முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஇஅதிமுக தலைமை பதவியை நிர்ணயிக்கப்போகும் கட்சி பைலாவும் நிறுவனர் டாக்டர் எம்ஜிஆர் இறுதி உயிலும்

அஇஅதிமுக அமைப்புச் சட்டம் மற்றும் துணை விதிமுறைகளையடுத்து எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு எதிரான அடுத்து வீசப்பட்ட அஸ்திரம் தான் எம்.ஜி.ஆரின். உயில்.  இதனால் ஆட்டம் கண்டிருக்கிறது எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு என்பதே உண்மை.

அஇஅதிமுகவின் பைலாவில் கண்டுள்ள படி பொதுக்குழு உறுப்பினர்களால்  எந்த விதிகளிலும் திருத்தம் கொண்டு வரலாம்.   ஆனால் கட்சியின் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வது மட்டும் அஇஅதிமுகவின் தொண்டர்களால் மட்டுமே தேர்தல் நடத்தித் தேர்வு செய்ய வேண்டும்.   இதை எந்த காலத்திலும் மாற்றக்கூடாது மாற்றவும் முடியாது என்று வகுத்திருக்கிறார் டாக்டர் எம்ஜிஆர் .அஇஅதிமுகவின் இந்த பைலாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.  அதை உடைத்து எப்படியாவது பொதுச் செயலாளராக வேண்டும் என்று பகீரத முயற்சியெடுத்து வருகிறார் எடப்பாடி கே.பழனிச்சாமி   இந்த முறை எடப்பாடி கே.பழனிச்சாமிக்கெதிராக இன்னொரு அஸ்திரம் எடுக்கப்பட்டிருக்கிறது.   அஇஅதிமுகவின் பைலாவை அடுத்து எம்.ஜி.ஆரின் உயில். எம்ஜிஆர் எழுதி வைத்திருப்பதில் கட்சித் தேர்தலை நடத்தி அதில் அஇஅதிமுக தொண்டர்கள் அனைவரும் வாக்களித்து யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள் தான் கட்சி பொதுச்செயலாளர் என டாக்டர் எம்ஜிஆர் உயில் உள்ள நிலையில்



இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், முத்தரையர் சமூகத்தின் பிரமுகருமான கு.ப.கிருஷ்ணன் திருச்சிராப்பள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய போது "என்றைக்கு ஒரு தொண்டன் இந்த இயக்கத்தை தலைமை ஏற்று வழி நடத்துகிறானோ அன்றைக்குத்தான் எம். ஜி. ராமச்சந்திரனின் ஆத்மா சாந்தி அடையும் எனச் சொல்லியிருக்கிறார் எம்ஜிஆர் .  அவர் எழுதி வைத்த உயிலின்படி அவருக்கு பின்னால் இந்த இயக்கத்தை வழிநடத்த தொண்டர்களிடம் தேர்தல் நடத்தி அஇஅதிமுக பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் போட்டியிட்டு வெற்றி பெறட்டும் .  அப்படித் தேர்தல் நடத்தினால் நானும் போட்டியிடுவேன்.  ஆயிரம் பேரை போட்டியிடவும் வைப்பேன்.  கட்சி விதிகளைத் திருத்தலாம்.





  ஆனால் எம்ஜிஆர் உயிலைத்  திருத்த முடியாது . அந்த உயில் தற்போது ஓய்வு பெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமனிடம் இருக்கிறது, எம்ஜிஆர் எழுதி வைத்திருக்கும் அந்த உயிலின்படி இன்று வரைக்கும் சத்யா ஸ்டூடியோவின் வருமானம் அஇஅதிமுகவிற்குச் செல்கிறது. எம்ஜிஆரின் உயிலின் படி தேர்தல் நடத்த ஒப்புக் கொண்டால் நீதிமன்றமே முன் நின்று தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிப்பார்கள்.   ஆனால் எம்ஜிஆரின் விருப்பப்படி செயல்படாமல் குறுக்கு வழியில் பொதுச் செயலாளரின் பதவியை யாரும் கைப்பற்ற நினைத்தால்,  நான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன்". எனத் தெரிவித்துள்ளார்.




அஇஅதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த காலஞ்சென்ற முன்னால் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா 2017 ஆம் ஆண்டு கட்சியின் அமைப்புச் சட்டம் மற்றும் துணை விதிகளுக்கு முரணாகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தப் பதவிகளையோ மற்றும் எந்தவொரு ஆவணத்தையோ, கடிதத்தையோ தேர்தல் ஆணையம் கட்சிக்குத் தரவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடத் தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை.  சிவில் நீதிமன்றத்திற்குத் தான் உரிமை உள்ளது என்று கட்சித் தொடர்பான வழக்கு ஒன்றில் 2020 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதுபோன்று, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை.





அஇஅதிமுக பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்றும் எந்த நீதிமன்றமும் தெரிவிக்காத நிலையில் அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமியும் ஜூலை மாதம் 4 ஆம் தேதி பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில். கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையிலுள்ளதால் பொதுக்குழுக் கூட்டத்தை கூட்ட தடைவிதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்து விதிமுறைகளுக்கு முரணாக ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.



இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி எஸ்.பிரியா, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நிலையில் தற்போது ஜூலை மாதம் 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது."காலையில் சூரியன் கிழக்கில் தோன்றும்.. மாலையில் மேற்கில் மறையும்" என்பதே தவறான பாடம்..



சூரியன் அது இருக்கும் இடத்தில்தான் இருக்கிறது. பூமிதான் அதுவையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிக் கொண்டு வருகிறது. அதுபோலவே டாக்டர் எம்ஜிஆர் உயிலும் இதுவரை பேசுபொருளாக இல்லை ஆனால் அதுவே பேசுபொருள்.

அதே மாதிரிதான் தற்போது, சூரியன் தூரமாகப் போகிறதா இல்லை பூமி தூரம் போகிறதா என்பதே தெரியாம ஒரு  நகைச்சுவை இப்போது நடக்கிறது. அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், ஜுலை மாதம் 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்கும் என, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. அதற்கு நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முயற்சித்து வருகிறது. ஆனால், எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினர், கூட்டத்திற்கான ஏற்பாடுகளைத், தீவிரமாகச் செய்து வருகின்றனர். திருமண மண்டபத்திற்கு வெளியே, திறந்தவெளியில் பந்தல் அமைக்கும் பணியும், வேகமாக நடக்கிறது.





பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணியும் நடக்கிறது. பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே உள்ள பொதுச்செயலாளர்  பதவியை மீண்டும் கொண்டு வருவது, தற்காலிகப் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை நியமிப்பது உட்பட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. கடந்த பொதுக்குழுவில் நிராகரிக்கப்பட்ட தீர்மானங்களில் சில, இந்த முறை நிறைவேற்றப்பட உள்ளன. அ.இ.அ.தி.மு.க., பொதுக்குழு விவகாரத்தில் தலையிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் தடை விதிக்கப்படாததுடன், பச்சைக் கொடியும் காட்டப்பட்டுள்ளதால், வரும் தகவல், அறிவித்தபடி பொதுக்குழு நடக்கும் என, எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினர் தெரிவித்தனர்.






ஜுன் மாதம் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க., விதிகளில் திருத்தம் மேற்கொள்ளத் தடை கோரி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு, 'வரைவுத் தீர்மானங்கள் 23 ஐத் தவிர்த்து விட்டு, புதிதாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது; பொதுக்குழுவில் எந்தப் பொருள் குறித்தும் விவாதிக்கலாம்; ஆனால், அதுகுறித்து முடிவெடுக்கக் கூடாது' என உத்தரவிட்டிருந்ததை யடுத்து, 23 ஆம் தேதி பொதுக்குழு கூடியதில், 23 தீர்மானங்களையும் இரத்து செய்வதாகவும், கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஜூலை மாதம் 11 ஆம் தேதியில் பொதுக்குழு கூடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.




