நாக் நதி புத்துயிரூட்டல் திட்டம் - நாக்பூர்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரியின் கருத்தாக்கத்தில் உருவான, நாக்பூர் நகர மக்களின் கனவுத் திட்டமான நாக் நதி புத்துயிரூட்டல் திட்டத்தை செயல்படுத்த செலவின நிதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகளில், மத்திய அமைச்சரவை ஒப்புதலை தொடர்ந்து ரூ.2117 கோடி மதிப்பிலான இந்தப் பணிகள் தற்போது தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால அளவு 8 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 92 எம்எல்டி திறன் கொண்ட 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் மற்றும் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு கழிவுநீர் பாதை அமைத்தல், நீரேற்று நிலையம் மற்றும் சமுதாய கழிவறைகள் கட்டப்பட இருப்பதாகவும் திரு.கட்கரி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்