டில்லி கோகுல்புரியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்
தில்லி கோகுல்புரியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
“தில்லி கோகுல்புரியில் நிகழ்ந்த இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தை தாங்கக்கூடிய வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்
கருத்துகள்