சிவகங்கை மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் தலைவர், துணைத் தலைவர் வேட்பாளர்கள் குறித்து கட்சிகள் முதல் பட்டியல் அறிவிப்பை வெளியிட்ட போது
ஒரு நகராட்சி, 3 பேரூராட்சிகளில் அறிவிப்பு இல்லை.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள நான்கு நகராட்சிகளில் சிவகங்கையில் நகரச் செயலாளர் மற்றும் பருந்துப் பார்வை இதழ் ஆசிரியர் துரை ஆனந்தும், மானாமதுரை நகராட்சிக்கு முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கென்னடியையும் தி.மு.க., அறிவித்த நிலையில் தேவகோட்டை நகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. காரைக்குடி நகராட்சிக்கு மட்டும் காலை பத்து மணி வரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 11 பேரூராட்சிகளில் 8 பேரூராட்சிக்கு மட்டுமே தலைவர் பெயர்கள் தி.மு.க., வில் அறிவிக்கப்பட்டது.
சிங்கம்புணரி -அம்பலமுத்து, நெற்குப்பை -புசாலன், கோட்டையூர்- கே.எஸ்.கார்த்திக்சோலை, கானாடுகாத்தான்- ரா.ராதிகா, புதுவயல்- முகமதுமீரான், கண்டனுார்-சி.சங்கீதா, திருப்புவனம்- சேங்கை மாறன், இளையான்குடி- செய்யதுஜமீமா அறிவிக்கப்பட்டனர். திருப்புத்துார்,
நாட்டரசன்கோட்டை, பள்ளத்துார் பேரூராட்சிகள் குறித்த அறிவிப்பு காலை வரை வெளியிடப்படவில்லை. காரைக்குடி நகராட்சி உட்பட அறிவிக்கப்படாத 3 பேரூராட்சிகளிலும் வெற்றி பெற்ற தி.மு.க., வினர் வேட்பாளர் அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். காரைக்குடி நகராட்சிந் தலைவர் பதவிக்கு, தி.மு.க.,வை சேர்ந்த மூன்று பேர் கடும் போட்டி நிலவ தலைவர் பதவிக்கு போட்டியிடும் அறிவிப்பில் இழுபறி நீடிக்க காலை பத்து மணிக்கு மேல் தான் அறிவிப்பு வந்த நிலையில்.
காரைக்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் தி.மு.க., 18, அ.தி.மு.க., 7, காங்.,3, இ.கம்யூ.,1, சுயேச்சை 7 இடங்களைப் பிடித்துள்ளது.நேற்று முன்தினம், கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடந்த அன்றே தலைவர் பதவி யாருக்கென அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்த்த நிலையில் அறிவிப்பு வரவில்லை. தி.மு.க.,வைச் சேர்ந்த மூன்று முக்கிய நிர்வாகிகள் தலைவர் பதவிக்கு மோதினர்.
