முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெலுங்கானாவில் புதிதாக முளைத்த ஒரு போலிச் சாமியார்

 மக்களில் பெரும்பாலோரின் வாழ்க்கை முறை துன்பகரமானதாகவே உள்ளது!  அதை எப்படி எதிர்கொள்வது என்ற பயிற்சியும், பக்குவமும் அடையாதவர்கள் ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்த்து ஏங்கி வாழ்கிறார்கள். அந்த துன்பத்திற்கான ஆறுதல் அல்லது தீர்வு எங்காவது, யாரிடமாவது தமக்குகா கிடைக்கும் என்ற அவர்களின் தேடுதலில் காண்பவர்களே போலியான சாமியார்கள்! அந்தச் சாமியாருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றோ, குறைந்தபட்சம் இவர் யோக்கியமானவர் தானா என்று கூட அந்த நேரம் அவர்கள் மனம் சிந்திக்காது!  ஒரு குறிப்பிட்ட சாமியாரின் தோற்றமோ அல்லது சூழலோ பிடித்துப் போய்விட்டால், மக்கள் சரணடைந்து விடுகின்றனர். பெரும்பாலோர் அந்த சாமியார் தனக்கெனவே இறைவனால் அனுப்பட்டவர் என நினைக்கத் துவங்கி விடுகின்றனர். பிறரை நம்ப வைத்து வஞ்சிக்கின்ற – பிறர் துன்பத்தை மேலும் பல மடங்கு அதிகரிக்கச் செய்கிற – போலி ஆன்மீகவாதிகளுக்கு ஈடாக வேறு தீயவர் இந்த உலகில் இல்லை” என்கிறார் திருவள்ளுவர். மறுபடியும் உறுதிபடச் சொல்வது யாதெனில், எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள், சமரசமற்ற நீதியை நிலை நாட்ட விரும்பும் நேர்மையான ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தால் போலிச் சாமியார்களை மக்

சிவாஜி மகாராஜின் 115 ஓவியங்களின் கண்காட்சி

சத்ரபதி சிவாஜி நமது நாட்டின் சிறந்த அடையாளமாக திகழ்வதுடன் பல நூற்றாண்டுகளாக நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ஆதாரமாகவும் திகழ்கிறார்: மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் புதுதில்லி இந்திரா காந்தி தேசிய கலை மையம் (ஐஜிஜிசிஏ) மற்றும் தேசிய நவீன கலைக்கூடம் (என்ஜிஎம்ஏ) இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிவாஜி மகாராஜின் 115 ஓவியங்களின் கண்காட்சியை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று பார்வையிட்டார். சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 15 நாட்களில், பல கலை ஆர்வலர்கள், குறிப்பாக இளைஞர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். ஓவியங்களைப் பார்வையிட்ட பின் பேசிய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், சத்ரபதி சிவாஜி மகாராஜ் நமது நாட்டின் ஒரு சிறந்த அடையாளமாகத் திகழ்கிறார் என்றார். பல நூற்றாண்டுகளாக நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக அவர் இருந்து வருகிறார் என அமைச்சர் தெரிவித்தார். அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த வரலாற்றுக் கண்காட்சி, அவரது வாழ்க்கையைப் பற்றி நி

தொலைத்தொடர்புச் சட்டம், 2023: தொலைத்தொடர்பு இணைப்பில் புதிய சகாப்தம்

தொலைத்தொடர்புச் சட்டம், 2023: தொலைத்தொடர்பு இணைப்பில் புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது தொலைத்தொடர்புச் சட்டம் -2023-ன் பிரிவுகள் 1, 2, 10 முதல் 30, 42 முதல் 44, 46, 47, 50 முதல் 58, 61 மற்றும் 62 ஆகிய பிரிவுகளை அமல்படுத்துவதற்கான அரசிதழ் அறிவிப்பை மத்திய அரசு நேற்று (21.06.2024) வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்பு சட்டம்-2023 ஆனது, தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளின் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் செயல்பாடு தொடர்பான சட்டத்தைத் திருத்துவதையும் ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்கள் இதில் அடங்கும். தொலைத்தொடர்புச் சட்டம், 2023 பழைய சட்டக் கட்டமைப்பை ரத்து செய்கிறது. அனைவரின் உள்ளடக்கம், பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் பொறுப்புணர்வு ஆகிய கொள்கைகளைக் கொண்ட இந்தப் புதிய சட்டம், வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொலைத்தொடர்புச் சட்டம்- 2023, டிசம்பர் 2023-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 24.12.2023 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை இச்சட்டம் பெற்றத

