தேவர் திருமகன் 1956 ஆம் ஆண்டு பேசியதாக கருத்துக் கூறிய பாஜக மாநிலத் தலைவர் மீது தனிநபர் கோரிக்கையில் வழக்கு
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் 1956 ஆம் ஆண்டில் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர், அறிஞர் அண்ணாதுரையைப் பார்த்து கடவுள் பக்தி இல்லாதவர்கள் கடவுள் பக்தியுடன் இருப்பவர்களைத் தவறாகப் பேசினால் மதுரை மீனாட்சி அம்மனுக்கு இரத்தத்தால் அபிஷேகம் செய்யப்படுமென எச்சரிக்கை விடுத்தார் எனவும், அதனால் பி.டி.ராஜனும் அறிஞர் அண்ணாதுரையும் மன்னிப்புக் கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர் எனத் தெரிவித்திருந்தாராம். ஆனால் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவ்வாறு கூறவில்லை என ஏதோ சில பத்திரிகைகள்
தெரிவித்துள்ளன. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய தகவலுக்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும். பாஜக தலைவர் அண்ணாமலை கட்டுக் கதைகளைக் கூறி மக்களிடம் கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேலம் பியூஷ் மனுஷ் கோரியிருந்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு குறித்து அவருக்குத் தெரிந்த சில ஆதாரங்களையும் அதனுடன் சமர்ப்பித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக சேலம் நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் யுவராஜ் உத்தரவுப் படி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது இரண்டு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கலானது, தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்வதற்கான அனுமதி கோரி, மாநில ஆளுநருக்குப் பரிந்துரை செய்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குத் தொடர தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குத் தொடர அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டதன் நகல் சேலம் நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். அதன் பின்னர் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வெறுப்பைப் பரப்பி இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்த முயற்சி உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் ஐபிசி பிரிவு 153A இன் படி ஒரு தனி நபர் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால், நீதிமன்றத்தின் விசாரணைக்கு, சிஆர்பிசியின் பிரிவு 196 இன் கீழ் மாநில அரசின் அனுமதி கட்டாயம் என்பதால் அரசு, தேவையான அனுமதியை வழங்கியுள்ளது. . வழக்கைத் தொடர்ந்தவர் தான் இந்த வழக்கில் இனி நிரூபிக்க வேண்டும். பேச்சுரிமை கருத்து சுதந்திரம் எல்லாம் இப்போது எப்படி வேண்டுமானாலும் வழக்குத் தொடர்வது அரசியல் தான் காரணமாகிறது. பழைய வரலாறு பேசுவதும் குற்றம் போல பார்க்கப் படுகிறது.
கருத்துகள்