ஏடிஎம் களில் இனி மேல் படமெடுக்கும் போது செல்லுலார் தொலைபேசியும் தேவை

ஜூன் மாதம் 2019 ஆம் ஆண்டில் பாரத ரிசர்வ் வங்கி அமைத்த குழுவின் பரிந்துரைகளின் படி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.


ஏடிஎம் மையம் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களின் முழு வரம்பையும் மதிப்பாய்வு செய்ய இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டமைப்பில் இது குறிப்பிட்ட கவனம் செலுத்துகிற படி, அதிக பரிமாற்றக் கட்டணத்தை வங்கிகளுக்கு ஈடுகட்டவும், பொதுச் செலவுகள் அதிகரிக்கவும், ஒரு பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர் கட்டணத்தை ரூபாய். 21 ஆக அதிகரிக்க அனுமதிக்கப்பட்டது. உண்மையில், பாரத ஸ்டேட் வங்கியின் சேவைக் கணக்கு அல்லது அனைத்துக் கணக்கு வைத்திருப்பவர்களும் இந்த விதிகளின் படி, இனி ஏடிஎம் மையங்களிலிருந்து பணத்தை எடுக்கும் போது, ஒரு முறை பாஸ்வோர்ட் ஆன OTP என பாதுகாப்பு எண்களைப் பயன்படுத்த வேண்டும். இந்த OTP எண்களை பயன்படுத்தினால் மட்டுமே ஏடிஎம் மூலம் இனி மேல் பணம் எடுக்க முடியும் என்று பாரத ஸ்டேட் வங்கி வங்கி முடிவு செய்துள்ளது. இனி மேல் ஒவ்வொரு நபரும் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போதெல்லாம், OTP எனும் தொலைபேசி குறுந்தகவல் கட்டாயமாகும் தேவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.இனி நீங்கள் SBI ATM மையங்களுக்கு சென்று  கணக்கிலிருந்து பணத்தை ரொக்கமாக எடுக்க முயலும் போது, வங்கி முதலில் உங்கள் செல்லுலார் தொலைபேசி எண்ணுக்கு OTP வரும். வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் தொலைபேசி எண்ணிற்கு மட்டுமே இந்த ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படுமென்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட OTP எண்களை சரியாக ATM இயந்திரத்தில் உள்ளிட்ட பிறகுதான் இனி உங்களால் பணத்தை ஏடிஎம் இயந்திரத்திலிருந்து எடுக்க முடியும்

. இந்த அதிகாரப்பூர்வமான தகவலை எஸ்பிஐ வங்கி தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் ட்வீட் செய்துள்ளது. அந்த ட்வீட்டில் வங்கி, 'எஸ்பிஐ ஏடிஎம்களில் பரிவர்த்தனைகளுக்கான OTP அடிப்படையிலான பணத்தை எடுக்கும் முறையானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை பெறும் முறையானது மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பாகும். மோசடியிலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதே வங்கியின் முதன்மையான பணியாகும்' என்று பதிவிட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது இனிமேல் வாடிக்கையாளர்கள் படமெடுக்கும் அட்டை மற்றும் கைத் தொலைபேசி கொண்டு செல்வது அவசியம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்