியின்போது தொடங்கி வைக்கப்படும். அரசியலமைப்பு, சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தகவல்களை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு இந்த தளம் அறிவுக் களஞ்சியமாக செயல்படும். இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன்

கார்கில் வெற்றி தின வெள்ளி விழாக் கொண்டாட்டம்

சர்சவா விமானப்படை நிலையத்தில் கார்கில் வெற்றி தின வெள்ளி விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது ராணுவ விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல் கல்லாக 1999 கார்கில் போர் அமைந்தது. இப்போரில் துணிச்சலுடன் போரிட்டு தைரியம், தியாகத்தின் பெருமைமிக்க பாரம்பரியத்தை இந்திய விமானப்படை கொண்டுள்ளது. கார்கில் போரில் இந்திய விமானப்படையின் நடவடிக்கைகள் எதிரிகளை குறிவைப்பதில் தனித்துவமான செயல்பாட்டு சிரமங்களைக் கொண்டிருந்தது. 16,000 அடிக்கு மேல் செங்குத்தான சாய்வு  உயரங்களைக் கொண்ட சிகரத்தில் சவால்களை சமாளிக்கும் இந்திய விமானப்படையின் திறனுக்கு இது ஒரு சான்றாகும். உலகின் மிக உயர்ந்த போர்க்களத்தில் நடந்த இந்த போரில் வெற்றி பெற விமானப்படை தனது சக்தியை பயன்படுத்தியது. கார்கில் வெற்றியின் 25 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், இந்திய விமானப்படை, கார்கில் வெற்றி தின வெள்ளி விழாக் கொண்டாட்டத்தை (கார்கில் விஜய் திவாஸ் ரஜத் ஜெயந்தி)  2024 ஜூலை 12  முதல் 2024 ஜூலை 26 வரை சர்சாவா விமானப்படை நிலையத்தில் கொண்டாடுகிறது. 2024 ஜூலை 13 அன்று, விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி, மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் அங்குள்

சட்டமுறை எடையளவு விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு முன்மொழிவை வெளியிட்டது நுகர்வோர் விவகாரங்கள் துறை

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை சட்டமுறை எடையளவு விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு முன்மொழிவை வெளியிட்டுள்ளது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு (பொட்டலப் பொருட்கள்) ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டுவர சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள்-2011-ல் திருத்தம் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. இவ்விதிகள் சில்லறை விற்பனையில் பொட்டல பைகளில் (பாக்கெட்) விற்பனை செய்யப்படும் அனைத்து  பொருட்களுக்கும் பொருந்தும். இந்த திருத்தப்பட்ட விதி இந்தப் பொருட்களுக்கு ஒரே மாதிரியான தரநிலைகளை வரையறுக்கவும், பல்வேறு தயாரிப்புகளில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும் உதவும். முழுமையான தகவல்களின் அடிப்படையில் நுகர்வோர் தகவலறிந்த முறையில் பொருட்களின் தேர்வுகளை மேற்கொள்ள உதவும். இது தொடர்பாக 2024 ஜூலை 29 வரை 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

நித்தி கியர் ஷிப்ட் போட்டியை நித்தி ஆயோக் அறிவித்தது

இந்தியாவில் பூஜ்ஜிய உமிழ்வு லாரிப் போக்குவரத்தை ஊக்குவிக்க நித்தி கியர் ஷிப்ட் போட்டியை நித்தி ஆயோக் அறிவித்துள்ளது ஐஐஎம் பெங்களூரு உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் இணைந்து,  நித்தி ஆயோக், 'நித்தி கியர்ஷிஃப்ட் சேலஞ்ச்' எனப்படும் போட்டியை அறிவித்துள்ளது. இந்த முன்னோடி ஹேக்கத்தான் இந்தியாவில் பூஜ்ஜிய உமிழ்வுடன் லாரிகளை இயக்கும் சூழலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நித்தி கியர்ஷிஃப்ட் சவால் மாணவர்கள், போக்குவரத்து சேவைப் பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரை மின்சார லாரிகள் ( டிரக்) தொடர்பாக புதுமையான வணிக மாதிரிகளை உருவாக்க அழைக்கிறது. இந்த ஹேக்கத்தான் இரண்டு சுற்றுகளாக நடைபெறும்ம். முதல் சுற்றில், உயர்மட்ட உத்திகள், ஆரம்ப வணிக மாதிரிகள் ஆகியவற்றை அணிகள் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டாவது சுற்றில், தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள், முதன்மை, இரண்டாம் நிலை ஆராய்ச்சிகள் மூலம் விரிவான வணிக மாதிரிகளை வழங்கும். பயனுள்ள தீர்வுகளை உறுதி செய்வதற்காக இந்த முன்மொழிவுகள் தொழில்துறை தலைவர்களால் வழிநடத்தப்படும். இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறை பொருளாதாரத்திற்கு இன்றியமையாத