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும்: மத்திய சட்டத்துறை இணையமைச்சர் தகவல்

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், சட்ட நடைமுறைகளில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்: மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் காலனித்துவ கால சட்டங்களை மாற்றி அமைக்கும் நோக்கில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன: மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை, இன்று (2024 ஜூன் 23) சென்னையின் வேலூர் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் 'குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை' என்ற கருப்பொருளில் ஒரு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. புதுதில்லி, குவஹாத்தி மற்றும் கொல்கத்தாவைத் தொடர்ந்து நான்காவது நகரமாக சென்னையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தென் மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சட்ட அமலாக்க முகமைகளின் பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த சட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து

பாரம்பரிய மருத்துவத்தில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை ஆயுஷ் அமைச்சகம்

ஆயுஷ் பாரம்பரிய மருத்துவத்தில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தை உலக சுகாதார அமைப்புடன் இணைந்து ஆயுர்வேத ஆராய்ச்சிக் கெளன்சில் நடத்தவுள்ளது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கெளன்சில்,  2024 ஜூன் 24 அன்று புதுதில்லியில் "பாரம்பரிய மருத்துவத்தில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை" குறித்த ஒரு நாள் தேசிய ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய உள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகம் மற்றும் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் ஆகியவற்றுடன் இணைந்து  இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொள்கை வகுப்பாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், நோயாளிகள் மற்றும் தொழில்துறையினர்  உட்பட இந்தியாவில் உள்ள பாரம்பரிய மருத்துவத்துறையின் பல்வேறு  பிரதிநிதிகளை இந்த ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைக்கும். ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி போன்ற பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகளில் முக்கிய ஆராய்ச்சிப் பகுதிகளை அடையாளம் கண்டு முன்னுரிமை அளிப்பதே இதன் நோக்கமாகும். இந்தக் கூட்டத்தி

மத்திய பட்ஜெட் 2024-25 தொடர்பாக மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

மத்திய பட்ஜெட் 2024-25 தொடர்பாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநில நிதியமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களுடனான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் இன்று (22-06-2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் செளத்ரி, கோவா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் முதலமைச்சர்கள், பீகார், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் துணை முதலமைச்சர்கள், பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் நிதித்துறைச் செயலாளர் வரவேற்றார். பெரும்பாலான மாநில அமைச்சர்கள், மாநிலங்களின் சிறப்பு உதவிக்கான மத்திய அரசின் திட்டத்தை பாராட்டியதுடன், இதனை மேம்படுத்த சில ஆலோசனைகளையும் வழங்கினர். 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்தும்

நீட் தேர்வில் முறைகேடுகள் குறித்த விரிவாக சிபிஐ விசாரணை முதுநிலைத் தேர்வு ஒத்திவைப்பு

நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த விரிவான விசாரணை சிபிஐயிடம் ஒப்படைப்பு தேசிய தேர்வு முகமை, நீட் ( யுஜி)  தேர்வை கடந்த மாதம் 5ந்தேதி ஓஎம்ஆர்  (பேனா மற்றும் காகிதம்) முறையில் நடத்தியது. இதில்  முறைகேடுகள் / மோசடி / ஆள்மாறாட்டம்  போன்றவை தொடர்பான சில வழக்குகள் பதிவாகியுள்ளன. தேர்வு நடத்துவதில் வெளிப்படைத்தன்மை உள்ளதால், இந்திய அரசின் கல்வி அமைச்சகம், மறு ஆய்வுக்குப் பிறகு, விரிவான விசாரணைக்காக மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) இந்த விஷயத்தை ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிமுறைகள், அதனுடன் தொடர்புடைய அல்லது இடைநிகழ்வான விஷயங்களைத் தடுப்பதற்கும் பொதுத் தேர்வு (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம், 2024 ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது. தேர்வுகளின் புனிதத்தை உறுதி செய்யவும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது. சம்பந்தப்பட்ட எந்தவொரு தனிநபரும் / நிறுவனமும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. தேர்வுகளின் புனிதத்தை உறுதி செய்யவும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ள

புதுடெல்லி விமான முனையத்தில் விரைவான இடப்பெயர்வு, நம்பகமான பயணிகள் திட்டம் துவக்கம்

புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் 'விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள் திட்டத்தை' மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார் புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் 'விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள்' (Fast Track Immigration – Trusted Traveller Programme- FTI-TTP - எஃப்டிஐ-டிடிபி) என்ற திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (22-06-2024) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை செயலாளர், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள் திட்டம் (FTI-TTP-எஃப்டிஐ-டிடிபி) இந்திய மக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக  வடிவமைக்கப்பட்ட தொலைநோக்கு முயற்சியாகும் என்று கூறினார். இந்த முயற்சி பிற நாடுகளிலிருந்து வரும் இந்திய பயணிகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியப் பயணிகளுக்கு அதிக வசதிகளை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.  இ

டாக்டர் ஷியாமா பிரசாத்முகர்ஜியின் நினைவு நாளில் பிரதமர் அஞ்சலி

டாக்டர் ஷியாமா பிரசாத்முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிரகாசமான ஆளுமை, எதிர்கால சந்ததியினரைத் தொடர்ந்து வழிநடத்தும் என்று பிரதமர் கூறினார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: "நாட்டின் சிறந்த புதல்வர், சிறந்த சிந்தனையாளர் மற்றும் கல்வியாளரான டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பாரத அன்னைக்கு சேவை செய்வதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது துடிப்பான ஆளுமை, நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”

தர்மபுர ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்த மாவட்ட நிர்வாகி உள்ளிட்ட மூவர் பாஜகவில் வகித்த பொறுப்பிலிருந்து நீக்கம்

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில்  மாவட்ட நிர்வாகிகளாக  இருந்து வந்த நபர்கள் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்கள். நிர்வாகிகள் பெயர் பட்டியல் வருமாறு S.பாஸ்கர் மாவட்டத் தலைவர், திருவாரூர் K.அகோரம் மாவட்ட தலைவர். மயிலாடுதுறை C. செந்திலரசன் மாவட்டப் பொதுச் செயலாளர், திருவாரூர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.             பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார்   தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்ட அகோரம், கடந்த ஏழாம் தேதி ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அகோரம் நீக்கப்படுவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதே போன்று, பாஜக விவசாய அணியின் மாவட்ட ச்செயலாளர் மதுசூதனனைத் தாக்கியதாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், மாவட்ட பொது செயலாளர் செந்திலரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், பாஸ்கர் மற்றும் செந்தில் அரச

17 வயது மாணவனைக் கடத்திய பள்ளி ஆசிரியை போக்சோ வழக்கில் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் காரியாபட்டி சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியையாக மதுரை வில்லாபுரத்தைச் சேர்த்த பாத்திமா கனி பணிபுரிந்து வந்தார்.  அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அப்பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவர் ஒருவரிடம் அதிக அக்கறை செலுத்தி வந்துள்ளார். அந்த மாணவருக்கு விபத்து நடக்கவே அவரிடம் மிகுந்த இரக்கம் காட்டியதுடன் வீட்டுப்பாடங்களையும் செய்து கொடுத்தார். இதனால் பள்ளி நிர்வாகம் அவரை மேலூர் பள்ளிக்கு மாறுதல் செய்தது. அதற்கு பிறகும் மாணவருடன் ஆசிரியை தொடர்பிலிருந்ததையறிந்த பள்ளி நிர்வாகம் அவரை பணி நீக்கமும் செய்தது காரியாபட்டி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார். இந்த நிலையில் திடீரென அந்த மாணவர் மாயமானார். இதுகுறித்து மாணவரின் தந்தை ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்தன. அந்த மாணவர் படித்த பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியையாக பணியாற்றிய பாத்திமாகனி (வயது40). இவர் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர். இவ

