தேசிய மாணவர் படையின் கடல் சாகசப் பயணத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தேசிய மாணவர் படையின் கடல் சாகசப் பயணத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் புதுச்சேரியில் உள்ள தேங்காய்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். 11 நாட்கள் நடைபெற உள்ள இந்த கடல் படகுப் பயணத்தில் 35 சிறுவர்களும், 25 சிறுமிகளும் கலந்துகொண்டுள்ளனர். இந்த பயணம் கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்காலை சென்றைடைந்து பின்னர் அதே வழியில் புதுச்சேரியை வந்தடைய உள்ளது.
இப்பயணத்தின் போது பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு, ரத்த தான முகாம், கடற்கரையை தூய்மைப்படுத்துதல், மரம் நடுதல், ரத்ததானம் உள்ளிட்ட சமுக சேவை நடவடிக்கைகளில் தேசிய மாணவர் படையினர் ஈடுபட உள்ளனர்.
கருத்துகள்