என்னங்க பெரிய ஊட்டி, கொடைக்கானல், மாஞ்சோலை போயிருக்கீங்களா நீங்க. என திருநெல்வேலி பகுதியில் பிறந்த ஒவ்வொருவரும் தங்களின் அடையாளத்தைப் பற்றிப் பேசும் போது, உடல் அவர்களை அறியால் புல்லரிக்கும்.
. தங்கள் கை கால்கள் உள்ள முடிகள் ஒருமுறை சிலிர்த்து உணர்ச்சி மேலிடும். அந்த அளவிற்கு அவர்களின் உணர்வோடு கலந்த பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் இளவரசர் மார்த்தாண்ட வர்மருக்கும் அவரது உறவினரான எட்டு வீட்டுப் பிள்ளைக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டது. எட்டுவீட்டுப் பிள்ளையை வீழ்த்த சிங்கம்பட்டி மன்னரின் உதவியை நாடினார் வர்மாவின் தாயார் ராணி உமையம்மை. வர்மாவுக்கு உதவப்போய், எதிர்பாராத விதமாக சிங்கம்பட்டி இளவரசர் மரணமடைந்தார். அப்படி இறந்தவருக்காக, மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார். 32-ஆவது மன்னர், சென்னையில்
படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கொலை வழக்கில் சிக்கினார். வழக்கிற்கு நிறைய பணம் செலவானதால், அதைச் சமாளிக்க மலைநாட்டில் பரிசாக பெற்ற நிலத்தில் சுமார் 8,000 ஏக்கர் நிலத்தை பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி.) என்ற நிறுவனத்திற்கு 99 வருடக் குத்தகைக்கு விட்டார்.
இரயத்துவாரி நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்ட பிறகும் இந்த நிறுவனம் அரசுடன் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டு தேயிலைத் தோட்டத்தை நடத்தி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அழகுமிகுந்த மலைப்பகுதி மாஞ்சோலை. 7,347 ஹெக்டேர் அளவுக்கு பறந்து விரிந்து கிடக்கும் மலைப்பகுதி முழுதும் தேயிலை தோட்டம் தான்.
சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமாக இருந்த அந்த மலைப்பகுதியில், 100 ஆண்டுகளுக்கு முன், காஃபி, தேயிலை, ஏலக்காய், கொய்னா, சின்கோனா உள்ளிட்டவற்றை விளைவிப்பதற்காக, 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்தது, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என, ஐந்து எஸ்டேட்களை உள்ளடக்கிய, அந்தப் பகுதியில், தேயிலை தொழிற்சாலைகளும் அமைக்கப்பட்டன.
இந்த எஸ்டேட்களில் வேலை பார்க்க, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் மாஞ்சோலைக்கு வந்தனர். கேரளாவிலிருந்தும் ஏராளமானோர் வந்து பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
சரியான அளவில், காஃபி, ஏலக்காய், சின்கோனா, கொய்னா விளைச்சல் இல்லாததால், கொஞ்சம் கொஞ்சமாக அவை பயிரிடப்படுவது நிறுத்தப்பட்டது. மாஞ்சோலை மலை முழுதும் தேயிலை மட்டுமே பயிரிடப்பட்டது.
ஒரு கட்டத்தில் தேயிலை விளைச்சலும் குறைய, மாஞ்சோலை, ஊத்து உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்த தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தற்போது நாலுமுக்கு பகுதியில் மட்டுமே தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது.அந்த தேயிலை தொழிற்சாலையும், சில மாதங்களில் மூடப்பட உள்ளது. எனவே, ஒட்டு மொத்த மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டையும் மூடி, அதை வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணியில், பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
இதற்காக, தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தினர், பணிக் குழுவினருடனும் நிறுவனத்தினர் பேசியுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில், தங்களின் முடிவு குறித்த பொது அறிவிப்பு வெளியிட உள்ளனர்.
காலம் காலமாக மாஞ்சோலை மலையை மட்டுமே நம்பிப் பிழைப்பு நடத்தி வந்த, 7,000 பேர் அடுத்து என்ன செய்வது எனப், புரியாமல் தத்தளிக்கின்றனர்.
ம.தி.மு.க.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் அரசு அமல்ராஜுடன், மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
ம.தி.மு.க.,வை சேர்ந்த வழக்கறிஞர் அரசு அமல்ராஜிடம் பேசிய போது "பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற பி.பி.டி.சி., நிறுவனம் 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதியில், 100 ஆண்டு காலத்துக்கு சிங்கம்பட்டி ஜமீனுடன் ஒப்பந்தம் போட்டது. அதன் பின், அந்த நிறுவனக் கட்டுப்பாட்டில் தான் இன்று வரை மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் உள்ளன. எதிர் வரும் 2028 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்.11 ஆம் தேதியில், இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வர வேண்டும். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்ட மன்னர் மானிய ஒழிப்பு சட்டத்துக்கு பின், மாஞ்சோலைத் தோட்டம் அரசுடைமையாக்கப்பட்டது.
ஆனால், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை யாரும் எதுவும் செய்யவில்லை. அந்த ஒப்பந்தம் அப்படியே தொடர்ந்ததால், பி.பி.டி.சி., நிறுவனம் தன் சுய கட்டுப்பாட்டில் தேயிலைத் தோட்டத்தை வைத்து, தேயிலை உற்பத்தியைத் தொடர்ந்தது. மாஞ்சோலை பகுதி அரசுடைமையானதால், அந்தப்பகுதி முழுதும் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
தேயிலை உற்பத்தி குறைந்து விட்டதோடு, தொடர்ந்து நஷ்டத்தையும் எதிர்கொண்டு வருவதால், ஒப்பந்த காலத்துக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே, மாஞ்சோலையை விட்டு வெளியேற பி.பி.டி.சி., நிறுவனம் முடிவெடுத்துள்ளது. எஸ்டேட்டில் பணியிலிருக்கும் 7,000 ம் பேருக்கு குறைந்தபட்ச இழப்பீட்டைக் கொடுத்து விட்டு, வெளியேறும் திட்டத்தோடு, தொழிற்சங்கங்களோடு பேசி பேச்சு வார்த்தையை முடித்து விட்டது.
இன்னும் இரண்டு நாட்களில் பொது அறிவிப்பு வெளியாக உள்ளது. எஸ்டேட்களில் பணிபுரிந்து வரும், 7,000 பேரும் குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகையை வைத்து, வேறு எங்காவது பிழைத்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு, கல்லிடைக்குறிச்சி, மானுார் அல்லது அம்பாசமுத்திரத்தில் வீடு கட்ட, அரசு தரப்பில் 4 சென்ட் நிலம் கொடுக்க வேண்டும். அதற்காகத் தான், மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்திக்க இருக்கிறோம்". என்றார். இவர் மாஞ்சோலையில் நடந்த கலவரத்தின் போது, மக்களுக்காகப் பாடுபட்டவர்.ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல் இங்கு தனிப்பட்ட யாரும் ஒரு சதுர அடி கூட இடம்கூட வாங்க முடியாது. முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் கவனத்துடன் பராமரிக்கப்படுகிறது. அதனாலேயே இயற்கை எழிலை உள்ளவாறு காணமுடிகிறது. பெரும்பாலும் இந்தத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வோருக்கு குறைந்த பட்ச ஊதியமே வழங்கப்பட்டு வந்த நிலையில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் பல போராட்டங்களுக்குப் பிறகு தற்போது 138 ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டது.
கருத்துகள்