அதைத் தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனு: அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 23 வரைவு தீர்மானங்களில், அவைத் தலைவர் நியமனம் குறித்து, எந்தத் தீர்மானமும் இல்லை. அவைத் தலைவர் என்ற முறையில், பொதுக்குழுவில் அறிமுகப்படுத்திய தீர்மானத்தை ஏற்று, ஜூலை மாதம் 11 ஆம் தேதியில் மீண்டும் பொதுக்குழு கூட்ட முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை எடப்பாடி கே.பழனிசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, தமிழ்மகன் உசேன், ஜெயகுமார், சீனிவாசன் ஆகியோர் பின்பற்றவில்லை. எனவே, ஜுன் மாதம் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும்; அவைத் தலைவராக செயல்படவும் தடை விதிக்க வேண்டும். ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்த, தடை விதிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதவர்களை, அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டிருந்த மனு, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரரான சண்முகம் சார்பில், வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, ''வரைவுத் தீர்மானங்களை நிராகரித்து விட்டு, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தும், ஜூலை மாதம் 11 ஆம் தேதியில் பொதுக்குழுவை கூட்டுவதெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றியது, நீதிமன்ற உத்தரவை மீறியது போலாகும்,'' என்றார்.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ''தற்காலிக அவைத் தலைவராக மட்டுமே தமிழ்மகன் உசேன், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டார். ''அவரை, நிரந்தர அவைத் தலைவராக நியமிக்க, பழனிசாமி முன்மொழிந்து, ஜெயகுமார் வழிமொழிந்தது, நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்,'' என்றார்.


இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''இந்த வழக்கு,விசாரணைக்கு ஏற்புடையது தானா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றார். அப்போது நீதிபதிகள், 'வரைவு தீர்மானங்கள் தவிர்த்து வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என்ற உத்தரவு, ஜூன் மாதம் 23 ஆம் தேதியில் நடந்த பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும். 'அதைத் தொடர்ந்து நடக்கும் பொதுக்குழுக் கூட்டங்களுக்கல்ல.


ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும்படி, இந்த மனுவில் கோர முடியாது.ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழுவைப் பொறுத்தவரை, நாங்கள் தலையிட முடியாதென்றனர்.மேலும், 'உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு எடுக்கப்பட்டு விட்டால், இந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும்?' எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதையடுத்து, விசாரணையை, ஜூலை மாதம் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், ஜூன் மாதம் 23 ஆம் தேதியில் பொதுக் குழுவில் நடந்த நிகழ்வுகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழு விஷயத்தில் தலையிட மறுத்ததுடன், தடை விதிக்கவும் முடியாதென, உயர் நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியதால், ஏற்கனவே அறிவித்தபடி பொதுக்குழு நடக்குமென எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவாளர்கள் உறுதிபட தெரிவிக்கும் நிலையில்,

அ.இ.அ.தி.மு.க., பொதுக் குழுவுக்கு தடை  விதிக்கக் கோரிய மனுவுக்கு, எடப்பாடி கே. ‌பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாளைக்குள் பதிலளிக்க, சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.இ.அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம்,  11 ஆம் தேதி நடப்பதற்குத்  தடை விதிக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்டம், ஆவிலிபட்டியைச் சேர்ந்த எஸ்.சூரியமூர்த்தி என்பவர், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில்  தாக்கல் செய்த வழக்கு நீதிபதி தாமோதரன் முன், விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'எதிர்மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், ஆவணங்களை மனுதாரர் அறிந்து கொள்ளும் வகையில், தமிழில் மொழி பெயர்த்துத் தாக்கல் செய்ய, இந்த நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. 'எங்கள் தரப்பு பதில் மனு, ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய, மூன்று வாரம் கால அவகாசமளிக்க வேண்டும்' என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைத்தார். நாளை, எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இந்த நிலையில் 

அ.இ.அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதல்வரான எடப்பாடி கே.பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வு நீதிபதியான இந்திரா பானர்ஜியிடம், எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.


அப்போது அவர், ''அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்ட ஒரு வார கால அவகாசமே உள்ளதால், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்,'' என, கோரிக்கை விடுத்தார். இதற்கு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'பொதுக்குழு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீறப்பட்டது குறித்த அவமதிப்பு வழக்குகள் உள்ளதால், பழனிசாமி மனுவை அவசர வழக்காக விசாரிக்கத் தேவையில்லை' என, வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது.  நீதிமன்றத்தில் தான் முடிவு வரவேண்டிய நிலையில் மறைந்து கிடக்கும் ஒரு சில உண்மைகள் இங்கு உற்றுநோக்க வேண்டும். அ.இ.அ.தி.மு.கவில் சிக்கல்கள் ஏற்பட்டால், அதனை எப்படிக் களைவது என்பதற்கான தீர்வை கட்சி நிறுவனர் மற்றும் தலைவர்  டாக்டர் எம்.ஜி.ஆர் எனும் முன்னால் முதல்வர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் முன்வைத்துள்ளார். அவர் எழுதிய இறுதி உயிலின் நகல் நம்மிடமுள்ளது. எம்.ஜி.ஆர் மறைந்த 16 ஆவது நாளில் அஇஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு அப்போது நடந்தது. இதற்கு முன்னால் முதல்வரும் டாக்டர் எம்ஜிஆர் மனைவியுமான முன்னால் முதல்வர் வி.என்.ஜானகி ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்தில் இந்த உயிலை மூத்த வழக்கறிஞர் என்.சி.ராகவாச்சாரி வாசித்தார். டாக்டர் 


எம்.ஜி.ஆர் உயில் 

23 பக்கங்களைக் கொண்டது அந்த உயிலில், பல விஷயங்களை டாக்டர் எம்.ஜி.ஆர் சொல்கிறார். குறிப்பாக, 'என்னுடைய சத்யா ஸ்டூடியோ பங்கு உள்பட அனைத்தையும் கட்சியின் நிர்வாகச் செலவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கட்சி பிளவுபட்டாலோ, கலைக்கப்பட்டாலோ கட்சியின் தற்போதைய 80 சதவீத அங்கத்தினர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ, அவர்கள் தான் கட்சி' என்கிறார். அதாவது, 'கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் 80 சதவீதம் பேர்' என்பது தான் டாக்டர் எம்.ஜி.ஆர் ஃபார்முலா. இந்த விவகாரத்தில் அ.இ.அ.தி.மு.கவின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை அவர் கூறவில்லை.

இந்த உயிலை வாசிக்கும் போது அவைத் தலைவராக வள்ளிமுத்து இருந்தார். கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் குறித்த எந்தப் பேச்சும் அந்த உயிலில் இல்லை. அடிப்படை உறுப்பினர்களில் 80 சதவீதம் பேர் யார் பக்கம் என்ற அடிப்படையில் தான் இவர்கள் முடிவெடுக்க முடியும். 'என் பக்கம், உன் பக்கம்' என எந்த அடிப்படையில் தற்போதுள்ளவர்கள் பேசுகிறார்கள் எனத் தெரியவில்லை. தவிர, டாக்டர் எம்.ஜி.ஆர் உயிலென்பது வெளிப்படையான ஆவணம். மூத்த வழக்கறிஞர் 'என்.சி.ராகவாச்சாரியும் அவரது மருமகனும் இறந்து விட்டால் நீதிமன்றமே இந்த உயிலை செயல்படுத்த வேண்டும்' எனவும் டாக்டர் எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்''.

(உயிலில் உள்ள 'தற்போதைய' என்ற காலகட்டத்தை தற்போதுள்ள சூழ்நிலைகளுக்கு பொருத்திக் கொள்ளலாம். பொதுவாக உயிலில் சொத்தைப் பற்றித்தான் பலரும் எழுதுவார்கள். ஆனால், கட்சியைப் பற்றி எம்.ஜி.ஆர் எழுதுவதற்குக் காரணம் அவரது சொத்தான சத்யா ஸ்டூடியோவை கட்சிக்குக் கொடுத்ததால் தான். அவரது சொத்துக்களை அனுபவிப்பவர்கள், அவர் சொன்னதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். சத்யா ஸ்டூடியோவின் இன்றைய மதிப்பு என்பது 200 கோடி ரூபாயைத் தாண்டும். எடப்பாடி கே. பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் டாக்டர் எம்.ஜி.ஆருக்குச் சொந்தமான அலுவலகத்தில் அமர்ந்து தான் பேசுகிறார்கள்.இது போன்ற சிக்கலான நேரங்களில், 1987 ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.கவின் உறுப்பினர்கள் பட்டியலை எடுப்பதை விடவும் காலஞ்சென்ற முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலுள்ள அ.இ.அ.தி.மு.கவின் உறுப்பினர்கள் பட்டியலை வைத்து முடிவு செய்யலாம். இது தொடர்பாக, அ.இ.அ.தி.மு.க தொண்டர்களை வாக்களிக்க வைத்து, 'யார் பக்கம் அதிக உறுப்பினர்கள் உள்ளனர்?' என்பதை முடிவு செய்யலாம்'' என்பதே மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து.) டாக்டர் எம்.ஜி.ஆர். உயிரோடிருந்த போது 28.ஏப்ரல்.1986.ஆம் ஆண்டில் ஒரு உயில் எழுதினார். பின்னர் அதை இரத்து செய்து விட்டு 18.ஜனவரி 1987 ஆம் தேதியில் (இரண்டாவது முறையாக அமெரிக்கா புரூக்ளின் மருத்துவமனை செல்வதற்கு முன்பு) புதிய உயில் ஒன்றை எழுதி வைத்தார். அதுவே இறுதி உயில் டாக்டர் எம்.ஜி.ஆர். மரணமடைந்த பிறகு 09 ஜனவரி 1988 ஆம் நாள் அன்று இந்த உயில் வெளியிடப்பட்டது.

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தலைமை நிலையத்தில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் டாக்டர் எம்.ஜி.ஆரின் வக்கீல் என்.சி.ராகவாச்சாரி உயிலில் எழுதப்பட்டிருந்த விவரங்களைப் படித்தார். அப்போது டாக்டர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் அங்கிருந்தார். அ.இ.அ.தி.மு.க. அவைத்தலைவர் ஈ.வெ.அ. வள்ளிமுத்து, மூத்த துணைப் பொதுச் செயலாளர் இராகவானந்தம், பொருளாளர் செ.மாதவன் ஆகியோரும் உடனிருந்தனர். உயில் மொத்தம் 23 பக்கங்களைக் கொண்டதாகும். அது தமிழில் எழுதப்பட்டுள்ளது. உயில் விவரம் வருமாறு:-

செங்கல்பட்டு மாவட்டம் மணப் பாக்கத்தில் இருக்கும் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் குடியிருக்கும் எம்.கோபாலன் அவர்களின் குமாரனாகவும், தமிழக முதல் அமைச் சராகவும் பணியாற்றி வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் நான் இந்த புதிய உயில் பத்திரத்தை சுய நினைவோடும், மனப்பூர்வமாகவும, பிறர் தூண்டுதலின்றியும் எழுதி வைத்திருக்கிறேன். எனக்குக் குழந்தைகள் கிடையாது. என்னுடைய ஒரே வழிமுறை (வாரிசு) என் மனைவி திருமதி. ஜானகி அம்மாள் தான். அவளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசில்லை. என் காலத்துக்குப் பிறகு என் சொத்துக்கள் சம்பந்தமாக எந்தவித வழக்குகள், தகராறுகள் ஏற்படாமலிருக்கவும், எனது உறவினர்கள் எவரும் பாத்தியதை உரிமை கொண்டாடாமலிருக்கவும் சுய சம்பாத்தியத்தின மூலம் நான் வாங்கிய சொத்துக்கள் விஷயமாக இந்த உயிலில் ஏற்பாடுகளை செய்திருக்கிறேன்.

சென்னை தேசிகாச்சாரி ரோட்டில் 24 ஆம் எண் உள்ள வீட்டில் குடியிருக்கும் மூத்த வழக்கறிஞர் என்.கி.ரங்கசாமியின் குமாரரான என்.சி.ராகவாச்சாரி மற்றும் சென்னை வீனஸ் காலனியில் குடியிருக்கும் எனது மருமகன் ராஜேந்திரன் அவர்களையும் இந்த உயிலை நிறைவேற்றுபவராக நியமிக்கிறேன்.

அவர்கள் காலத்திற்குப் பிறகு சட்டப்படி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறைவேற்றுபவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறமேன். அடியில் கண்ட அசையாத மற்றும் அசையும் சொத்துக்கள் எனக்குச் சொந்தமானவை. அவைகளில் வேறு யாருக்கும் எந்த பாகமும், எந்த உரிமையும் கிடையாது.

1) நான் குடியிருக்கும் மணப்பாக்கம் கிராமத்தில் ராமாவரத்தில் என் பெயரிலுள்ள "எம்.ஜி.ஆர். கார்டன்" என்னும் பங்களாவும், தோட்டமும்.

2) சென்னை தியாகராயநகர் ஆற்காடு சாலையில் 27 வது எண்ணில் இருக்கும் கட்டிடமும், அடி மனையும்.                  3) சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டம்.

4) ஆலந்தூர் மார்க்கெட் சந்தில் எண் 43 ல் இருந்து 47 வரை உள்ள கட்டிடங்களும் அடிமனையும்.

5) நான் குடியிருக்கும் ராமாவரம் தோட்ட பங்களாவில் உள்ள அசையும் சொத்துக்களான எனக்கு சினிமா துறையில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும், மற்றப்படி கிடைத்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களும். என் சொந்த மர, இரும்புச் சாமான்கள், வெள்ளிப் பாத்திரங்களும், மோட்டார் வாகனங்கள், பசு முதலிய கால்நடைகள்.

6) சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் என் பெயரில் உள்ள பங்குகள்.

7) இவைகள் எல்லாம் என் சுய சம்பாத்தியத்தில வாங்கப்பட்டவை. எனக்கு சர்வ சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டவை ஆகும்.

மேலே சொல்லப்பட்ட நான் குடியிருக்கும் எம்.ஜி.ஆர். கார்டன் என்று பெயருள்ள மணப்பாக்கம் ராமாவரம் தோட்டத்தில் பங்களா, கார்செட், கோவில், பழத்தோட்டம் ஆகியவை என் மனைவி திருமதி வி.என்.ஜானகி அவருடைய ஆயுள் பரியாந்தம் ஆண்டு அனுபவித்துக்கொள்ளவேண்டியது. அவைகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ, தானமாக கொடுக்கவோ உரிமை கிடையாது.என் மனைவி காலத்திற்கு பிறகு அவருடைய சொந்தக்காரப் பெண்ணான கீதா (மதுமோகன் மனைவி), நிர்மலா (அப்புவின் மனைவி), ராதா (கோபாலகிருஷ்ணன் மனைவி), ஜனம், சுதா ஆகியோர் ராமாவரம் தோட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட ஏ.பி.சி.டி. என்று வரைபடத்தில் குறிப்பிட்ட கட்டிடங்களை அவரவர் ஆண்டு அனுபவித்துக் கொள்ளவேண்டியது.

அவர்கள் மேற்படி சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ போன்றவை செய்ய உரிமையில்லை. அவர்கள் காலத்திற்கு பிறகு இந்தச் சொத்துக்களை அவரவர் வாரிசுகள் பெறவேண்டும். மேற்சொன்ன ராமாவரம் தோட்டத்தில் காலி இடங்களை எல்லாம் சேர்த்து இந்த உயிலை நிறைவேற்றுபவர், அதில் "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லம் என்ற பெயரில் ஊமைகள், காது கேளாதவர்கள் இல்லமாக அதை ஏற்படுத்தவேண்டும்.

அந்த ஏழைகள் இலவசமாக தங்கியிருப்பதற்கும், உணவுக்கும் காது கேளாதவர்கள் இலவசமாக கருவிகள் பெறுவதற்கும், உடுத்த உடை, மருந்துகள் வசதி, கல்வி, தொழில் முதலியவைகளுக்காக அந்த காலி இடங்களில் செட்டுகளும், கட்டிடங்களும் போட்டுக்கொள்ள வேண்டும். ஊமைகள் பேசுவதற்கு சிகிச்சையும், பேச்சுப் பயிற்சியும் ஏற்பாடு செய்தாக வேண்டும். இதே மாதிரி காது கேளாதவர்களுக்கு இந்த இடத்தில் இதுபோல் தங்கும் வசதி, காது கேட்பதற்கான கருவிகள் வாங்கிக் கொடுத்தல் போன்றவற்றை செய்தல் வேண்டும். இந்த "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்திற்கான செட்டுகள், கட்டிடங்கள் அமைக்கவும், இதர செலவுகளுக்கும் சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டத்தின் வருமானத்தில் இருந்து மேற்படி காரியங்களுக்கான செலவைச் செய்யவேண்டியது.

என்னுடைய வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள் ஆற்காடு ரோடு 27 ஆம் நம்பர் வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், புத்தகங்கள், நூல்கள், மேற்சொன்ன தி.நகர் ஆற்காடு 27 ஆம் நம்பர் கட்டிடத்தில் வைக்கப்பட வேண்டும். 27 ஆம் நம்பர் வீட்டில் உள்ள மனையும், கட்டிடங்களும் என் காலத்துக்கு பிறகு "எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்" என்று பெயரிட்டு பாதுகாக்கப் படவேண்டும்.

என் நினைவு இல்ல பராமரிப்புகளை சரியாக மேற்கொண்டு அதில் உள்ள பொருட்களையும், அந்த இடத்தையும் மக்கள் பார்வையிட வசதி செய்து கொடுக்க வேண்டும். மேற்சொன்ன எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை யாரும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை கிடையாது.

இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது. அதற்காக அந்த மார்க்கெட் கட்டிடங்களை எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு எழுதி வைக்கிறேன்.பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன். சத்யா ஸ்டூடியோ கம்பெனியில் எனக்குள்ள பங்குகள் அனைத்தும் நான் ஆரம்பித்த அ.இ

.அ.தி.மு.க. கட்சிக்கு கீழே சொல்லப்பட்ட நிபந்தனைக்குட்பட்டு சேரவேண்டும்.

சத்யா ஸ்டூடியோ கம்பெனி பங்குகளை அகில இந்திய அ.தி.மு.க. கட்சி பெற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து வருகிற வருமானத்தை கட்சியின் பயனுக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கட்சி பிளவுபட்டாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ மேற்படி சத்யா ஸ்டூடியோ கம்பெனியின் பங்குகளை எல்லாம் இந்த உயிலை நிறைவேற்றுபவர் கைப்பற்றி மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்ல செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

சத்யா ஸ்டூடியோ கட்டிடத்துக்கு என் தாயின் பெயரான 'சத்யபாமா எம்.ஜி.ஆர். மாளிகைஎன்று பெயர் வைக்கவேண்டும். என்னுடைய ராமாவரம் தோட்டத்தில் உள்ள விலை உயர்ந்த பரிசுப்பொருட்களப் போக மீதி உள்ள மோட்டார் வாகனங்கள், மர இரும்பு சாமான்கள், கால்நடைகள் எல்லாம் என் மனைவிக்கு உரியதாகும்.

இந்த உயிலில் கண்டுள்ள எல்லா செயல்களையும், நடவடிக்கைகளையும அடுத்த 6 மாதத்தில் அமலுக்கு கொண்டு வரவேண்டும். இந்த உயிலில் கூறாமல் விடப்பட்டவை மற்றும் ரொக்கப்பணம் எதுவும் இருந்தால் அவை எல்லாம் என் மனைவி ஜானகி அம்மாளுக்கே சேரும்.இவ்வாறு அந்த உயிலில் எம்.ஜி.ஆர். எழுதி இருந்தார்.

பின்னர் மூத்த வக்கீல் ராகவாச்சாரி சத்யா ஸ்டூடியோ மற்றும் நிலங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு: சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆருக்கு 95 சதவீத பங்கும் ஜானகி அம்மாளுக்கு 5 சதவீத பங்கும் உள்ளன. சத்யா ஸ்டூடியோ 95 கிரவுண்டு பரப்பளவு உள்ளது. சாலிக்கிராமம் சத்யா தோட்டம் 8 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ராமாவரம் தோட்டம் 6 ஏக்கர் 34 செண்டு பரப்பளவு உள்ளது. இதில் எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்துக்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு மூத்த வக்கீல் என்.சி.ராகவாச்சா ரி கூறினார்.

அ.இ.அ.தி.மு.க. மூத்த துணைப்பொதுச்செய லாளர் ராகவானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"இந்தத் தலைமைக் கழக கட்டிடமும், அடிமனையும் ஜானகி அம்மாளுக்குத்தான் சொந்தம். அதை கட்சிக்காக பரிசாக கொடுத்து பதிவு செய்துவிட்டார்."

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் தற்போது எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு கடந்த ஆஆட்சியில் தலைமை வவழக்கறிஞராக இருந்த விஜய் நாராயணனையும்,

ஓ.பன்னீர் செல்வம் தரப்பு முன்னால் சபாநாயகர் காலமான பி எச் பாண்டியன் பிள்ளைகளையும் களத்திலிறக்கி உள்ளது.

என்ன தான் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டவர்கள்  ஆட்சி செய்தவர்கள் ஆனாலும் வழக்கறிஞர்களே துணை. இவர்கள் தான் கடந்த நான்கு வருடங்களாக நம்மை ஆட்சி செய்த நிலை என்பதை நினைவில் வைத்துப் பார்க்கவும். அ.இ.அதிமுக முன்னாள் அமைச்சரான கு.ப. கிருஷ்ணன், இப்போது தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் வருவதைப் பார்க்க முடிகிறது.  "எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் கழகத் தேர்தலை எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க வேண்டும். தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் ஒற்றைத் தலைமையேற்கட்டும். இவர்கள் இருவரும் மட்டுமே தான் அ.இ.அ.தி.மு.க வா? எம்.ஜி.ஆரின் உயில்படி தொண்டர்கள் மட்டுமே தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். இரட்டைத் தலைமை வேண்டுமென தீர்மானம் போட்டவர்களே, இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்கின்றனர். எம்.ஜி.ஆர் எழுதிய உயில் நீதிபதி ஹரிபரந்தாமனிடம் உள்ளது. அதை வைத்து உச்சநீதிமன்றம் வரை செல்வேன். இன்றைய தேதியில் அ.இ.அதிமுகவில் எவருக்கும் பொறுப்பில்லை. அனைவரும் தொண்டர்கள் தான்"  இது  நேற்று வெளியான அவரது தகவல் யாரிந்த கு.ப.கிருஷ்ணன்?  அன்றைய ஃபவர்மணி யான ஆயிரம் ரூபாய் நோட்டுகள் காவிரிக் கரையோரத்தில் எரிந்தும் எரியாமலும் சில கோடிகள் காணக் கிடைத்தது.  தொடர் சோதனை போய்க் கொண்டிருந்த கால கட்டம் அது.  அந்தப்பணம் யாருடையது என்ன பின்னணி என்பதெல்லாம் அப்போதே அம்பலப் பட்டுப்போனது. அதற்கும் 'தமிழர் பூமி' என்று கு.ப.கிருஷ்ணன் தனிக்கட்சி தொடங்கியதற்கும் தொடர்பு உண்டா எனத் தெரியவில்லை. மறுபடியும் அ.இ.அதிமுகவில் அவர் சேர்ந்தாரா  என்பதும் தெரியவில்லை. இச் சூழலில் இப்படி ஒரு பூதம் புறப்பட பலருக்கு இன்னும் அஇஅதிமுகவின் நிலை புரியவில்லை என்பதே உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த