வக்கீல், ஆடிட்டர் கும்பல் செய்த முகமூடிக் கொள்ளை

மூகமூடிக் கொள்ளையர்கள் விருதுநகரில் மில் வாங்கி தொழில் அதிபர்களாக மாறிய பெண் வமக்குரைஞர் கும்பல் குவிந்த பல கோடி சொத்துக்கள். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் நடந்த முகமூடிக் கொள்ளை சம்பவமும் , அதன்பிறகு கொள்ளையடித்த பெண்கள் தொழில் அதிபர்களாக மாறியது குறித்தும் திரைப்படமாகவே எடுக்கலாம். வக்கீல், ஆடிட்டர் உள்பட படித்து முடித்து திரைப்படங்களில் காட்டப்படும் காட்சியை போல நடந்த சம்பவம் தான் இந்த செய்தி:- கொள்ளையடித்த நகைகளை விற்று நூற்பாலை வாங்கியருக்கிறது இந்த  கொள்ளையர் கும்பல். அது தொடர்பாக 2 பெண் வழக்குரைஞர்கள் உள்ளிட்ட மேலும் 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உள்பட பல்வேறு இடங்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்தன. அப்படி சில மாதங்களுக்கு முன்பு இராஜபாளையத்தில் ஒரு வீட்டில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் அங்குள்ள சிசிடிவி  கேமராவின் காட்சியில் சிக்கினார். ஆனாலும், அந்த நபர் முகமூடி அணிந்திருந்ததால் காவல்துறையினரால் அவரை அடையாளம் காண முடியாத நிலையிலிருந்தது. அதே நேரத்தில் விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடந்த முகமூக்டி கொ

கொள்ளிடம் மணல் திருட்டுக்கு உதவியதால் 21 காவல்துறை பணியாளர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி அருகில் தாளக்குடி உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றுப் படுகையின் கரையோரப் பகுதிகளில் தினமும் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதற்குநம்பர் - 1 டோல்கேட், கொள்ளிடம் காவல்துறை காவலர்கள் உடந்தையாக உள்ளனரென, பல இதழ்களில்  செய்தி வெளியிடப்பட்டது குறித்து விசாரணை நடத்த, திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎல் உத்தரவிட்டார். விசாரணையில், கொள்ளிடம் காவலர்கள் மணல் கடத்தல்காரர்களிடம் தொடர்பிலிருந்ததும், அவர்கள் மாமூல் வாங்கிய பிறகு பங்கிட்டுக் கொண்டதும் தெரிய வந்ததையடுத்து, கொள்ளிடம் காவல்நிலையத்தில் பணியாற்றிய 23 காவலர்களில், சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தவிர, 22 காவலர்களை நேற்று முன்தினம் இரவு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் உத்தரவிட்டார். இது, திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறையினர் மத்தியில் ஒரு எச்சரிக்கை உணர்வையும், ஊழலுக்கு எதிரான பயத்தை ஏற்படுத்திரயுள்ளது என்பது உண்மை.

இந்திய தரநிர்ணய அமைவனம் நடத்திய இரண்டு நாள் உறைவிடப் பயிற்சி முகாம்

பிஐஎஸ் மதுரை கிளை நடத்திய அறிவியல் கற்றல் குறித்த இரண்டு நாள் உறைவிடப் பயிற்சி முகாம் இந்திய தரநிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), மதுரை கிளை, 2024 ஜூன் 18 மற்றும் 19 தேதிகளில் மதுரையில் உள்ள ஹோட்டல் வெஷ்டர்ன் பார்க்கில் பிஐஎஸ் ஸ்டாண்டர்ட்ஸ் கிளப்களின் அறிவியல் ஆசிரியர்களுக்கான தரநிலைகள் வழியாக அறிவியலைக் கற்றல் குறித்த உறைவிடப் பயிற்சி முகாமை நடத்தியது. மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் அமைந்துள்ள பெரும்பாலும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 65 அறிவியல் ஆசிரியர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். பிஐஎஸ் மதுரை அலுவலகத்தில் மூத்த இயக்குநர் திரு சு.த.தயானந்த், நிகழ்ச்சி நோக்கங்களை வழங்கினார். அவர் பிஐஎஸ் ஸ்டாண்டர்ட்ஸ் கிளப்பின் அறிவியல் ஆசிரியர்களுடன் உரையாடி, நமது அன்றாட வாழ்வில் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தரத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கே.கார்த்திகா, சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடக்கவுரையாற்றினார். மாணவர்களுக்கு அதிக பயனளிக்கும் வகையில் இந்தப் பயிற்சி திட்டத்தில் ஆசிரியர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும்,