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரூ.29,400 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரூ.29,400 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார் தானே போரிவலி இரட்டை சுரங்கப்பாதை திட்டம் மற்றும் கோரேகான் முலுண்ட் இணைப்பு சாலையில் சுரங்கப்பாதை பணிக்கு அடிக்கல் நாட்டினார் கல்யாண் யார்டு மறுவடிவமைப்பு மற்றும் நவி மும்பையில் உள்ள கதி சக்தி மல்டிமாடல் சரக்கு முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார் லோக்மான்ய திலக் டெர்மினஸ் மற்றும் பிளாட்பார்ம்கள் 10 மற்றும் 11 இல் நாட்டிற்கு புதிய தளங்களை அர்ப்பணிக்கிறார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் நிலையத்தில் சுமார் 5600 கோடி ரூபாய் செலவில் முக்யமந்திரி யுவ காரிய பிரஷிக்ஷன் யோஜனா தொடங்கப்பட்டது “மூன்றாவது ஆட்சியை முதலீட்டாளர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்” “மகாராஷ்டிராவின் சக்தியை உலகின் பொருளாதார சக்தியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளேன். ; மும்பையை உலகின் ஃபின்டெக் தலைநகராக மாற்றவும்” “நாட்டு மக்கள் தொடர்ச்சியான விரைவான வளர்ச்சியை விரும்புகிறார்கள் மற்றும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை மேம்படுத்த விரும்புகிறார்கள்” “திறன் மேம்பாடு மற்றும் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு இந்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி. பாமக வேட்பாளர் இரண்டாமிடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பத்தாயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று ஜாமீன் தொகையை இழந்தார். திமுக வேட்பாளரின் வெற்றியை தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் மொத்தம் 21வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றியைப் பதிவு செய்தார். பாமக வேட்பாளர் 56,296 வாக்குகள் பெற்று தோல்வியைச் சந்தித்தார். நாம் தமிழர் கட்சி சித்த மருத்துவர் அபிநயா 10,602 வாக்குகளை பெற்று ஜாமீன் தொகையை இழந்தார். அவருடன்  போட்டியில் இருந்த 26 வேட்பாளர்களும் ஜாமீன் தொகையை இழந்தனர். திமுக வேட்பாளர் அன்னியூர்சிவா எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட 67,757 வாக்குகள் பெற்று வெற்றியைப் பதிவு செய்தார். தொடர்ந்து மாவட்டத் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் திமுக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது

பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொனால்ட் டிரம்ப் நலமாய் உள்ளதாகத் தகவல்

பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேடையிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் முகம் சுளித்தபடி, அவரது வலதுபுற காதில் கை வைத்திருப்பதை சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன. டிரம்பின் இந்தப் பொதுக்கூட்டத்தின் போது பலமுறை துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டது. டிரம்ப் தரப்பிலிருந்து அவர் நலமாக உள்ளதாகவும் உள்ளூர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டவுடன் அவர் விரைவில் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சூழப்பட்டார். அங்கிருந்து உடனடியாக அவருக்காகக் காத்திருந்த வாகனத்திற்கு விரைவாகக் கொண்டு செல்லப்பட்டார். காரில் ஏற்றப்பட்ட போது அவர் தனது முஷ்டியை வெளியே உயர்த்திக் காட்டினார்.டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் இட்டிருந்த பதிவில், தனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார். அதற்கு முன்னதாக அவரது செய்தித் தொடர்பாளர், டிரம்ப் “நலமாக உள்ளதாகவ

மதுரையிலிருந்து அயோத்திக்கு சுற்றுலா பெயரில் ஏமாற்றப்பட்ட 106 நபர்கள்

மதுரையிலிருந்து அயோத்திக்கு அழைத்துச் செல்வதாக 106 நபர்களிடம் போலியான விமானப் பயணச்சீட்டைக் கொடுத்து மோசடி. உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமான இராம ஜென்ம பூமி பிரமாண்டமான‌ இராமர் கோவில் காண பலரும் தயாராக உள்ள நிலையில் . தமிழ்நாட்டிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட பல நகரங்களிலிருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்களும் விடப்பட்டன, சென்னையிலிருந்து அயோத்திக்கு தினசரி நேரடி விமான சேவையும் உள்ளது. ஆனால், மதுரையிலிருந்து அயோத்திக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாக ஒரு சில மக்களிடம் நபர் ஒன்றுக்கு ரூபாய் 26 ஆயிரம் வீதம் பணம் வசூலித்துள்ளனர். விமான டிக்கெட் கட்டணமாக அவர்கள் வசூலித்த பணத்தில் இண்டிகோ விமான நிறுவனத்தின் போலியான பயணச்சீட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விமான  பயணச்சீட்டு வைத்துள்ள 106 நபர்கள் மதுரை விமான நிலையம் வந்தனர் அப்போது தான் அவர்கள் வைத்திருந்தது போலியான பயணச் சீட்டு என்பது தெரிந்தது. அயோத்திக்கு செல்ல எங்கள் நிறுவனத்தில் முன்பதிவு செய்யப்படவில்லை என 106 நபரிடமும் இண்டிகோ நிர்வாகம் கூறியது. 106 நபரிடமும் பணம் வசூல் செய்து ப

