கிண்டிக்கு மாறும் பல்நோக்கு மருத்துவமனை அங்கு .தலைமைச் செயலகம் வர வாய்ப்பு

சென்னை தலைமைச் செயலகம் செயல்படும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இடப் பற்றாக்குறை நிலவியதால், கடந்த திமுக ஆட்சியின்போது சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரும் புதிய தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிலையில் அடுத்து வந்த அதிமுக அரசு, புதிய தலைமைச் செயலகத்தை அரசு பல்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றியதையடுத்து,  ஜெயின்ட்ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் செயல்பட்டு வருவதற் கிடையே, சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூபாய்.250 கோடி செலவில்  பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுமென தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில், அண்ணாசாலையில் செயல்பட்டு வரும் பல்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை கிண்டிக்கு மாற்றிய பிறகு இங்கு தலைமைச் செயலகம் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள்
கருத்து“அண்ணாசாலையில் செயல்படும் அரசு பல்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், மருத்துவமனைக்கான கட்டமைப்பில்லை. இது ஒரு அலுவலகத்துக்கான கட்டமைப்பாகும். மற்ற அரசு மருத்துவமனைகளை விட மிகவும் குறைவான நோயாளிகளுக்கே இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனாலும் பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.3.5 கோடி செலவாகிறது.

மருத்துவக் கட்டமைப்புடன் கிண்டியில் மருத்துவக் கட்டிடத்துக்கு மருத்துவமனையை இடமாற்றம் செய்தால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக இருக்கும். தற்போதுள்ள அரசு பல்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மீண்டும் தலைமைச் செயலகமாக செயல்படுமா என்பது பற்றி தெரியவில்லை"என்ற கருத்து வந்த போதும் அரசியல் நடவடிக்கைகளில் திமுக திடமான திட்டம் கொண்டு கலைஞர் செயல்படுத்திய திட்டம் என்பதால் விரைந்து மாற்றம் வரும்.சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்றம் 1920 ஆம் ஆண்டில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் கவுன்சில் சேம்பர்ஸ் அரங்கத்தில் கூட்டப்பட்டது. 1937 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. 1937-39 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் அரங்கத்திற்கும். பின் அண்ணா சாலை அரசு அலுவலக வளாகத்தின் விருந்தினர் அரங்கமான ராஜாஜி அரங்கத்தில் செயல்பட்டு பின் மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு இடம் பெயர்ந்தது. இந்தியக் குடியரசில் சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்ததால், இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே 1952 இல் ஓமந்தூரார் அரசு வளாகத்தில் கலைவாணர் அரங்கம் கட்டப்பட்டு சட்டமன்றம் அங்கு மாற்றப்பட்டது. 1956 ஆம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் அமைந்ததில் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தாலீ மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு இடம் பெயர்ந்தது. பின் 2010 வரை அங்கு செயல்பட்டது.

2007 இல் திமுக ஆட்சி காலத்தில் அண்ணா சாலை ஓமந்தூரார் அரசு அலுவலக வளாகத்தில் புதிய சட்டமன்ற வளாகம் அமைக்க ஜெர்மனியின் ஜிஎம்பி இன்டெர்நேஷனல் நிறுவனத்தின் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டது. 2008 இல் கட்டுமானப் பணிகள் தொடங்கின. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஈசிசிஐ (ECCI) நிறுவனத்திடம் கட்டுமானப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்நிறுவனம் இதற்கு முன் வள்ளுவர் கோட்டம் போன்ற அரசு கட்டிடங்களைக் கட்டியுள்ளது. வளாகத்தின் கட்டுமானம் இரு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. புதிய கட்டிடத்தை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் சிலர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்த.  மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டன.

எண்பதாயிரம் சதுர அடி அலுவலகப் பரப்புள்ள புதிய வளாகம் 425 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. 2000 இருக்கை வசதி கொண்ட அரங்கமும், 500 வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் உள்ளது. வளாகத்தின் மையப் பகுதியில் திராவிடக் கட்டிடக்கலை அம்சங்களுடன் கூடிய 100 அடி உயரமும் 120 அடி குறுக்களவும் கொண்ட கோபுரமும் உள்ளது. இவ்வளாகத்தில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் பசுமைக் கட்டிடங்களாக வடிவமைக்கப் பட்டுள்ளன. வளாகத்தின் முதல் கட்டம் 2010 ஆம் ஆண்டு முடிக்கப் பட்டது. மார்ச் 13 2010 இல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர, கர்நாடக மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். மார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழ் நாடு சட்டமன்றம் புதிய வளாகத்தில் கூடியது

2011ஆம் ஆண்டு அதிமுக அரசு ஆட்சிக்கு வரவே செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாறியது. மேலும் திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சட்டப் பேரவை மருத்துவமனையாகவும் தலைமைச் செயலகம் மருத்துவ கல்லூரியாகவும் மாற்றப்படும் என்று  அறிவித்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியை அடுத்து பிப்ரவரி 2013 முதல் மருத்துவமனையாக மாற்றும் பணி தொடங்கியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்