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சர்வதேச யோகா தினம்

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சர்வதேச யோகா தினம் 2024 கொண்டாடப்பட்டது வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சர்வதேச யோகா தினமானது. இ  21.06.2024 அன்றுஇ ‘தனிமனித மற்றும் சமூக நலனில் யோகாவின் பங்கு’ என்னும் கருப்பொருளில் சிறப்பாக நடைபெற்றது. துறைமுகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற யோகா செயல் விளக்கத்தில்இ துறைமுக அதிகாரிகள்இ ஊழியர்கள்இ மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் துறைமுகப் பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ‘வாழும் கலை’ (வுhந யுசவ ழக டுiஎiபெ) குழுமத்தைச்; சார்ந்த சிறந்த யோகா பயிற்சியாளர்களான திரு. வி. சங்கரநாராயணன் மற்றும் திரு. ஸ்ரீதர் வெங்கடேஷ்இ இந்த ஆண்டின் கருப்பொருளைப் பற்றி விவரித்ததுடன்இ பிராணயாமம்இ தியானம்; மற்றும் யோகாசனங்களின் செயல் முறை விளக்கத்தினைச் செய்து காட்டினர். மேலும்இ துறைமுகத்தில் உள்ள கப்பல் தழத்தில் துறைமுகத்தின் இழுவைக் கப்பல் பணியாளர்கலுக்கும், துறைமுக தீயணைப்பு வீரர்களுக்கும் இணைந்து யோகா பயிற்ச்சி மேற்கொண்டனர். ஆஃளு தக்ஸன் பாரத் கேட்வே பணியாளர்களுக்கும் தங்களது சரக்கு பெட்டக முனையத்தில் யோகா செயல் விளக்கங்கள் செய்து காட்டினார். திருமதி. எ. வித

குறும்படங்களின் பரவல்: ஊடுருவல், ரீச் மற்றும் வெளிப்பாடு” என்ற தலைப்பில் உள்ளுணர்வான குழு விவாதம்

குறும்படம் ஒரு கவிதை போன்றது, ஒவ்வொரு பார்வையிலும் நீங்கள் அற்புதமான ஒன்றை ஆராய்வீர்கள்: அன்னா ஹென்கெல்-டோனர்ஸ்மார்க் உங்கள் கனவுக்கு வேறு யாராலும் நிதியளிக்க முடியாது: சமீர் மோடி ஒரு வலுவான, தனித்துவமான மற்றும் அற்புதமான கதை அதன் பார்வையாளர்களை சென்றடையும்: டிஸ்கா சோப்ரா 18வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவை தொகுத்து வழங்கும் "குறும்படங்களின் பரவல்: ஊடுருவல், ரீச் மற்றும் வெளிப்பாடு" 18வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் (MIFF) இன்று புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கலந்துகொண்ட “குறும்படங்களின் பரவல்: ஊடுருவல், ரீச் மற்றும் வெளிப்பாடு” என்ற தலைப்பில் உள்ளுணர்வான குழு விவாதம் இடம்பெற்றது. திரைப்படத் தயாரிப்பாளரும் பெர்லினேல் ஷார்ட்ஸின் தலைவருமான அன்னா ஹென்கெல்-டோனர்ஸ்மார்க் , குறும்படங்களை கவிதையுடன் ஒப்பிட்டு, அழுத்தமான ஒப்புமையுடன் விவாதத்தைத் தொடங்கினார். "குறும்படம் ஒரு கவிதை போன்றது. ஒவ்வொரு பார்வையிலும், நீங்கள் புதிய மற்றும் அற்புதமான ஒன்றை ஆராய்வீர்கள்," என்று அவர் குறிப்பிட்டார். உலகின் மிகப்பெரிய குறும்பட விழாக்களில் ஒன்றான

ஆலயங்களில் சிறப்பாக நடந்த ஆனித் தேரோட்டம்

திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் 518 வது ஆனித்தேரோட்ட திருவிழாவில் தேரின் வடம் பிடித்து ஆட்சியர் கார்த்திகேயன், தொடங்கி வைத்த நிலையில் 2 வடங்களும் அறுந்து விழுந்த நிலையில் மாற்று வடம் ஏற்பாடு செய்யப்பட்டது அதன் பின்னர் தேர் வலம் வந்து நிலை நிறுத்தம்   அதேபோல் சிவகங்கை மாவட்டம்  கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம், சிவக௩்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி சாகிபா ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத கெளரி வல்லப டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட  ஆலயத்தில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாகக் கூடி வடம் பிடித்து சிறப்பாக நடைபெற்றிருப்பதில், சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்த் திருவிழா, பாகுபாடற்ற ஆலயத்தில் தனிச் சிறப்பான எடுத்துக்காட்டு, சமூக நல்லிணக்கத்தின் அற்புதமான தொடக்கமாகவும் அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டத்தை வரும் 2024 ஜனவரி மாதம் 21 ஆம் தேதி அன்று நடத்தலாமென, சமுதாயப் பெரியோர்கள் பங்கேற்ற சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதன் படி தேரோட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தைய