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்து கைதான திருவேங்கடம் காவல் துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்து கைதான திருவேங்கடம் காவல் துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொலை காவலில் எடுக்கப்பட்டவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது தப்பிக்க முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தகவல் என்கவுண்டர் நடந்த இடத்தில் சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) நரேந்திரன் நாயர் விசாரணை.    இன்னும் விசாரணையே முடியாத நிலையில், குற்றத்தின் பின் புலமாக செயல்பட்டவர்கள் விவரம் முழுமையானதாக வெளி வராத நிலையில், இந்த என்கவுண்டர் மேலும் சந்தேகத்துக்கு வழி வகுக்குமே தவிர கொல்லப்பட்டதற்கு நீதியாக நியாயம் கிடைத்த ஒன்றாக இருக்கும் எனக் கருத முடியாது! படுகொலை செய்வது எப்படி பெரிய பாவமோ அல்லது தவறோ அது போல சட்டத்தை மீறிய என்கவுண்டர் படுகொலையும் தவறு தான் உண்மைக் குற்றவாளிகள்  இவர்கள் இல்லை எனச் சொன்னவர்கள் இப்போது பேசவில்லை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என காவல்துறை ஒருவரை அடையாளம் காணப்பட்டு என்கௌன்டர் நடந்துள்ளது,  இப்படி ஒரு சம்பவத்தை காவல்துறை திட்டமிடுகிறது என  டி.எஸ்.எஸ் மணி கடந்த மூன்று நாட

தூர்வாரப்படும் மணலின் மதிப்பு" குறித்த ஆராய்ச்சி முன்மொழிவுக்கு மத்திய கப்பல்துறை அமைச்சகம் ஒப்புதல்

"தூர்வாரப்படும் மணலின் மதிப்பு" குறித்த ஆராய்ச்சி முன்மொழிவுக்கு மத்திய கப்பல்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சகம் கடல் முகத்துவாரத்தில் தூர்வாரப்படும்போது கிடைக்கும்  மணல்களை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.46,47,380/- மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தத் திட்டம் மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தால் (ஐஐடி பம்பாய்) மூன்று ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும். தூர்வாரப்பட்ட மணலை பல்வேறு கட்டுமானங்களுக்குப் பொருத்தமானதாக மாற்றுவதே இந்த ஆராய்ச்சியின் முதன்மை நோக்கம்  ஆகும்.  இந்த புதுமையான அணுகுமுறை பொதுவாக கழிவுகளாகக் காணப்படும் தூர்வாரப்பட்ட மணலை மதிப்புமிக்க வளமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நிலையான வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் பங்களிக்கும். கப்பல் துறை கூடுதல் செயலாளர் தலைமையில் நடைபெற்ற 45-வது ஆராய்ச்சிக் குழுக் கூட்டத்தில் இந்த முன்மொழிவு குறித்து விவாதிக்கப்பட்டது. விரிவான விவாதங்களுக்குப் பிறகு, ஆராய்ச்சிக் குழு, ஆய்வின் நன்மைகளை அங்கீகரித்து, முன்மொழிவை

மாநிலங்களின் கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுக்களின் கூட்டம்

மத்திய கப்பல்துறை அமைச்சகம், 2024 ஜூலை 16 அன்று மாநிலங்களின் கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுக்களின் கூட்டத்தை நடத்தவுள்ளது மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் நீர்வழிகள் அமைச்சகம் மாநிலங்களின் கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுக்களின் கூட்டத்தை 2024 ஜூலை 16 அன்று காலை 10:00 மணிக்கு காணொலி மூலம் நடத்தவுள்ளது. மத்திய கப்பல் துறை செயலாளர் திரு டி. கே. ராமச்சந்திரன் இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்க உள்ளார். இந்தியா முழுவதும் கடல்சார் போக்குவரத்திலும் பிற நீர்வழிப் போக்குவரத்திலும் விரிவான வளர்ச்சியை உறுதி செய்வதை இந்தக் குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநிலங்கள் சார்ந்த கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துத் திட்டங்களைத் தயாரித்தல், கடல்சார் கொள்கைகளை உருவாக்குதல், பசுமை முன்முயற்சிகள், நீர்வழித்தடங்கள் மேம்பாடு, கப்பல் சுற்றுலா, நகர்ப்புற நீர்வழிப் போக்குவரத்து, கலங்கரை விளக்கங்கள் மேம்பாடு ஆகியவை தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும். ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மாநில குழுக்களின் பணிகளில் உள்ள முன்னேற்றம், சாகர்மாலா திட்டத்தை செயல்படுத்துவது, சரக்குப் போக்குவரத்து மேம்பாட்ட

