இமயமலைப்பகுதியில் ஏரோசோல்களின்- துகள் பொருட்களுக்கான முக்கிய ஆதாரங்கள் என ஆய்வு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மத்திய இமயமலைப் பகுதியில் உள்ள கற் பொருட்களுக்கான முக்கிய ஏரோசோல்காரணிகள்வடமேற்குஇந்தியா, பாகிஸ்தான் மற்றும் அரபிக்கடல்தூசி போக்குவரத்தாகும்


கனிம தூசி, பயோமாஸ்எரிப்பு, செகண்டரிசல்பேட், வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும் செகண்டரிநைட்ரேட், டெல்லி போன்ற மாசுபட்ட நகரங்கள், தார் பாலைவனம் மற்றும் அரபிக் கடல் பகுதி மற்றும் நீண்ட தூரத்திற்குக் கொண்டு செல்லப்படும் கடல்சார்துகள் கலந்த ஏரோசோல்கள் ஆகியவையே மத்திய இமயமலைப்பகுதியில் ஏரோசோல்களின்- துகள் பொருட்களுக்கான முக்கிய  ஆதாரங்கள்  என ஆய்வு ஒன்றுதெரிவிக்கிறது.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் (டிஎஸ்டி) கீழ் உள்ள ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனமான நைனிடால், ஆர்யபட்டா ஆராய்ச்சி ஆய்வுக் கழகத்தின் (ஏஆர்ஐஇஎஸ்) ஆராய்ச்சியாளர்கள், மத்திய இமயமலைப் பகுதியில், அனைத்து ஏரோசோல்களையும் உள்ளடக்கிய மொத்த ரசாயனக் கூறுகள் மற்றும் அவற்றுக்குக் காரணமானவற்றின் துகள்களின் அளவுகள் (டிஎஸ்பிடோட்டல் சஸ்பெண்டட்பர்டிகுலேட்) மற்றும் காற்று மாசுபாடு குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டனர்.


கார்போனேசியஸ்ஏரோசோல்கள் (ஆர்கானிக்கார்பன் (ஓசி) மற்றும் எலிமெண்டல்கார்பன் (இசி) ஆகியவை குளிர்காலத்தில் அதிகபட்சமாகக் காணப்படுவதாகவும் இதற்குக் காரணம்

இந்தோ-கங்கை சமவெளிகள் மற்றும் இமயமலை மீது பயோமாஸ் எரிக்கப்படுவதும், அங்கு நிலவும் சூடு மற்றும் ஆழமற்ற கலவை அடுக்கும் என்றும் ஆய்வு கூறுகிறது. .


பயோமாஸ் எரிக்கப்படுவதால் ஏற்படும் ஏரோசோல்களினால் குறிப்பிடத்தக்க விளைவுகள் குறித்தும் ஆய்வாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். நைனிடால் மீது அதிக அளவில் நீரில் கரையக்கூடியஆர்கானிக்கார்பன் மற்றும் பயோமாஸ் எரிக்கப்படுவதால் ஏற்படும் குறிப்பிடத்தக்க விளைவுகள், அல்லது இரண்டாம் நிலை அல்லது பழைய ஆர்கானிக் ஏரோசோல்களின் பங்களிப்புகுறித்தும்ஆய்வுகூறுகிறது.

மேலும் விவரங்களுக்கு, டாக்டர் உமேஷ் சந்திர தும்கா (dumka@aries.res.in) மற்றும் திரு. ராகுல் ஷியோரன் (rahul.sheoran@aries.res.in) ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா