இந்தியாவின் வேலைவாய்ப்பு மற்றும் சாலையோர பொருளாதாரம் குறித்த அறிக்கையை நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது
‘இந்தியாவில் பெருகி வரும் வேலைவாய்ப்பு மற்றும் சாலையோர பொருளாதாரம்’ என்ற தலைப்பிலான அறிக்கையை நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை நித்தி ஆயோக் துணைத்தலைவர் சுமன்பெரி, தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த் மற்றும் சிறப்பு செயலாளர் டாக்டர் கே ராஜேஸ்வர ராவ் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்த அறிக்கை இந்தியாவின் வேலைவாய்ப்பு – சாலையோர பொருளாதாரம் குறித்த விரிவான சாத்தியக்கூறுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கியதாகும். இந்த அறிக்கை வேலைவாய்ப்பு உருவாக்கத்திறன் மற்றும் தற்போதையை அளவை மதிப்பிடுவதற்கான அறிவியல் பூர்வமான அணுகுமுறையை வழங்குகிறது. வேகமாக வளர்ந்து வரும் இத்துறையின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள், சமூக பாதுகாப்புக்கு உலகளவில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை சிறப்பாக விளக்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நித்தி ஆயோக் துணைத்தலைவர் சுமன்பெரி, “இந்த அறிக்கை இத்துறையின் திறன் குறித்த புரிதலுக்கான மதிப்புமிக்க அறிவாற்றல் வளமிக்கதாக இருப்பதோடு, வேலைவாய்ப்பு மற்றும் சாலையோர பணிகள் குறித்த விரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக்கு வழிவகுக்கும்” என்றார்.
தலைமைசெயல் அதிகாரி அமிதாப் காந்த் பேசுகையில், வேகமான நகரமயமாதல், காரணமாக இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கும் திறன், இணையதள வசதி அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்மார்ட் போன் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தார். இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு பரிந்துரைகள், மத்திய அரசின் அமைச்சகங்கள், மாநில அரசுகள், பயிற்சி வழங்குவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரம் ஒருங்கிணைந்து பணியாற்றி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க தேவையான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
கருத்துகள்