தமிழகத்தின் பல இடங்களில் தி.மு.க., சார்பில் நகராட்சி, மாநகராட்சி, மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான பெயர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், காரைக்குடி நகராட்சி தலைவர் குறித்து வெளியிடப்படாதது தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்த. வெற்றி பெற்ற கவுன்சிலர்களை ஒவ்வொருவரும் தனித்தனிக் குழுவாக அழைத்துச் சென்று பாதுகாத்து வரும் நிலையில். திருப்பத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவராக கோகிலாராணி நாராயணன் அறிவிக்கப்பட்ட உடன் தேர்வு செய்யப்பட்டார். கோகிலாராணியை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவதாக பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பு வந்தது. தலைவர் கோகிலா ராணியின் கணவர் கே.எஸ். நாராயணன் நீண்ட காலமாக திமுக இளைஞர் பிரிவின் முக்கியப் பொறுப்பிலிருந்த மூத்த கட்சிப் பிரமுகர் என்ற நிலையில் கட்சியின் புதிய நபர்கள் பலரின் செயற்கையான போட்டியிருந்த போதும் , தலைமையின் நேரடிப் பார்வை மூலம் வெற்றி கண்டார். அதை செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதில் 11 வது வார்டில் திமுக சார்பில் தற்போதய தலைவர் கோகிலாராணி நாராயணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். இந்நிலையில் பெண்களுக்கென திருப்பத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவி ஒதுக்கீட்டால் திமுக சார்பில் 7 பெண்கள் உள்ளிட்ட 14 வார்டுகளை திமுக கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி இரண்டு வார்டுகளைக் கைப்பற்றியதை அடுத்து திருப்பத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிப் போட்டிக்கு செயற்கையான போட்டி நிலவி வந்த போதும் கட்சி சீனியர் என்ற நிலையில் தலைவர் கோகிலா ராணி நாராயணன் தான் அறிவிக்கப்பட வாய்ப்பு என்பது வெற்றி பெற்ற போதே அறிந்த நிலையில் ஒரு போலியான போட்டி நிலவியது உண்மை மாவட்டத்தில் பல்வேறு பேரூராட்சி, நாராட்சிகளில் தலைவர்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் திருப்பத்தூரில் இன்று காலை வரை அறிவிக்காமல் இருக்க பல அரசியல் காரணங்களிருக்க. ஆரம்பம் முதலே கோகிலராணிக்குதான் பேரூராட்சி மன்ற தலைவர் பதவி கிடைக்கும் என திமுக கட்சியினரிடையே கூறப்பட்டு வந்த நிலையில், அதனை மெய்ப்பிக்கும் வகையில் கட்சி மேலிடம் கோகிலாராணி நாராயணனை பேரூராட்சி மன்றத் தலைவராக அறிவித்து அறிக்கை வெளியிட்டது. பேரூராட்சி மன்ற தலைவராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட கோகிலாராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கவுன்சிலர்கள் கதராடை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பேரூராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோகிலாராணியும் கவுன்சிலர்களுக்கு கதராடை அணிவித்து தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். .. திமுக கூட்டணியில் கும்பகோணம் மாநகராட்சி கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்
கட்சியின் நகர துணைத் தலைவரானவர் ஆட்டோ ஓட்டுனர்.. சரவணன் தேர்வானார் உள்ளாட்சித் தலைவர்கள் தேர்தலில் போட்டியின்றி தேர்வு.. அல்லது இருவர் போட்டியிட்டு நடந்த தேர்தல்.. அடுத்து
, இரு வேட்பாளர்கள் சமபலம் கொண்டதால் குலுக்கல் முறையில் தேர்வு
அடுத்ததாக கவுன்சிலர்கள் கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தலே தள்ளிவைப்பு..
இதில் கடைசியாக கூறிய ரகம் எவ்வளவு இடங்களில் நடக்கின்றன என்று பார்த்தால் கண்டனூர் பேரூராட்சி துணை தலைவர் உள்ளடி வேளை காரணமாக பதவிக்கு அறிவிப்பு வந்த பிறகு கிடைக்கவில்லை . பூவிருந்தவல்லி திமுக நகர செயலாளர் எம்.ரவிக்குமார் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட நிலையில். திமுக அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து அதிருப்தி வேட்பாளரை போட்டியிட வைத்ததால் கட்சி தலைமை உடனடியாக நடவடிக்கை என பல இதில் உண்டு
. இதில் தேவகோட்டை பகுதியில் நடந்த நிகழ்வு வேறு விதம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் சாலை பொன்னம்மாள் வெற்றி பெற்றுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அன்னவாசல் பேரூராட்சி 1 வது வார்டு அதிமுக வேட்பாளர் சாலை. பொன்னம்மா 51 வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தலைவர் வேட்பாளராக முன்னிறுத்திய நிலையில் தொடர் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளிடம், தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியே தேர்தல் நடத்தப்படுவதாகவும் கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்..
தங்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில், 'உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்