பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விலைகள்: மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ்
உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விலைகள்: மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆழ்கடல் ஆய்வு திட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆழ்கடல் வளங்கள் ஆராயப்பட்டு நிலையான பயன்பாட்டுக்கான ஆழ்கடல் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.
ஒவ்வொரு கட்டமாக, 5 ஆண்டு காலத்துக்கு அமல்படுத்தப்படவுள்ள இந்த ஆழ்கடல் ஆய்வு திட்டத்தின் செலவு ரூ.4077 கோடியாக இருக்கும். 3 ஆண்டு (2021-2024) காலத்துக்கு மேற்கொள்ளப்படும் முதல்கட்ட பணிக்கான செலவு ரூ. 2823.4 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக இந்த ஆழ்கடல் ஆய்வு திட்டம் உள்ளது. இந்த லட்சிய திட்டத்தை புவி அறிவியல் அமைச்சகம் அமல்படுத்தும்.
2021 முதல் 2030ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்தை, நிலையான வளர்ச்சிக்கான கடல் அறிவியல் தசாப்தமாக ஐ.நா அறிவித்துள்ளது. இந்தியாவில் தனித்துவமான கடல் அமைப்பு உள்ளது. 7517 கி.மீ தூரத்துக்கு இந்திய கடலோர பகுதி அமைந்துள்ளது. இதில் 9 கடலோர மாநிலங்கள் மற்றும் 1382 தீவுகள் உள்ளன. 2030ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவித்தது. இது, வளர்ச்சியின் 10 முக்கிய பரிமாணங்களில் கடல் பொருளாதாரமும் ஒன்று என்பதை சுட்டிக் காட்டியது.
பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விலைகள்:
2021-22ம் ஆண்டுக்கு பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையில் மானிய விலைகளை நிர்ணயிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த விருப்பத்தை மத்திய உரங்கள் துறை முன்மொழிந்தது. அனுமதிக்கப்பட்ட, ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விலைகள், அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து அமலுக்கு வரும்.
நைட்ரஜன் உரம் கிலோ ஒன்றின் மானிய விலை ரூ.18.789. பாஸ்பரஸ் உரம் கிலோ ஒன்றின் மானிய விலை ரூ.45.323, பொட்டாஷ் உரம் கிலோ ஒன்றின் மானிய விலை ரூ.10.116, கந்தக உரம் கிலோ ஒன்றின் மானிய விலை ரூ.2.374.
யூரியா மற்றும் 22 வகையான பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களை தயாரிப்பாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மூலம் மத்திய அரசு மானிய விலையில் கிடைக்கச் செய்கிறது. பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான மானியம் கடந்த 2010 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஊட்டசத்து அடிப்படையிலான மானிய திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஏற்ற அணுகுமுறையின் படி, பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்கள் மலிவான விலையில் கிடைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
இந்த மானியம் உரக் கம்பெனிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த உரங்கள் விவசாயிகளுக்கு மலிவான விலையில் கிடைக்கின்றன. இந்த கூடுதல் மானியம் மூலம் மத்திய அரசுக்கு ரூ.14,775 கோடி செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்