2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் ஆயத்த நிலை குறித்து உயர்நிலைக் கூட்டம்

2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் ஆயத்த நிலை குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டத்திற்கு மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா  தலைமை வகித்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 48 வீராங்கனைகள் உள்பட 118 பேர் பங்கேற்கின்றனர். பாரீஸுக்குச் செல்லும் 118 விளையாட்டு வீரர்களில், 26 பேர் கேலோ இந்தியா போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் ஆவார்கள். 72 விளையாட்டு வீரர்கள் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர். ஆய்வுக் கூட்டத்தில் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, விளையாட்டு வீரர்களுக்கு முழு ஆதரவு அளிக்கவும், போட்டிக்கு முன்னும் பின்னும் சிக்கல்கள் ஏற்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் ஒரு ஒருங்கிணைப்புக் குழு நிறுவப்படுவதாக அறிவித்தார். நமது விளையாட்டு வீரர்கள் போட்டியின் இந்த முக்கியமான கட்டத்தில் நுழையும்ப

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் பிரதிநிதிகள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது: "இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பிரதிநிதிகள் குழு பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தது. இந்த தூதுக்குழுவில் பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத், பேராயர் ஜோசப் மார் தாமஸ், பேராயர் டாக்டர் அனில் ஜோசப் தாமஸ் கூட்டோ மற்றும் அருட்தந்தை சஜிமோன் ஜோசப் கோயிக்கல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.”

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே ஆர் ஸ்ரீராமை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கே ஆர் ஸ்ரீராமை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை.  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான டி ஒய் சந்திரசூட் தலைமையில்  நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கே. ஆர். ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் வி கங்காபூர்வாலா 2024 மே மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியான ஆர். மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டதன் படி 2024 மே மாதம் 24 ஆம் தேதியிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர் மகாதேவன் பதவி வகித்தார் இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியான ஆர் மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து  கொலிஜியம் பரிந்துரை செய்ததையடுத்து  மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கே. ஆர். ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்தத

பாரத் தரவு பாதுகாப்பு அதிகாரி சான்றிதழ் மற்றும் பயிற்சி நிகழ்ச்சி

பாரத் தரவு பாதுகாப்பு அதிகாரி சான்றிதழ் மற்றும் பயிற்சி நிகழ்ச்சி ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தின் புதுச்சேரி வளாகத்தில் துவக்கப்பட்டது. ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைகழகத்தின் புதுச்சேரி வளாகத்தில் தரவு பாதுகாப்பு சிறப்பை மேம்படுத்துதல் பாரத் தரவு பாதுகாப்பு அதிகாரி (டிபிஓ) பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை புதுச்சேரியின் மாண்புமிகு சபாநாயகர் ஸ்ரீ எம்பலம்செல்வம், புதுச்சேரி ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு கல்வி, உள்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் ஸ்ரீ ஏ. நமச்சிவாயம், பாதுகாப்பு மற்றும் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி சங்கம் (சாஸ்த்ரா), ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம் (ஆர்ஆர்யு), ஸ்கில்ஸ்டிஏ - சென்டர் ஆகியவற்றின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். மேம்பட்ட பயிற்சி மற்றும் தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட். டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் (DPDPA) 2023 மற்றும் உலகளாவிய தரவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க, SkillsDA மற்றும் TCIL உடன் இணைந்து SASTRA, BharathDPO என்ற மூன்று நாள் சா

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறையின் 100 நாள் செயல் திட்டம்

1140 குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகள் குடும்ப ஓய்வூதியம் குறை தீர்க்கும் சிறப்பு முகாமின் 2-வது வாரத்தில் தீர்க்கப்பட்டுள்ளன ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறையின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, குடும்ப ஓய்வூதிய குறைகளை தீர்ப்பதற்கான ஒரு மாத கால சிறப்பு பிரச்சாரத்தை பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 1 ஜூலை 2024 அன்று தொடங்கினார். ஒரு மாத காலம் நடைபெற்ற இந்த சிறப்பு முகாம், இரண்டாவது வார இறுதியில், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீதத்தை தாண்டியுள்ளது. மொத்தமுள்ள 1891 குடும்ப ஓய்வூதிய வழக்குகளில், 1,140 குடும்ப ஓய்வூதிய வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 46 அமைச்சகங்கள்/துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பயனளித்துள்ளன. சில முக்கியமான நேர்வுகளில், குடும்ப ஓய்வூதிய குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CPENGRAMS) மூலம் குடும்ப ஓய்வூதிய குறைகள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளன.