ஐஏஎஸ் / குடிமைப் பணித் தேர்வு எனப்படும் சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் பாராட்டு

ஐஏஎஸ் / குடிமைப் பணித் தேர்வு எனப்படும் சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் பாராட்டு


ஐஏஎஸ் / சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் முதல் 20 இடங்களைப் பெற்றவர்களுடன், தில்லி நார்த் பிளாக்கில்  மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை  இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கலந்துரையாடி வாழ்த்து தெரிவித்தார். 

சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் முதல் 20 இடங்களைப் பிடித்த வெற்றியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை வரவேற்ற டாக்டர் ஜித்தேந்திர சிங், ‘‘ நாட்டின் பல மாநிலங்களில் இருந்து 10 பெண்கள் உட்பட 20 பேர் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளது உண்மையிலேயே உற்சாகம் அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார். 

சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் மொத்தம் 761 (545 ஆண்கள் மற்றும் 216 பெண்கள்) இந்தாண்டு பல சேவைகளுக்கு தேர்வாணையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். என அவர் கூறினார். 


இளம் அதிகாரிகளை, புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான நிபுணர்கள் என குறிப்பிட்ட டாக்டர் ஜித்தேந்திர சிங், அவர்கள் சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில் சிவில் சர்வீஸ் பணியில் சேரும் பாக்கியத்தை பெற்றுள்ளதாக தெரிவித்தார். 


பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா ஏற்கனவே முன்னேற்றப் பாதையில் செல்வதாகவும், உலக அரங்கில் இந்தியாவை முன்னணிக்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு புதிய தலைமுறை சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு உள்ளது எனவும் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா