மக்களின் மனங்களில் இன்னும் வாழும்
நடிகர் எம்ஜிஆருக்கும் அரசியல் எம்ஜிஆருக்கும் நீண்ட வித்தியாசம்
அவர் ஆட்சி அமைத்த காலத்தில்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் வர வேண்டுமென்றால் பல மணி நேரம் பயணம் செய்த பிறகே அடையமுடியும்.
அப்போது தமிழகத்தில் அப்படிப்பட்ட வகையில்தான் மாவட்டங்கள் பரந்து விரிந்திருந்தன.
1965 ல் தர்மபுரி மாவட்டமும் 1974 ல் புதுக்கோட்டை மாவட்டமும் புதிதாக உருவாகின.
எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு மாவட்ட நிர்வாகத்தை மக்கள் எளிதாக அணுகும் வகையில் மாவட்டங்களை பிரிக்கும் பணி வேகமாக ஆரம்பித்தது பழைய கிராம கர்ணம் ஒழிப்பு செய்து கிராம நிர்வாக அலுவலர் பணி ஏற்படுத்தியவர்
ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் கோயமுத்தூரிலிருந்து பிரித்து ஈரோடு மாவட்டத்தை உருவாக்கினார். இராமநாதபுரம் பிரித்து விருதுநகர் மற்றும் சிவகங்கை உருவாக்கி
அதனைத் தொடர்ந்து தாம் மறைவதற்குள் பத்தாண்டுகளில் எத்தனை மாவட்டங்களை உருவாக்கிவிட்டுப் போனார் எம்ஜிஆர் என்பதை கண்டால் புரியும். மெட்ராஸ் மாகாணம்
125 ஆண்டு கால வரலாற்றிலும் 75 வருடம் கடந்த நமக்கு 1977 ஆம் ஆண்டு வரை சுதந்திர காலத்திற்கு பிறகு தமிழகத்தில் வெறும் நான்கே பல்கலைக்கழகங்கள்.
எம்ஜிஆர் தாம் மறைவதற்குள் தமிழகத்தில் எத்தனை புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கினார் என்பதை கவனிக்கவும். கூத்தாடி என்று கோமாளிகளால் கிண்டல் அடிக்கப்பட்ட எம் ஜி ஆரின் இன்னொரு முகம் அறியலாம்.
தமிழ் மொழிக்கென்றே தனிப் பல்கலைக்கழகம் கண்டவர்.
ஒரு சாதாரண சினிமாவை 200 கோடியில் தயாரிக்கும் காலகட்டத்தில் இலட்சோப லட்சம் குழந்தைகளுக்கு 100 கோடி ரூபாய் செலவில் சத்துணவுத் திட்டத்தை நிறைவேற்ற அவர் பட்ட பாட்டைச் சொன்னால் எளிதில் யாருக்கும் புரியாது.
மனைவியுடன் சைக்கிளில் போனவனை டபுள்ஸ் என்றும் சைக்கிளில் லைட் இல்லை என்றும் பிடித்துக் கொண்டு டைனமோ இல்லை என பிடித்துப் போய் வெளுக்கப்பட்டவர்களை கேட்டுப்பாருங்கள் ! அப்போது சட்டசபையில் கம்யூனிஸ்ட் தலைவர் கூத்தகுடி.ச.சண்முகம் பேசிய போது அதற்கு தீர்வு சட்டமானது வரலாறு. எம்ஜிஆரின் மகிமை தெரியும்.
தமிழகத்தில் லட்சக்கணக்கான குடிசைகள் முதன்முறையாக ஒரு லைட் சர்வீஸ் மூலம் மூலம் மின்சாரம் என்பதைப் பார்த்தது 'ஒளிவிளக்கு' எம்ஜிஆரின் ஆட்சியில்தான்.
40 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட சாதனை.
ஆண்ட்ராய்டு போனில் வீடியோ காலில் பேசுகிற தலைமுறையிடம், வெளியூருக்கு போனில் பேச ட்ரங்க் கால் புக் செய்துவிட்டு இரண்டு மூன்று மணி நேரம் தந்தி ஆபீசில் காத்திருந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட சாதனைகள் ஒவ்வொன்றும் இன்றைய மக்கள் பார்வைக்கு சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் அது அளப்பரிய சாதனை அந்த நாயகன் புரட்சி நமது சமூகத்தில் நல்ல விடியல் அவரை அவரது பிறந்த நாளில் நினைவில் கொள்வோம். அதை பாரத ரத்னா எம்ஜிஆரை அவரது பிறந்தநாளில் பிரதமர் நினைவுகூர்ந்தார்
பாரத ரத்னா எம்ஜிஆரை அவரது பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார்.
ட்விட்டரில் பிரதமர் தமிழில் பதிவிட்டிருப்பதாவது:
”பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன”என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்